0,00 INR

No products in the cart.

உங்கள் குரல்

லகின் எந்த பகுதியில் புத்தகக் கண்காட்சி நடந்தாலும் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நிச்சயமாக அக் கண்காட்சியில் இடம்பெறும். நான் பல கண்காட்சியில் கல்கியின் படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி இருக்கிறேன். இதுநாள் வரை பொக்கிஷமாக பேணி காத்து வருகின்றேன்.
 – து.சேரன், ஆலங்குளம்

ந்தியா-  காஷ்மீர் பிரச்னை என்பது ‘ஒரு தொடர் கதை’ என்ற கவர் ஸ்டோரி படித்ததும் மனம் அழுதது. மனிதாபிமானமுள்ள யாருக்குமே இதைப் படிக்கும்போது நிச்சயம் கண்ணில் நீர் வரத்தான் செய்யும். அரசியல் பார்வைகள் எப்படி இருந்தாலும் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்காமல் “என்று தணியும் இந்த கொலைவெறி” என்ற மக்களின் மனதில் எழும் கேள்விக்கு  “பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டிய “கல்கி” இதழின் “கவர் ஸ்டோரிக்கு” பாராட்டுக்கள்.                         –பிரகதாநவநீதன், மதுரை

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் தொடர்பான லதா அவர்களின் பதில் எங்களுக்கு நல்லபுரிதலை தந்தது.                                                               –பிரபு ராஜ், வந்தவாசி

’பட்டாசு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது’ என்றாலும் அதை வாழ்வாதாரமாக கொண்டு பலர் இருக்கின்றனர் என்று கட்டுரை படித்ததும் புரிந்தது. பெட்டி செய்தியாக புது வரவு பட்டாசு வகைகளைப் பற்றி படித்ததும் பெரியவர்களுக்கே வெடிக்க ஆசை ஏற்படுகிறது.சிறியவர்கள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்பான பசுமை வெடிகளை வெடித்து பண்டிகையை கொண்டாட வேண்டியது அவசியம்.
  – மஹாலட்சுமி சுப்ரமணியன், ஆதம்பாக்கம்

’கொஞ்சம் சிரிங்க பாஸ்’…ஹி..ஹி…நிறையவே சிரிக்க வைத்து விட்டது.
– வி.கே.லட்சுமி நாராயணன், புதுக்கோட்டை

 “இதுதான் என் சொர்க்கம்” சிறுகதை படித்ததும் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் பெருகியது. சிவகாமி அம்மாள் தனக்கு அடைக்கலம் கொடுத்த  ’அடைக்கலம்’ என்ற இல்லத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதை நினைக்கும்போது உண்மையிலேயே அவர் மனதில் எங்கேயோ உயரத்தில் ஏறி விட்டார்.  ராம்கி மருத்துவராக இருந்தாலும் அம்மா சொல்வதில் உள்ள உண்மையை புரிந்துகொண்டு அவர் கொடுத்த அன்பளிப்பான அந்த ஆதரவற்ற சிறுவர்கள் வரைந்த ஓவிய புத்தகத்தை பொக்கிஷமாக எடுத்துக் கொண்டது மிகவும் அருமையாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. அருமையான சிறுகதை.
 – ராதிகா, மதுரை

 “அது ஒரு கனாக் காலம்” என்ற திரு ஜெயராமன் ரகுநாதன் அவர்களின் “லவுட் ஸ்பீக்கரில் ஒரு பாட்டு” பற்றிப் படித்ததும் சிறுவயதில் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு ஒலிக்கும் ஸ்பீக்கரில் பாட்டு கேட்ட நினைவுகள் வந்து சென்றன. உண்மைதான்… முன்பு ரேடியோ வாங்க முடியாதவர்கள்  பலராலும் ரசிக்கப்பட்ட லவுட் ஸ்பீக்கர்  நாளில் இருந்து நாம் வெகு தொலைவில் வந்து விட்டோம்.  “மனிதநேயத்திலும்  ஒற்றுமையிலும் நாம் இன்னும் மனதளவில் முன்னேறி விட்டோமா?” என்ற ஒரு கேள்வியை நம் மனதுக்குள் எழுப்ப வைத்த அருமையான பக்கங்கள்.
 – உஷாமுத்துராமன், திருநகர்

1 COMMENT

  1. கொஞ்சம் சிரிங்க பாஸ் பின்னூட்டம் இட்ட நான்
    எப்போது புதுக்கோட்டைக்கு போனேன் . போருர் ,
    சென்னையில்தான் இருக்கிறேன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

0
உங்கள் குரல்    மணிரத்தினத்தின் “அலைபாயுதே” படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு “டோபி”யை பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும். - ஜானகி பரந்தாமன், ...

ஜாதியைச் சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

0
உங்கள் குரல்    ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா்  பிறந்தநாளை  முன்னிட்டு  கலைஞா்  படம் அட்டைப்படமாக  அலங்காிக்கும்  என நினைத்தேன். இருப்பினும்  சொல்லாமல்  சொல்லும் விதமாய் பிரதமா் மோடி - முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு ...

தர்மத்தில் பேரம் பார்க்கக்கூடாது

2
முதலில் முகம் தெரியாதவர்களுக்கு  உதவுதல் கூடாது . எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்பதை கடைசிப் பக்கத்தில்  படித்து வாசகர்களாகிய நாங்கள் உஷாராக இருந்துக் கொள்கிறோம். - மதுரை குழந்தைவேலு, சென்னை - 600...

புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.

2
தலையங்கத்தில் “முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு கதறும் யானை” என்று தமிழக ஜவுளித்துறையை ஒப்பிட்டது கருத்து நோக்கிலும் சுவை நோக்கிலும் அருமை...அருமை ! - நெல்லை குரலோன் நூல் விலை ஏறும் போது , துணி...