
"உன் மாமனார் உன்னோட பிறந்தநாள் பரிசாக கார் வாங்கித் தந்தும் ஏன் வெளியே எடுப்பதே இல்லை?"
"அட, பெட்ரோல் வாங்கித் தந்தாலும் பரவாயில்லை… காரை நான் வாங்கியிருப்பனே?"
– சி.ஆர். ஹரிஹரன், கேரளா
"அப்படி என்னய்யா நியூஸ் போட்டிருக்காங்க? படிச்சிட்டு சிரிப்பா சிரிக்கிறே…"
"2026ல் தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும்னு ஒரு தலைவர் பேசியிருக்கார்."
– ராஜிராதா, பெங்களூரு
"தலைவருக்கு அஜீரணக் கோளாறு எப்படி வந்துச்சு? நேத்து ஏதாவது விருந்துக்குப் போனாரா?"
"இல்லை… உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போனாராம்."
– நிலா, திருச்சி
"தலைவர் வாக்குறுதிதான் கொடுத்தாச்சே… அப்புறம் என்ன கேட்கறீங்க?"
"கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்துவேன்னு உறுதிமொழி எழுதி தரணுமாம்."
– எஸ்.மோகன், கோவில்பட்டி
"சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீயே… அப்புறம் எப்படி இவ்ளோ சொத்து சேர்த்தே?"
"அதான் சொன்னேனே? லாட்டரி அடிக்கறேன்னு. ஆல் கேரளா டிஸ்ட்ரிபியூசன் சார்."
– சென்னிமலை சி.பி. செந்தில்குமார், ஈரோடு
பெண் பார்க்கும் இடத்தில்:
"பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நம்பளையும் மாப்பிள்ளையையும் பிடிச்சுப்போச்சு போலிருக்கு…"
"எப்படிச் சொல்றீங்க?"
"சொஜ்ஜி கிண்டுற வாசம் வருதே!" – வி.ரேவதி, தஞ்சை