0,00 INR

No products in the cart.

இறைவனிடம் கொள்ளும் அன்பே நித்தியமானது

அருள்வாக்கு

சுவாமி ராமதாஸர்

 

கிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது.

ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும் நேசிக்கிறாள். அவனுக்காக
உயிரையே கொடுக்கவும் தயாராக இருக்கிறாள். அவனை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் அவளால் அவனை மணந்துகொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கைவிட்டுவிடுகிறான்.

அந்தப் பெண் இன்னொருவருடைய மனைவியாகிவிடுகிறாள். இப்போது அவளால் அவனைப் பற்றி நினைத்து மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அந்த எண்ணமே வெறுப்பாக இருக்கிறது. அவன் கண்ணிலேயே படக் கூடாது என்று நினைக்கிறாள். முன்பு தான் அவனைப் பற்றி நினைத்ததெல்லாம் தவறு என்று எண்ணுகிறாள்.

அதே வாலிபனும் அதே பெண்ணுமாக இருந்தும்கூட அன்று இன்ப நினைவுகளாக இருந்தது, இன்று துன்ப நினைவுகளாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்?

அவனோ, அவளோ மாறாவிட்டாலும் அந்த உணர்வு நிலையானதாக இல்லாததால் மாறிவிட்டது. அந்த ஆனந்தம் நிலையாக இருந்திருந்தால் மாறி இருக்காது. இறைவனிடம் கொள்ளும் அன்பு நித்தியமானது. அதனால் கிடைக்கும் ஆனந்தமும் நித்தியானந்தம்தான். இப்படி நித்திய மானதாக இருப்பதனாலேயே அதன் தூய்மையும் பெருமையும் மிக உயர்ந்தது.

தெய்வீகமான அந்த உணர்வு மனிதர்களுடைய எல்லைகளையும் மனித வாழ்வையும் கடந்தது. அதில் பிரதிபலனை யாரும் எதிர்பார்ப்பதில்லை. “எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட்டேன்” என்ற தியாக உணர்வே அதில் நிறைந்திருக்கிறது. தியாகேசுவரனான இறைவன் அதையே காணிக்கையாக ஏற்றுக் கொள்ளுகிறான்.

 

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...