
இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில் ரிசர் வங்கி 20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது. இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது.
ஃபிஷிங் இணைப்புகள்
இந்த முறையில், நிதி மோசடியில், போலியான மூன்றாம் தரப்பு வலைதளத்தை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்படும் வலைத் தளம் பிரபலமான ஒரு வங்கி அல்லது பிரபலமான மின் வணிக நிறுவனங்களின் வலைதளத்தின் சாயலாக இருக்கக்கூடும். ஒரு எழுத்து மாரியிருக்கும். அவசரத்தில் படிக்கும்போது அவை அந்த பிரபல வங்கியுடையது போலவே தோன்றும்.
அப்படி உருவாக்கப்படும் வலைதளத்தின் இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பி, வங்கிகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களை கணக்கு எண், பாஸ்வேர்ட், பின் நம்பர் போன்றவற்றை வாடிக்கையாளரிடம் பெறுவார்கள்.
இப்படி நடக்கும் மோசடிகளிலிருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது?
திரைப் பகிர்வு செயலி / தொலைநிலை தொழில்நுட்பம் மோசடிகள் (Frauds using screen sharing app / Remote access)
நிதி மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளரை ஏமாற்றி, போலியான வலைதள இணைப்புகள் கொண்டு, திரைப் பகிர்வு செயலியை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுவார்கள். பிறகு திரைப் பகிர்வு செயலி மூலம் வாடிக்கையாளர்களின் கைப்பேசி அல்லது மடிக்கணினி திரை பகிர்வு செய்யப்பட்டு, அதில் பகிரப்படும் நிதி பரிவர்த்தனை தகவல்கள் திருடப்படும் .
இந்த நிதி மோசடியிலிருத்து எப்படி தப்புவது?
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சாதனங்களில் ஏதேனும் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொள்ள, திரைப் பகிர்வு செயலியை பதிவிறக்கம் செய்ய கேட்டுக்கொள்ளப்படும் பட்சத்தில், இணையதள வங்கி பரிவர்த்தனை தகவலை, சாதனங்களில் உள்ள மற்ற பரிவர்த்தனை செயலிகளிலிருந்து முதலில் நீக்க வேண்டும்.
ஏடிஎம் கார்டு ஸ்கிம்மிங் (ATM card skimming)
நிதி மோசடி செய்பவர்கள் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் (skimming) சாதனங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடுவர். அப்படி திருடப்படும் தகவல்கள் மூலம், போலியான ஏடிஎம் கார்டுகள் கொண்டு நிதி மோசடி நடக்கும், அல்லது வாடிக்கையாளர் பயன்படுத்தக்கூடிய ஏடிஎம் இயந்திரங்களின் அருகே மற்றொரு வாடிக்கையாளர்கள் போல் நின்று மோசடியாளர்கள், ஏடிஎம் கடவுச்சொற்களை கண்காணித்து பிறகு நிதி மோசடியில் ஈடுபடுவார்கள்.
இதிலிருந்து காத்துக்கொள்ள
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக ஏதேனும் இயந்திரம் அதில் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். கார்டு சொருகுமிடத்தில் வேறு எதுவுமில்லை என்பதை கையால் தடவியே உறுதி செய்ய முடியும். எதேனும் மாறுதலாக உணர்ந்தால் அந்த எடிஎம் மை பயன் படுத்தாதீர்கள்.
QR குறியீடு ஸ்கேன் மூலம் நிதி மோசடி (Scam through QR code scan)
நிதி மோசடி ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை ஏதோ ஒரு வகைகளில் QR குறியீடு ஸ்கேனை பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்வார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.
தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்:
எல்லாவற்றையும் விட முக்கியமானது. உங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்ட்களில் ஏதேனும் மோசடி நடந்துவிட்டால் உடனே வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். இதற்காக இப்போது 24X7 இணைப்புகள் இணைய தள தொடர்புகள் வங்கிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சைபர் கிரைம் போலிஸில் புகார் கொடுங்கள். இப்போது இதை இணையம் வழியாகவே பதிவு செய்யலாம்.