ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published on

"தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?"

"ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?"

"நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!"

– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா

"டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம் தலைவர் என்ன கேட்கிறார்?"

"போஸ்டிங் எந்த ஆஸ்பத்திரியில் தருவீர்கள் என்று கேட்கிறார்."

– சி.ஶ்ரீரங்கம், திருச்சி

"அரசியல்வாதியைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டது தப்பா போச்சு."

"ஏன்?"

"வெறும் டோக்கன் மட்டும் கொடுத்துட்டு மொய் பணத்தை அப்புறம் வந்து வாங்கிக்கோன்னு சொல்லிட்டாரு…"

– இரா.அருண்குமார், புதுச்சேரி

இன்ஸ்பெக்டர்: திருட்டுத் தொழிலை  விட்டுடுய்யா, உனக்கு ஒரு வேலை சிபாரிசு செய்றேன்."

திருடன் : சுயதொழில் செய்றவனை அடிமை உத்தியோகம் பார்க்கச் சொல்றீங்களே ஐயா."

– சி.ஶ்ரீரங்கம், திருவெறும்பூர்

"என் மகளோட நடிப்பைப் பார்த்து யாரோ கண்ணு வச்சிட்டாங்க டாக்டர்… திடீர்னு பயந்த  மாதிரி கத்தறா டாக்டர்..?"

"கண்ணாடி முன்னாடி போய் மேக்அப் போடாம நின்னாங்களா..?"

– வி.ரேவதி, தஞ்சை

"பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தால் வாக்குறுதிகளை அள்ளி வீசவேண்டாம்னு தலைவர் சொல்லிவிட்டாராமே!"

"ஆமாங்க, அவங்க ஞாபகம் வச்சுக்கிட்டு தேர்தல் சமயத்தில் கவுத்துடுவாங்களாம்."

– சி.ஶ்ரீரங்கம், திருவெறும்பூர்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com