0,00 INR

No products in the cart.

கலைஞர் நினைவிடத்தில் கோபுரச்சின்னம்

 

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் வைத்து மரியாதை செலுத்திய இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
– இரா. அமிர்தவர்ஷினி,  புதுச்சேரி – 605001

! இந்து மத எண்டோன்மெட் போர்டு என்பதைத் தனி அரசுத்துறையாக அங்கீகரித்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசின் இலச்சினையாக இருந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் கோயிலை மாற்றாமல் கோயில் உருவத்தின் பெருமை காத்தவர் கலைஞர்.  ஆனால், கோயில்களை ஏற்காத கலைஞரின் நினைவிடத்தில் இத்தகைய அலங்காரம் அனாவசியம். மேலும் மானிய கோரிக்கையைப் பேரவையில்  சமர்ப்பிப்பதும் விவாதிப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்துவரும் ஒரு நடைமுறை. அதற்கேன் இத்தனை ஆர்ப்பாட்டம் விளம்பரம் எல்லாம்?

“சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?
– கண்ணபிரான், கோவை

! பெயர் அறிந்த  பழைய சாலைகளுக்கு  அதை மாற்றி தலைவர்கள் பெயரை  வைப்பதன் மூலம் அவர்கள் கெளரவம் உயரப்போவதில்லை.  பல்கலைக்கழகம், கல்லூரி, நூலகம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்டுப் பெயரிட்டால் அது நிலைத்து நிற்க வாய்ப்புள்ளது. மேலும் மக்கள் சுருக்கி  ECR யை MKR  என்று அழைப்பார்கள். இந்தியாவின் பல நகரங்களில் MG  ரோட் என்றழைக்கப்படும் சாலைகள் அண்ணலின் நினைவாக மகாத்மா காந்தி ரோட் என்று பெயரிடப்பட்டவை.

? ரிசர்வ் வங்கி கவர்னர் திடீரென்று வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை  அதிகரித்து அறிவித்திருக்கிறாரே?
– ஷாகுல் ஹமீது, திருச்சி

! கடந்த வாரம் ஒரு நாள்  மதியம் 2 மணிக்கு திடீரென தொலைக்காட்சியில் தோன்றிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார்.

சென்ற மாதம் வரை தேனாறு பாலாறு ஓடுகிறது, மும்மாரி பொழிகிறது, ஆகவே, ‘ரிசர்வ் வங்கி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று பேசி, ‘இவர் வேற்று கிரகவாசியோ’ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியவர் கவர்னர் சக்திகாந்த தாஸ்.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் கடைகளை மூடிக் கொண்டிருக்கின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துக் கொண்டே வருவதால் ‘நெருக்கடியில் மாட்டிக் கொள்வோமோ’ என்ற அச்சம்தான் ரிசர்வ் வங்கி கவர்னரின் இந்த அவசர அறிவிப்பு.

விலைவாசி நாளும் எகிறிக் கொண்டிருக்கும் உண்மையை வெற்று அறிவிப்புகளால் மறைத்துவிட முடியுமா? ரெப்போ ரேட் 0.4% அதிகரித்திருப்பதால் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பெறும் கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இந்த அறிவிப்பு முதல் தவணை. மேலும் மேலும் வட்டி விகித அறிவிப்பு வந்துக்கொண்டே இருக்கும். இந்த அரசு பொருளாதார வீழ்ச்சியுடன்  நடத்தும் போரில் தோற்றுக்கொண்டிருக்கிறது.

 “வட மாநிலங்களிலிருந்து பலர் பானி பூரி விற்கச் சென்னைக்கு வருகின்றனர் !” என்று அமைச்சர் பொன்முடி விமர்சித்ததைப் பற்றி…
– இரா. அருண்குமார், வாணரப்பேட்டைபுதுச்சேரி – 605001

! அது ஒரு காலம். இப்போது  தமிழகத்தின் எந்த தொழில்களிலும்  உணவு விடுதி, கட்டடத்தொழில், விற்பனை நிலையங்கள்  என எல்லாவற்றிலும் அவர்கள்  நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் தொழிலை மட்டுமில்லை, தமிழையும் விரைவாக கற்கிறார்கள். கொரோனா காலத்தில் தங்கள் ஊர்களுக்கு சென்றவர்கள்  பணிகள் கிடைக்கும் நம்பிக்கையுடன் மேலும் சில உறவினர்களுடன் இப்போது  திரும்பியிருக்கிறார்கள். அமைச்சர் அறிந்துக்கொள்ள வேண்டியது, தமிழகத்தில் பணிகள் கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் இவர்களை விரும்புகிறார்கள்.  உழைக்க விரும்பாத தமிழ் பணியாளர்கள்  ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”  – என்ற சொற்றொடர் எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது?
– மதுரை குழந்தைவேலு,  சென்னை

! கம்பன் காவியத்தில் சொன்னது  தவறிழைத்த வேந்தனின் கதறல். ஆனால் இந்த வேந்தன் தெரிந்தே செய்த தவற்றிலிருந்து தப்பிக்க, தன் அதிகாரத்தை ஆட்சியை காப்பாற்றத்தான் பதறுகிறார்.  ராவணனின் கடனை இராமன் மன்னித்து தள்ளுபடி செய்ததுபோல்  இன்று இலங்கைக்குக் கடனுதவி செய்த நாடுகள் தள்ளுபடி செய்யத்தயாராகயில்லை.

‘நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் விசாரணை நடத்த வேண்டும்’ என டெல்லியில் நடந்த முதல் அமைச்சர்கள், உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம்

! தமிழ் நாட்டில் கீழமைகோர்ட்களில் இது இப்போது நடைமுறையில் இருக்கிறது. தீர்ப்புகள் கூட தமிழிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் இது சாத்தியமில்லை. மேலும் இந்த நீதிமன்றங்களின் தீர்ப்புகள்   வேறு மாநிலங்களிலும் தீர்ப்பு வழங்க / வாதாடப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நிலையில் அனைவரும் அறிந்த மொழியில்தான் இருக்க முடியும். 

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததைக் கண்டு திராவிட மாடல் அரசு பதறுவது ஏன்…?
ச. ராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம்

! ஒரு செய்தி தவறாகப் பரப்பப்பட்டதற்கான சிறந்த உதாரணம்  இது. அந்த  உறுதி மொழி சமஸ்கிருதத்தில் எடுக்கப்படவில்லை. ஒரு சமஸ்கிருத உறுதி மொழியின் ஆங்கிலமொழி பெயர்ப்பு.  மருத்துவக் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது.   வழக்கமாக எடுக்கும்  உறுதி மொழி முதலில் லத்தின் மொழியில் எழுதப்பட்டது.  பல ஆண்டுகளாக அதன் ஆங்கில வாசகம் தான் உலகெங்கும் மருத்துவர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.  இந்த ஆண்டு சுற்றறிக்கையில்  அந்த உறுதி மொழி  அல்லது இந்த உறுதி மொழியை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இதைக் கல்லூரி முதல்வர் எடுக்கப்போகும் உறுதி மொழி எது  என்று  கவனிக்காமல்  உறுதி மொழி எடுக்கும் விழாவை ஒரு சம்பிரதாய சடங்காகக் கருதிவிட்டதின் விளைவு தான் இது.  ஹிப்போகிர்டிஸ் உறுதி மொழி அழகாக தமிழாக்கம் செய்யப்பட்டு மருத்துவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உறுதி மொழி என்பது நமக்குத் தெரிந்த மொழியில் எடுப்பதுதானே சிறப்பு.?  அடுத்த ஆண்டாவது  செய்யட்டும்.

“எனக்குப் பதவி ஆசையில்லை. மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பாமக ஆட்சியைப் பிடிக்கும்!” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாரே, அவரது கனவு நிறைவேறுமா ?
– எஸ். ராமதாஸ், புதுச்சேரி 

! பதவி ஆசையில்லாதவருக்கு  யார் ஆட்சியைப் பிடித்தால் என்ன?

பல்லக்கு தூக்குவதில் என்ன பிரச்னை?
– மகேஸ்வரி, திண்டுக்கல்

! பிரச்னை  தூக்குவதில் இல்லை.  சொல்லப்போனால் இதைத் தொழிலாக செய்யும் சில குடும்பங்கள் கோயில்களையும், மடங்களையும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது எளிதான பணியும் அல்ல. உடல் வலுவும்  தூக்குவது, இறக்குவது, அலங்கார நடைபோடுவது  பயணத்தின் போதே மற்றவர் தோளுக்கு மாற்றுவது போன்ற பல விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள். அடுத்த முறை திருப்பதி கோயில் உற்சவம் ஒளிபரப்பும் போது பாருங்கள். பிரச்னை அதனைச் சமூக பார்வையுடன் அணுகியதால் எழுந்தது. மடாதிபதிகள் அந்தப் பார்வையுடன் இதை அணுகி தாங்களாகவே இந்த பழக்கத்தை கைவிட முன் வரவேண்டும். உதாரணம், காஞ்சி மஹா பெரியவர்  நடந்தே இந்த தேசத்தின் பாதியைக் கடந்தவர்.  கைத்தடியோ உடன் வருபவரோ வேண்டாம் என்று சைக்கிள் ரிக்‌ஷாவைப் பிடித்தே நடந்தவர்.

அபாரமான மனித குல வளர்ச்சி சூழலில், உலக அமைதி மட்டும் ஏன்  சாத்தியம் இல்லாமல் போகிறது?
– நெல்லை குரலோன்,  பொட்டல்புதூர்

! வளர்ச்சி என்பது  ஒரு தொடரும் விஞ்ஞான விளைவு.  விஞ்ஞானத்தின் விளைவுகள் வெற்றிகளால் மதிப்பிடப்படுகிறது.

எந்த ஒரு வெற்றியும் எல்லோராலும் ஏற்கப்படுவதில்லை. மேலும் எது மனித குல வளர்ச்சி என்பதை வரையறுக்க முடியுமா? வறுமை ஒழிப்பு என்பதை வளர்ச்சியின் அடையாளமாகக்  கொண்ட நாடும் , சில வினாடிகளில் எந்த ஒரு நாட்டையும் அழித்துவிடக்கூடிய ஆயுதங்களை  உற்பத்தி செய்யும் நாடும் கற்பனை கோடுகளான எல்லைகளால் பிரிந்திருக்கும் இந்த உலகில்  அமைதி எப்படிச் சாத்தியமாகும். அமைதியின்மை என்பது உலகமுள்ளவும் இருக்கும்.

? உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும்?
– க.அருச்சுனன், செங்கல்பட்டு

! இப்போதே அவர்  கட்சிக்காரர்களால், அமைச்சர்களால் அப்படித்தானே மதிக்கப்படுகிறார்.    முதல்வருடன் அவர் படம் இல்லாத ஒரு கட்சி விளம்பரத்தை காட்டுங்கள் பார்ப்போம்.

காவல்நிலையத்தில் மரணம் என்பதற்கு மாற்றல் ஒரு தண்டனையா?
– சம்பத் குமாரி, சென்னை

! இட மாற்றம், பணியிடை நீக்கம் போன்றவை  குற்றத்திற்கான தண்டனைகள் இல்லை. நேர்மையான விசாரணைகள் நடக்கமுடியாமல் குற்றமிழைத்தவர்கள் தடுத்துவிடக் கூடாது என்பதற்காகச் செய்யப்படுபவை.

? திருச்சி சிவாவின் மகன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளாரே?!
– சண்முகம், திருநகர், மதுரை

! இனி, சிவா ‘சிவா ஜி’ என்றும் சூர்யா  ‘சூர்யா ஜி’ என்றும் அழைக்கப்படுவார்கள்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...