விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்
Published on

உங்கள் குரல்

ரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர், ஆசிரியர், சமூகம் என்று 360 டிகிரி பார்வையில், அனைத்துப் பிரிவினரின் தளத்தில் நின்று, அதிநுட்ப நேர்த்தியில், துல்லிய லயத்தில் அலசி ஆராய்ந்து எழுதிய கல்கியின் தலையங்கம் படித்ததும், எழுந்து நின்று கைதட்டி பாராட்டி,கௌரவிக்க தோன்றியது நிஜம்.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

"கல்கி"யில் வந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்பட விமர்சனம் நெத்தியடி.  பல மைனஸ் பாயிண்டுகள் இருப்பதை சுட்டிக்காட்டி விமர்சனத்தை கொடுத்த கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.  நம்பமுடியாத கதையை நம்ப வைத்த நயன் மற்றும் சமந்தாவுடன் எடுத்த இயக்குனரின் தைரியத்திற்கு ஈடு-இணையே இல்லை.
– ராதிகா, மதுரை

தெலுங்கு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நடத்தையில் 'ஊனம்' என்ற ராஜி ரகுநாதன் அவர்கள் மொழிபெயர்த்த கதை மிகவும் அருமை.  கோட்டீஸ்வர ராவ் துன்புறுத்தப்பட்ட செய்தியை படித்ததும் வருத்தமாக இருந்தாலும் அவரிடம் மன்னிப்பு கூட கேட்காமல் அனைவரும் வியந்து நின்றது அதைவிட அதிர்ச்சியாக இருந்தது. ரசிக்க வைத்த அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

 ல முக்கிய விஷயங்களை வெளிப்படையாகவும் சுவாரசியமாகவும் பேசுகிறது‌‌ உலகக் குடிமகன் தொடர். அவரது  அந்த நாள் ஞாபகங்களில் எனக்குப் பங்கிருப்பது போன்ற பிரமை. வானொலியில் பாமரர்க்கான அறிவியல் என்ற எனக்குப் பிடித்த விஷயத்தால் வந்த வரம்.
– விஜய திருவேங்கடம், (அகில இந்திய வானொலியின்  மேனாள் நிலைய இயக்குநர்)

'நம் ஆசிரியர் நமக்கு உதவப் போகிறார் ' என்கிற எண்ணத்தை  மாணவர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும். இதற்காக 'தங்களது ஆசிரியர்கள் தங்களுக்கு எப்படி கற்பித்தார்கள் என்பதை ஆசிரியர்கள் நினைத்தாலே 'போதும் என்று தலையங்கத்தில் 'கல்கி' எழுதியுள்ளதை ஆசிரியர்கள், மாணவர்கள் படித்தாலே இருவர்களுக்கும் புரிதல் ஏற்பட்டு , ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகள் என்கிற அன்பும் அக்கறையும் ஏற்படுவதோடு,  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதையும், பக்தியும் ஏற்படுவது திண்ணம்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ன் புகழ் பாட சட்டப்பேரவை சிறந்த இடம் இல்லை, அதனால் அங்கு மக்கள் பிரச்னை தீர்ப்பது போன்ற நிலைகள் பிரதானமாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு என்றும் இருக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு ஆகும் அதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கட்டும்.
– சி. கார்த்திகேயன், சாத்தூர்.

ருளுரையில் சுவாமி மகேஷானந்தகிரி 'வாழும் கலையை இந்து மதம் எப்படி விளக்குகிறது' என்கிற புரிதலை சொன்னதோடு  அதை ,திசை மாறாது நம்வழியில் சென்று ' வாழும் கலையாக ஏற்றுப்  பயணிப்போம்.
– கண்ணன், நெல்லை

'நாளைய தலைமுறையின் சுஜாதா' என்று ஜெயராமன் ரகுநாதன் கட்டுரை நூற்றுக்கு நூறு சரி. அவரது அன்றைய எழுத்தில் இன்றைய நடப்புகளை தீர்க்கதரிசியாக எழுதியவர் இன்றைய கணினி பற்றியும், மற்றும் அடுத்த தலைமுறை சென்னை சாலைகள் மேல் மேம்பாலம்  அமைத்து ரயில், பஸ் ஓடும்  என்று இன்று நடப்பதை அன்றே சொல்லியவர்.
-மதுரை குழந்தைவேலு,  சென்னை

ட்டைப்படத்தைப் பார்த்ததும் ஏதோ  அலசல் கட்டுரையாகயிருக்கும் எனத் தேடினேன்,  தாரசரின் குறும்பு எனப் புரிந்தது. சரி போகட்டும் விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்.
– ஜோஷ், அயன்புரம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com