0,00 INR

No products in the cart.

பிரம்மன் மூலமாக உதித்ததால் பிராமி

முகநூல் பக்கம்

 

டுத்த நாள் காலை கோயில் தரிசனம் செய்ய வேண்டும். அதற்காக, பூ வாங்க மாலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் சென்றேன். வழக்கமாக வாங்கும் பூக்கார அம்மா அப்போதுதான் வந்திருந்தார். உதிரிப்பூக்களை தொடுத்து தருவதாக கூறினார். அரை மணி நேரம் ஆகும் என தோன்றியது. அதற்குள், ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம் என எண்ணினேன்‌.

அருகில் தபால் நிலையம். “நொடிப்பொழுதில் பணம் பரிமாற்றம் இந்தியாவிற்குள் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில்” என்று விளம்பரப் பலகை படித்து மகிழ்ந்தேன். பக்கத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோக்காரரின் கைபேசியில் இருந்து Manike Mage Hithe என்று காலர் டியூன் Yohani குரல் வந்தது வியப்பாக இருந்தது. சிங்களப் பாடல் பல தரப்பினரையும் கவர்ந்து, இவ்வளவு hit ஆகி விட்டதே என நினைத்தேன்.

பக்கத்திலே, வழக்கமாக பழைய புத்தகங்கள் விற்பவர் தள்ளுவண்டியில் கடை போட்டிருந்தார். என்னை பார்த்ததும் ஒரு சினேகமான புன்னகை. சரி… சிறிது நேரம் புத்தகங்களைப் பார்க்கலாம் என வண்டியைப் பார்த்தேன். ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன், சிவசங்கரி, அசோகமித்திரன் இவர்களின் புத்தகங்களும், காமிக்ஸ், சமையல், ஆன்மீகம், சித்தர்கள் என பல புத்தகங்கள்.

’வேறு ஏதாவது பழைய புத்தகங்கள் பைண்ட் செய்தது உள்ளதா’ என கேட்டேன். அதற்கு அவர், ’தன்னுடைய சொந்தமான உபயோகத்திற்காக சில புத்தகங்கள் வைத்திருப்பதாக’ கூறினார். கொஞ்சம் சுவாரசியமாக உணர்ந்தேன். என்ன வகையான புத்தகங்கள் என அறிய ஆவலாக இருந்தேன்.

விக்ரமன், சாண்டில்யன், பாலகுமாரன், கல்கி என ஆரம்பித்தார். இந்த புத்தகங்கள் என்னிடமும் உள்ளன என்றேன். கல்கி என்றதும், வழக்கமாக எல்லோரும் கேட்கும் ’பொன்னியின் செல்வன்’ படித்து இருக்கிறீர்களா என்றார்.

சிரித்துக்கொண்டே, ’ஆம்’ என்றேன். ’நூலின் ஆரம்பத்திலும், முடிவிலும், ஒரு ஒற்றுமை உள்ளதே, அது என்ன தெரியுமா’ என்று கேட்டார்.

சிரித்துக்கொண்டே ’வீரநாராயண ஏரி’ என்றேன்‌. அந்த ஊர்தான் என் சொந்த ஊர் என்றார்.

‘ஓ… காட்டுமன்னார்கோவிலா’ என்றேன்.

இப்போது அடுத்த கேள்வி; நந்திபுரத்து நாயகி, வந்தியதேவன் வாள் புத்தகங்களை படித்து உள்ளீர்களா என்றார். நந்திபுரத்து நாயகி , பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சி. விக்ரமன் அவர்கள் எழுதியது என்றார். (மறுநாளே அமேசானில் வாங்கிவிட்டேன்.)

இப்போது அவர் வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகம் என்னை கவர்ந்தது. ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ஆர்வமிகுதியால், அதைப் பார்த்தேன். கண்கள் விரிந்தன. வித்தியாசமான எழுத்துக்கள். இது.. என தொடங்கினேன். நான் பழங்கால எழுத்துக்களை படித்து வருகிறேன். தரமணியில் பட்டயப்படிப்பு. வாரம் இரண்டு நாட்கள் என மேலும் ஆச்சரியப்பட வைத்தார்.

நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது ’வட்டு’ எழுத்தா அல்லது ’பிராமியா’ எனக் கேட்டதும் அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

‘உங்களுக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா’ என்று என்னைக் கேட்டார். புத்தகங்களைப் படித்து ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன் என்றேன். இப்போது அவரும் ஆர்வமாக சம்பாஷனையை தொடர்ந்தார்.

பிரம்மன் மூலமாக உதித்ததால் ’பிராமி’ என்று இந்து மதத்தினரின் நம்பிக்கை.

அந்தக் காலகட்டத்தில் இந்து மதத்தைப் போல, சமண மதமும் புகழ்பெற்று இருந்தது. முதலாம் தீர்த்தங்கள் ரிஷப தேவருக்கு இரு மகள்கள். ஒருவர் பெயர் சுந்தரி (சுந்தரி என்றால் மொழி). மற்றொருவர் பிராமி (பிராமி என்றால் எழுத்து) என்பது சமணர்களின் நம்பிக்கை என்று படித்துள்ளேன் என்றேன்.

பிறகு அவர், பிராமி எழுத்துக்கள் முதலில் தோன்றின. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5-ஆம் நூற்றாண்டு வரை அவை தமிழகத்திலும், வட இந்தியாவில் வட இந்திய பிராமியும் பழக்கத்தில் இருந்தது. பின்னர் வட்டெழுத்துக்கள் தோன்றின 11 – 12ஆம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தின. பின்னர் தற்கால தமிழ் எழுத்துக்கள் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கின என்றார்.

வட இந்தியாவில் பிராகிருத மொழியிலும், தமிழில் ’தமிழி’ என்றும் அழைக்கப்பட்ட மொழியும் பயன்படுத்தினர் என்றார். ஆம் தமிழில் அப்போது தான் கிரந்த எழுத்துக்களும், மணிப்பிரவாளமும் பயன் படுத்தப்பட்டது அல்லவா என்றேன்.

’ஆமாம்’ என்று கூறிய அவர்; பிராமி எழுத்துக்களை பிற்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதும்போது, சிரமம் ஏற்பட்டது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் அவை ஓலைச் சுவடிகளை கிழித்து விடுவதால், வட்டெழுத்து பயன்பாட்டிற்கு வந்தது என்றார்.

கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அதுவும் பல்லவர்களின் குடவரை கோயில்களிலும், சோழர் கால கோயில்களிலும், நடுகல், மண்பாண்டங்கள், நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடி இவையெல்லாம் நமது தமிழ் மொழியில் காலங்காலமாக இருந்து வந்த எழுத்துக்கள் நமது பெருமையை, பண்பாட்டை, கலாசாரத்தை, எடுத்து கூறுகின்றன அல்லவா என்றேன்.

சிலப்பதிகாரத்தில், சீவக சிந்தாமணியில் இருந்த கண்ணெழுத்து, ஒலி எழுத்து, ஓவிய எழுத்து என பல உள்ளன என்றார்.

எட்டு மாதங்கள் முன்பு தனது ஆசானுக்கு பிராமியில் எழுதிய கடிதத்தையும், அதில் உள்ள தவறுகளை ஆசிரியர் திருத்தி அனுப்பியதையும் காட்டினார். அப்போது தான் எழுத தொடங்கி இருந்ததாக கூறினார்.

’முகநூலில் உங்களைப் பற்றி எழுதவா’ என்றபோது வியந்து மறுத்த அவர், பின்னர் சரி என்றார். புகைப்படம் எடுத்தேன்.

பெயர் கனகசபை என்றார்.

அப்போது அங்கு வந்த பூக்கார அம்மா, வீட்டிற்கு செல்ல வேண்டும், நேரம் ஆகிவிட்டது என்று கூறி பூச்சரங்களை தந்தார். இருவரிடமும் விடை பெற்றேன்..

Sankar SMADHYAMAR முகநூல் பக்கத்திலிருந்து

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது.

0
முகநூல் பக்கம்   (ப்யாரீப்ரியன்.பெரிய ஸ்வாமி) இணையப் பக்கத்திலிருந்து...      இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும்,200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை...

என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.

0
முகநூல் பக்கம்     நெல்லை கணேஷ் முகநூல் பக்கத்திலிருந்து...   உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப்...

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....