0,00 INR

No products in the cart.

கிருஷ்ணரிடம் சில கேள்விகள்…

உத்தவ  கீதை – 3

 

டி.வி. ராதாகிருஷ்ணன்

 

கிருஷ்ணன் துவாரகாபுரியில் ஆட்சி செய்து வரும் போது ஒருநாள் பிரம்மா,
சிவன் மற்றும்  இந்திரன், அஷடவசுக்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் போன்றோர் சபைக்கு வந்தனர். அவர்கள் கிருஷ்ணனைப் பார்த்து…

“எல்லாக் கடவுள்களும் தங்களின் முக்குண மாயையால் (சத்வ, ரஜோ, தமோ
உலகையும், உயிர்களையும் உண்டாக்கிக் கடந்து… பின்பு அழித்துப் பரிபாலனம் செய்து வருகிறார்கள். ஆனால்… நீங்கள் மட்டும் அந்த மூவகைக் குணங்களால் கட்டுப்படாமல் உள்ளீர்கள்.

பூஜை செய்வதாலோ,புராணங்களைப் படிப்பதாலோ தானம் செய்வதாலோ, தவமிருப்பதாலோ மனிதர்கள் பெரும் பயன் அடைவதில்லை.

ஆனால், உங்களை வணங்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் சரணாகதி அடைபவர்கள் பெரும் பயன் அடைகின்றனர்.

உங்களது பாதங்களில் சரணடைபவர்கள் மனதில் உண்டாகும் தீயவை அழிபட்டு முடிவில் உங்களை அடைகிறார்கள். உங்களது பாதங்கள் மூன்றடியால் உலகத்தை அளந்தவை.

நீங்கள் புருஷ தத்துவத்துக்கும், பிரகிருதிக்கும் வேறு
பட்டவர். இவையிரண்டும் “மஹத்” எனும் பிரம்மத்தினின்றும் உண்டானது.

நீங்கள் காலத்துக்கும் அப்பாற்பட்டவர். பிரளய காலத்திற்குப் பின்னும்
நான்கு யுகங்களுக்கு பின்னும் நிலைத்து நிற்பவர்.

நீங்கள் புருஷோத்தமன். எல்லா உயிரினங்களையும் விட சிறந்தவர் என்றெல்லாம் கிருஷ்ணனைப் புகழ்ந்து பேசினார்கள்.

பின், பிரம்மன் கிருஷ்ணனிடம், “தாங்கள் பூமியின் பாரத்தைப் போக்குவதற்காக அவதரித்தீர்கள். பூ உலகில் , தீமை அழிக்கப்பட்டு நல்லவர்களுக்கு வழி காட்டப்பட்டு விட்டது.

நீங்கள் பூ உலகில், யது குலத்தில் அவதரித்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி சாதிக்க  வேண்டியவை வேறு ஏதும் இல்லை. யாதவ குலமும் முனிவரின் சாபத்தால் அழிந்து விடும். ஆகையால் தாங்கள் பூலோக வாழ்வை முடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடமான வைகுண்டம் திரும்ப வேண்டும். எங்களையும் ஆசிர்வதிக்க வேண்டும்”  என்று வேண்டினார்.

பின்,  அனைத்துக் கடவுள்களும் தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பத் தயாரானார்கள்.

அப்போது கிருஷ்ணன், “நீங்கள் கூறுவதைப் பற்றி முன்பே நான் சிந்தித்து
முடிவெடுத்து விட்டேன். நான் எடுத்த பூலோக அவதாரம், அதன் காரியங்கள்
எல்லாம் நிறைவேற்றி விட்டேன். எப்படிக் கரையானது, கடலை நிறுத்தி
வைத்துள்ளதோ… அதுபோல யதுகுலத்தை நான் தடுத்து நிறுத்தி
வைத்துள்ளேன். எனக்குப் பிறகு அவர்களைத் தடுத்து நிறுத்த
யாருமில்லை. ஆகையால், முனிவரின் சாபம் ஒன்றை ஏற்படுத்தி… அவர்களை அழித்துவிட்டு, நான் வைகுண்டம் திரும்புவேன்” என்றான்.

பின் கிருஷ்ணன், தனது யதுகுல முதியவர்களிடம், “தீய சகுனங்கள் தோன்ற
ஆரம்பித்து விட்டன. முனிவரின் சாபமும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் “பிரபாசா” எனும் இடத்துக்குச் செல்வோம். அந்த இடம் புனிதம் வாய்ந்தது. சந்திரனுக்கு தட்ஷன் (பாம்பின் அரசன்)  கொடுத்த சாபத்தால் பிடித்த “க்ஷயரோகம்” அந்த இடத்தில்தான் நீங்கியது. மீண்டும் வளர்தலும், தேய்தலும் ஏற்பட்டது.

அங்குச் சென்று புனித நீரில் நீராடி இறைவனையும், முன்னோர்களையும்
வழிபட்டால் நமது பாபங்கள் போகும்” என்றான்.

கிருஷ்ணனின் அறிவுரையைக் கேட்டு யதுகுல மக்கள் அங்கு புறப்படத் தயாரானார்கள். அப்போது தனியாக அமர்ந்திருந்த கிருஷ்ணனிடம் உத்தவர், “எல்லாக் கடவுள்களாலும் வணங்கப்படும் கடவுளே! யோகத்தின் முடிவானவனே! யாருடைய பெயரை உச்சரித்தால் புனிதமேற்படுமோ அப்படிப்பட்டவரே! நீங்கள் இவ்வுலகை விட்டு வைகுண்டம் செல்ல தீர்மானித்து விட்டீர்கள். அதனால் முனிவர் சாபம் என்பதெல்லாம் ஒரு சாதாரணக் கருவியே! நீங்கள் விரும்பியிருந்தால், அந்த சாபத்தையே தடுத்திருக்க முடியும். ஆனால் வேண்டுமென்றே நீங்கள் அதைச்
செய்யவில்லை. என்னால் உங்களைப் பிரிந்து இம்மண்ணில் வாழமுடியாது. உங்களுடன் பழகி, உங்களுக்காகக் காத்திருந்து, உங்களுடன்
உணவருந்தி, உங்களுடன் விளையாடி, நீங்கள் கூறிய நல்லவனவற்றைக் கேட்டு ஆனந்தித்து… உங்களுடன் படுத்திருந்து வாழ்ந்திருந்தேன்.

நான் உங்களின் வேலைக்காரன். உங்களின் சேர்க்கையால், உலக மாயைகளிலிருந்து விடுபட்டுள்ளேன். யோகிகள் மாதவங்கள் செய்து, யோகங்கள் செய்து இந்த மாயைகளிலிருந்து விடுபடுகிறார்கள். நாங்கள் உங்களின் நட்பால், தொடர்பால் அந்த நிலையை அடைகிறோம்” என்று கூறினார்.

கிருஷ்ணனும் உத்தவரின் சொற்களைக் கேட்டு, மனம் கசிந்து…”சிவனும்,
பிரம்மாவும் மற்ற  கடவுள்களும் நான் வைகுண்டம் திரும்ப வேண்டும் என
வேண்டுகிறார்கள்.

பிரம்மாவின் வேண்டுகோளின்படி நான் பூ உலகில் அவதரித்த காரியங்கள்
நிறைவேற்றப்பட்டன. யதுகுலம் மட்டுமே ஒரு பாரமாக உள்ளது. இவர்கள், முனிவரின் சாபத்தால் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவார்கள்.

இன்றிலிருந்து ஏழாம்நாள், கடல் பொங்கி துவாரகை நகரும் அழிந்து
விடும். நான் பூ உலக வாழ்க்கையை நிறைவு செய்ததும் கலியுகம் ஆரம்பிப்பதால் நல்லனவையும் அழிந்துவிடும்.

கலியுகத்தில் மக்கள் தீயனவற்றையே விரும்புவர். இந்திரியங்களும்
புறப்பொருளையே நோக்கி ஓடும்.

ஆகையினால்… நீ உடலிலுள்ள ஆன்மாவை உணர்ந்து கொள். இறைவனே எல்லாவற்றிலும் கலந்திருக்கின்றான்…என்று ஞானத்தால் உயர்ந்தவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவான். அவனுக்கு எந்தவிதத் துன்பமும் இல்லை” என அருளினான்.

கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட உத்தவர், “யோகத்தின் உறைவிடமே! தியாகத்தின் ஒளிவிளக்கே! உலகிலுள்ள எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனே!

நான் அறிவில்லாதவன்…ஞானமில்லாதவன்..

நான், எனது என்றும், உடலே நான் என்றும், மனைவி, குழந்தைகள் என்றும் உனது மாயையால்..உலக வாழ்க்கையில் கட்டுண்டு கிடப்பவன்.

ஆகையால் இவைகளிலிருந்து விடுபட்டு, முக்தியடையும் வழியினைக் காட்டுவாயாக!

உன்னைத் தவிர வேறு யாராலும் ஆன்மாவைப் பற்றியும் விளக்கம் அளிக்க
இயலாது, பிரம்மாவும் உன் மாயையால் கட்டுப்பட்டவர். உலகம் உண்மையானது என்று கருதுபவர்கள்.

ஆகையால், எனது எண்ணத்தைத் திருப்பி, உன்னை நோக்கி உன் பாதங்களில் சரணடைந்தேன்.

நாராயணனே! எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவனே… எப்போதும், எங்கும் நிறைந்திருக்கும் எல்லா வல்லமையுமுடையவனே… எனக்கு அருள் புரிவாயாக” என்று வேண்டினார்.

கிருஷ்ணன் உத்தவரை நோக்கி சொல்ல ஆரம்பித்தான் (உத்தவ கீதை)

உலகின் உண்மையைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், இந்திரிய
சுகங்களுக்கு அடிமைப்படாமல்  தாங்களே… தங்களை உயர்த்திக்
கொள்கிறார்கள். ஒருவனுக்கு அவனுடைய “ஆன்மாவே” சிறந்த வழிகாட்டி. உலகைப் பார்ப்பதாலும், உணர்வதாலும் அனுமானத்தாலும் தானே தனக்கு நல்லதை அடைய முடியும். ஞானத்தாலும், யோகத்தாலும்… என்னை உணர்ந்து,, நானே எல்லா உயிர்களிலும் கலந்து நிற்கிறேன் என்று அறிவால் உணர முடியும்.

அதற்கு உதாரணமாக, நமது யது குலத்தில் ஞானம் பெற்ற ஒரு பெரியவர்க்கும், ஒரு அவதூதருக்கும் (அவதூதர் என்பவர் தன் உடலுணர்வின்றி ஆடையின்றி உலகில் திரிபவர். அகந்தை, ஆணவம் அற்றவர் என்று பொருள்) நடந்த உரையாடலைச் சொல்ல
விரும்புகிறேன்.

“பற்றற்றவரே! எதையும் பகுத்தறிந்து பார்க்கும் ஞானம் உங்களுக்கு எப்படி
கிடைத்தது. எப்படி இந்த உலகில்  மனதில் கபடமின்றி அலைய முடிகிறது. உலகில் மனிதர்கள்,  தான் கடைபிடிக்கும்  மதத்தின் வழியாகப் புகழையும்,
பொருளையும், பின்பு நீண்ட காலம் உயிர் வாழ்தலையும் தேடுகிறார்கள்.

தாங்கள், நன்றாகக் உடலில் வலிமையிருந்தும், கல்வி
கற்றிருந்தும்,பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கிறீர்கள்.உங்கள்
வார்த்தைகளும் இனிமையாய் இருக்கின்றன.

பின்பு, எதிலும்  பற்று செலுத்தாமலும், ஆசைப்படாமலும், பொருள்
சேர்க்காமலும், பித்தன் போல அலைகிறீர்கள். பேராசை பிடித்த உலகில்
நெருப்பால் தீண்டப்படாமலும் , கங்கை ஆற்றில் நிற்கும் யானைபோல தனித்து நிற்கிறீர்கள். வாழ்வில் தனித்து நின்றும், புலனின்பங்களைத் தவிர்த்து எப்படி மன மகிழ்வுடன் வாழ்கிறீர்கள்?”

இவ்வாறு யதுகுல பெரியவரால் வினவப்பட்டதற்கு அவதூதன் கூறினான்…

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...