மலையாள மொழியின் அன்னை மொழி தமிழே

மலையாள மொழியின் அன்னை மொழி தமிழே
Published on

மலையாளத்தின் மஹா கவி

– ஹர்ஷா
ள்ளத்தோள் நாராயணமேனன் மலையாள மொழியின்  மஹாகவி. சமஸ்கிருதமும் மலையாளமும் நன்கு அறிந்த இந்தக் கவிஞன் கவிதைகளைத் தாண்டி மலையாள தொன்ம கலைகளை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர். மெல்ல அழிந்து கொண்டிருந்த "கதகளி" என்ற நாட்டிய நாடகக் கலையை உயிர்ப்பிக்க 1927ஆம் ஆண்டில் "கேரள கலாமண்டலம்" என்ற நிறுவனம் நிறுவி அதை அரும்பாடுபட்டு வளர்த்தவர். இன்று இது உலகமறிந்த நிறுவனம்.
அவரது நினைவாக  ஆண்டுதோறும் மலையாளக் கவிஞர் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார். இந்த ஆண்டு அந்த மஹாகவியைப் போற்றும் நாளில் நமது மஹாகவி பாரதியையும் போற்றி ஒரு இலக்கிய விழா "திருர்" என்ற நகரிலிருக்கும் மலையாள பல்கலைக்கழகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.
நாராயணமேனன், மஹாகவி சுப்பிரமணிய பாரதி ஆகிய இரண்டு மஹாகவிகளையும் நினைவுகூரும் இலக்கிய விழாவில், இந்த ஆண்டு மலையாளக் கவிஞருடன் ஒரு தமிழ் கவிஞரும் கெளரவிக்கப்பட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், மலையாளக் கவிஞருமான முனைவர் பி.முரளிக்கும்,  தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதி வெளியிட்டுள்ள சென்னை வழக்கறிஞர், கவிஞர், வானவில் கே.ரவிக்கும், வள்ளத்தோள்-பாரதி விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல மலையாள சொற்பொழிவாளர், பேராசிரியர் ராமன் உன்னி தலைமை தாங்கி மலையாள மொழியின் அன்னை மொழி தமிழே என்பதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கித் தலைமையுரையாற்றினார்.
மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் அனில்குமார் விருதுகள் வழங்கி, இரண்டு மஹாகவிகளின் படைப்புகளை ஒப்பீடு செய்து, வானவில் கே.ரவியின் படைப்புகளுக்கு  "தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்த விருதுகள் கிடைக்க வேண்டும்" என்று வாழ்த்தியும் சிறப்புரையாற்றினார். முன்னதாகத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர், முனைவர் கு.ஆ.ராஜாராம் வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் திரு.ரெஜிமோன் நன்றியுரை வழங்கினார்.
மஹாகவி பாரதியின் நூற்றாண்டில் அவரின் புகழைப் பரப்பத் தமிழகம் மட்டுமில்லாமல்; அகில இந்தியாவிலும் பலவித முயற்சிகளை முன்னெடுத்து வரும் கவிஞர் வானவில் ரவிக்கு மலையாளப் பல்கலைக் கழகம் விருது அளித்து சிறப்பித்திருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயம்.

இந்த விருதளிப்பு விழாவில்  கவிஞர் வள்ளத்தோள்  பாடல்களோடு நம் மஹாகவி பாரதியாரின் பாடல்களுக்கும் கலாமண்டலம் நடனமணிகளான வித்யா ராணி, கோபிகா ஜி. நாத் வழங்கிய  அருமையான மோகினியாட்ட நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com