0,00 INR

No products in the cart.

“கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்து விட்டுப் போகும் நினைவுகளும்”

நூல் அறிமுகம்

 

மந்திரமூர்த்தி அழகு

(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)

என் அடையாரின் விழுதுகள் –  ஜெயராமன் ரகுநாதன்

 

ந்தக் கட்டுரைத் தொகுப்பில் மொத்தம் 29 கட்டுரைகள் இருக்கின்றன. கடைசி 2 கட்டுரைகளைக் கழித்துவிட்டால் மீதி உள்ளவற்றை எல்லாம் சுவாரஸ்யமான சிறுகதைகளாகவே வாசிக்க முடிகிறது. எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் நூலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இதனை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் J. ரகுநாதன்.

ஜெ.ரகுநாதன் இந்த நூலைக் குறித்து “அடையாறு என்பது எனக்கு மீண்டும் மீண்டும் கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்து விட்டுப் போகும் நினைவுகளுமே. இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து எழுதும் போது என்னில் அபரிமிதமான சந்தோஷமே மிஞ்சுகிறது. என்னால் சடுதியில் அந்தக் காலக்கட்டத்தில் போய் நின்று அத்தனை அனுபவங்களையும்
மறு வாழ் செய்ய முடிகிறது. இத்தனை சுகமான அனுபவங்களை கிடைக்கப்பெற்ற நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்று கூறுகிறார்.

இந்த நூலின் வெற்றியாக வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் பள்ளி நினைவுகளை, இளமை நினைவுகள், பழகிய இருபால் நண்பர்களைக் குறித்த நினைவுகளை மீண்டும் நெஞ்சில் அலை அலையாக எழுப்பச் செய்வதைத் கூறலாம். வாழ்வு எல்லோருக்குமே பல்வேறு விதமான இன்பங்களைத் தருகிறது. கசப்பான பாடங்களையும் தருகிறது என்பதைக் கலையம்சத்துடன் சொல்லியிருக்கிறார் ஜெ. ரகுநாதன். நூலில் சில இடங்களில் வருகின்ற ’சாதிப்பெருமைகளைக் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாமோ’ என்று தோன்றுகிறது.

சென்னை அடையாறில் குடியிருக்கின்ற 57 வருடக் கதையினைச் சொல்லி இருக்கிறார் ஜெ.ரகுநாதன்.

நானும் சென்னையில் அடையாறு, சைதாப் பேட்டை, அண்ணா நகர், திருவான்மியூர், கெல்லிஸ் ஆகிய பல இடங்களில் குடியிருந்து அந்தச் சூழ்நிலைகளை குறுகிய காலம் அனுபவித்து இருக்கிறேன். சென்னை அடையாறு இந்திரா நகரில் 1991 ஆம் ஆண்டு குடியிருந்து இருக்கிறேன். கதாசிரியர் அடையாறைப் பற்றிச் சொல்லியுள்ள இடங்களை எல்லாம் நானும் அடையாறுவாசியாகப் பல இடங்களை அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பதால் சற்றுக் கூடுதலாக ஒன்றி ரசிக்க முடிந்தது. சிறப்பான முறையில் விறுவிறுப்பான நடையில் ஒவ்வொரு கதையையும் கூறி இருக்கிறார் ஜெ.ரகுநாதன்.

எத்தனை வகையான பள்ளிச் சிறுவர்கள்! எத்தனை விதமான ஆசிரியர்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை கதைகள்! இளமைக் காதல்கள்! கிரஷ்! இளமையின் குறுகுறுப்புகள் எல்லாம் கதைகளில் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கின்றன. சிறுவயது நண்பர்களை 15, 20, 25,30, 35 வருடங்கள் கழித்துச் சந்திக்கும் போது ஏற்படும் உணர்வுகளை, பேசுகின்ற கதைகளை எல்லாம் வாசிக்கும் போது நாமும் அவற்றில் அமிழ்ந்து போகிறோம்.

மறுபடியும் வசுந்தரா சிறுகதை – இளமையில் பள்ளியில் கதாசிரியரின் நண்பனைக் காதலித்த சினேகிதி நண்பனின் நினைவாக வேறு கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதையும், அவளைத் திருமணம் செய்ய முடியாத நண்பனை வெளி நாட்டில் சந்தித்தபோது அவனது மகளுக்கு அவனது காதலியின் பெயரை வைத்துள்ளதை அறிய வருவதையும் சொல்கின்ற கதை காவியமாகவே இருக்கிறது.

ராமாஞ்சு இன்னொரு அருமையான கதை. இளமையில் கதாசிரியரை வெறுப்பேற்றிய சிறுவன் IIT யில் MTech படித்த ஒருவன் திருமணம் நெருங்கும் நேரத்தில் பெண் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் திருமணத்தை வேண்டாம் என்று நிறுத்துகிறான். அவனை(ரை) சில ஆண்டுகள் கழித்து ராமகிருஷ்ண ஆசிரம வாசலில் சுவாமிகளாக கதாசிரியர் சந்திப்பதுதான் கதை.

தாமு தொகுப்பில் உள்ள இன்னொரு கதை. நமது மரபில் family value குறித்துப் பேசும் கதை. கண்ணில் நீர் வரச் செய்கிறது.

காலம் ஒரு மனிதரை எப்படியெல்லாம் மாற்றும் என்பதைச் சொல்கிறது கீதா சிறுகதை.

எம்.எல்.ஏ. மகன் காப்பி அடித்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று போராடும் ஒரு பெண் டீச்சர் பின்னாளில் ஒரு பெரிய மருத்துவமனையின் சொந்தக்காரராக ஆன பின் எந்த அடிப்படை நீதி, நேர்மையும் இல்லாமல் பணம் பிடுங்குபவராக மாறியுள்ளதையும் இந்தச் சிறுகதையில் அழகாகப் பதிவு செய்து இருக்கிறார் ஜெ. ரகுநாதன்.

தாமு, தாமதமான தர்மம், மூக்குக்கு மேல், மறுபடியும் வசுந்தரா, ரோஜா பன்னீர் சோடா, மெமோரியல் ஹால், ரம்யாவும் நாய் வால் அக்கப்போரும், சுசித்ரா, அல்லி புள்ளே ரகு தானே..? கனவில் வரும் முரளி!, கீதா போன்ற பல கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

இளமை நினைவுகளுடன் வாழ்வியலின் பல்வேறு கூறுகளையும், வாழ்வின் என்றுமுள்ள பொதுவான அறங்களையும் சிறப்பாகப் பேசும் கதைகள் அடங்கிய தொகுப்பு -“என் அடையாறின் விழுதுகள்”.

Zero Degree பதிப்பகம்,   

விலை: ரூ.170/-

போன் : 98400 65000

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம்.

0
நூல் அறிமுகம்   அருள் மெர்வின் ராஜராஜனின் கொடை எங்க  ஊர்ப்பக்கத்தில் கோயில் திருவிழாக்களை ‘கொடை’ என்பார்கள். பெரும்பாலும் கோயில் நிலங்கள், கோயில்களுக்கான வரி விலக்குகள், கோயில் பராமரிப்புகள் யாராவது கொடையாக கொடுத்ததாக இருக்கும். பெரும்பாலும் மன்னர்கள். அப்படி...

எப்படிப் படித்தாலும் புரியும், ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

0
நூல் அறிமுகம் - சத்ய ஸ்ரீ   பல பதிவுகள் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களைப் பற்றியும் அவரது நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் "ஒற்றன்" பற்றியும். தலைப்பைப் பற்றி கேள்விப்பட்டதுமே ஏதோ ‘துப்பறியும் நாவல் போல இருக்குமோ’,...

‘ஏய் நத்தையே, உன் கதை என்ன?’

0
நூல் அறிமுகம்  கருணா மூர்த்தி(வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம்.குழு) நாட் என்று சொல்வார்கள். Knot என்பது திரையுலகில் சகஜமாக புழங்கும் வார்த்தை. ஒரு நாட் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இரண்டரை மணி நேரம் அல்லது மூன்று...

படியுங்கள். உங்களுக்கும் பிடிக்கும்

0
  நூல் அறிமுகம்   சுபாஷ்ணி ரமணன்   செல்லம் ஜெரினாவின்  நந்தனின் அநுராகம். பெயரே வசீகரமாய் இருக்கிறது. கதையும் அப்படியே. நந்தன் யார்? அவன் அநுராகம் எது என்பதுதான் கதை. சௌந்திரம்மாளின் அண்ணன் மகன் தான் நந்தன். பெற்றோரை இழந்த அவன்...