0,00 INR

No products in the cart.

பொங்கலோ!!! பொங்கல்!!!

– தனுஜா ஜெயராமன்

 

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது போல தை முதலாம் நாள் பிறந்ததும் வருடம் முழுவதும் பாடுபட்டு விதைத்த விவசாய மக்களின் வாழ்வில்  வழிபிறக்கும் இனிய நாளே பொங்கல். அறுவடை செய்த புத்தம் புது நெல்லை குத்தி வைத்து பொங்கலிட்டு  படையல் செய்யும் எளிய விழாவே பொங்கல் திருநாள். நகர பொங்கல் விழாக்கள் வேறுமாதிரியெனில் கிராமத்தில் பொங்கலே எல்லாவற்றையும் விட விஷேசமான பண்டிகை என்பதால் பொங்கல் விழாக்கள் கூடுதல் களைகட்டும்.  சூரிய பகவானுக்கும், நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், நமக்காக உழைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் நன்நாளே தமிழர்களின் பொங்கல் திருநாள்.

மார்கழி குளிர் தையிலும் மீதமிருக்க பொங்கலன்று விடியலிலே வாசலில் சாணம் தெளித்து பெரிய பெரிய பொங்கல் பானைகளை வரைந்து வண்ணந்தீட்டி கோலமிட்டு,  ஓரங்களில் செம்மண் இட்டு பொங்கலை அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.  வீடுகளில் இருக்கும் அடுப்பினை பின்புறவாசலில் வைத்து  சாணத்தால் மொழுகி அங்கேயும் கோலமிட்டு அதன் மேல் அடுப்பினை வைத்து வழிபடுவார்கள். அதற்காகவே பொங்கலுக்கு எப்போதும் புதுப்பானைகள் வாங்கப்படும். பொங்கலுக்கு முதல்நாளே புது பானைகளை நீரில் ஊறவைத்து காயவைத்து மண்வாசனை போக துடைத்து பதப்படுத்தி வைத்திருப்பார்கள்.
பொங்கலன்று அதற்கு வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தி மஞ்சள் குங்குமம் வைத்து அதன் கழுத்தில் பூக்களைச் சுற்றி பயபக்தியுடன் தண்ணீர் ஊற்றி உலை வைப்பார்கள். நீர் கொதித்ததும் அதில் புத்தம் புதியதாக அறுவடை செய்து புதுநெல்லில் குத்தியெடுத்த புத்தம் புதிய பச்சரிசியை இட்டு வேகவைப்பார்கள். அது பொங்கி வரும் வேளையில் வீட்டிலுள்ள பெண்கள் குலவையிட்டு… பொங்கலோ பொங்கல் என்று கத்தியபடி சூரியனை நோக்கி வழிபடுவார்கள்.  குழைய வெந்துவரும் புத்தம் புது அரிசி மீதமுள்ள புது மண்வாசணையும் சேர்ந்து கமகமக்கும்.

அதேபோன்று அலங்கரிக்கப்பட்ட மற்றொரு பானையில் பயித்தம் பருப்பு,  அரிசி சேர்த்து குழைய வேகவைத்து வெல்லம் காய்ச்சி ஊற்றி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இனிப்பு பொங்கல் தயாரிக்கப்படும். தளதளவென நெய் ஊற்றி மண்பாணையில் புத்தம் புதியதான அரிசியில் தயாரான சர்க்கரைப் பொங்கலும் பிரமாதமான சுவையுடன் இருக்கும்.

வீட்டில் அனைவரும் புத்தாடை அணிந்து திறந்த வெளியில் மனைகோலமிட்டு வாழையிலையில் வைத்து இந்த இருவகை பொங்கலை படைத்து சூரியனை நோக்கி தீபாராதனை செய்தபடி வழிபட்டு தங்களது வாழ்வாதாரமான சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவார்கள். அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என சொல்லியபடி மகிழ்ச்சியுடன்  கொண்டாடுவர்.

அதன்பிறகுதான் பூஜையறையில் பொங்கல் பொங்கிய புது மண்பானையுடன் பொங்கலை படைத்து வழிபடுவார்கள். தனது நிலத்தில் விளைந்த மஞ்சள், கரும்பு, வாழை ஆகியவற்றை படைத்து வழிபடுவது மரபு. பொங்கலே எளிய கிராமத்து மனிதர்களின் பிரதான பண்டிகை.

பொங்கல் மட்டுமின்றி மாட்டுப் பொங்கல், ஐல்லிக்கட்டு, கனுப்பொங்கல், பொங்கல் திருவிழாக்கள், கோயிலில் பலரும் பொங்கல் வைத்தல் என பொங்கல் விழாவை பல நாட்கள் கொண்டாடுவது கிராமத்து நடைமுறை…வெளியூருக்கு சென்ற உறவினர்கள் அனைவரும் பொங்கலுக்கு ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்பர்.

மறுநாள் மாட்டு பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து தெய்வமாக வழிபடுவது வழக்கம். அன்று ஆங்காங்கே ஐல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது பாரம்பரிய வழக்கம்.  ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறுதழுவுதல் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு வகைகளில் ஒன்று. ஒவ்வொரு பொங்கல் விழாக்களிலும் தவறாமல் இடம்பெறும். மாட்டு பொங்கலன்றே உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவும் ஏர் கலப்பை முதலான உழவு பொருட்கள் சுத்தம் செய்யபட்டு பூஜையில் வைத்து வழிபடுவது வழக்கம்.

மறுநாள் கனுப்பொங்கல் அன்று சகோதரர்கள் நலம் வாழ இலையில் படையலிட்டு கனுப்பிடி வைப்பது நமது மரபு. குழந்தைகள் வீட்டு பெரியவர்களையும் உறவினர்களையும் சந்தித்து ஆசிபெற்று வருவதே காணும் பொங்கல். மாலையில் ஆத்தங்கரையில் உற்றார் உறவினர்கள் கூடி மகிழ்வது மற்றொரு வழக்கம்.

பல கிராமங்களில் பொங்கல் விழாக்கள் ஒரு வாரம் வரையிலும் கூட நடைபெறும். ஊர்கூடி கோயிலில் பொங்கல் வைத்து கதிரவனை வழிபடுவது வழக்கம். பல ஊர்களில் திருவிழாக்கள், பாட்டு, நடனம், கச்சேரி, நாடகங்கள் என களைகட்டும் நிகழ்வுகளும் உண்டு.

நகரங்களில் பொது இடங்களில் பொங்கல் வைப்பது, சமத்துவ பொங்கல் என பொங்கல் விழாக்கள் நடைபெறும். கிராமத்து ஆற்றங்கரை போல நகரங்களில் கடற்கரையில் கூடி மகிழ்வதும் நடைமுறையில் உள்ளது.
வட நாட்டில் மகரசாந்தி விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொங்கல் விழாக்களின் சாரம்சம் உலகில் வாழ்வாதாரமான  சூரியன், பருவம் தவறாமல் பெய்யும் மழை, உழவுக்கு உதவும் உழவு சாமான்கள், நம்மோடு ஆண்டு முழுவதும் உழைக்கும் கால்நடைகள் என நம் உணவுக்கு மூலக் காரணமான அனைத்திற்கும் நன்றியறிவிக்கும் ஒரு நல்விழா. இதனை பாரம்பரியத்துடனும், மகிழ்வுடனும் கொண்டாடி மகிழ்வோம்!!!! நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்போம்!!!

2 COMMENTS

  1. அருமை.

    நல் வாழ்த்துக்கள்.

    இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  2. பொங்கட்டும் பொங்கட்டும் புதுமைப் பொங்கல்
    தங்கட்டும் தங்கட்டும் தெவிட்டா இன்பம்!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...