0,00 INR

No products in the cart.

அமிக்ட்லாவும் ஆறுமுகமும் 

சிறுகதை

ஓவியம் : தமிழ்

 

– ஆனந்த் ஸ்ரீனிவாசன்

 

நெய்க்காரப்பட்டி போஸ்ட் ஆபிஸ்  சூப்பரின்டடேண்ட்  இன்ஸ்பெக்‌ஷன்.  என் கண்ட்ரோலில் உள்ள ஆபீஸ். எனவே, எஸ்.பி.  என்னையும் கூப்பிடவே,  நானும் கூடபோயிருந்தேன்.

இன்ஸ்பெக்‌ஷன் முடிந்து மாலை 5 மணி. பழனி ஹெட் போஸ்ட் ஆஃபீஸ் உள்ளே   ஜீப்பில் நுழைந்தபோது, எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்தது.  ஜீப் முன்னே   “என்னை சாக அடிச்சுடுங்க. நான் இருக்க  விரும்பல. எவ்வளவு  ஊழைச்சு இருப்பேன் இந்த இலாகவுக்கு? என்று கத்திக்கொண்டே குறுக்கே பாய்ந்தான் அந்த இளைஞன்.

நல்ல வேளை… டிரைவர் சாதுர்யமாக பிரேக் போட்டதினால்  அவன்  உயிர் தப்பினான்.

இவன் சத்தம் கேட்டதும் ஆபீஸ் உள்ளே இருந்து வந்தவர்கள், “ஏய் உனக்கு மூளை இல்லை? சாவறத்துக்கு  எஸ்.பி. ஜீப்தானா கிடைச்சுது. குடிகாரப் பயலே… சாகணும்னு நினைச்சா, போய் வர்த்தமா நதி டாம்ல விழுந்து சாகு. இல்லாட்டி கொடைக்கானல் போற பாதையில சரிந்து விழுந்து செத்து போ. ஜீப் முன்னாடி விழுந்து செத்துப் போயிட்டா, அய்யா தானே கோர்ட் கேஸ்ன்னு அலையணும்.”

எங்களுக்காக வக்காலத்து வாங்கி பேசினவன் ஒரு  குறிப்பிட்ட யூனியன் செக்ரேட்டரி. ”அவன் எஸ்.பி முன்னாடி  நல்ல பேர் வாங்க முயற்சிக்கிறான்” என்பது மட்டும்  நன்கு தெரிந்தது.

சலசலப்பு  அடங்கியதும் சற்று நேரத்தில் மொத்த கூட்டமும் கலைந்தது.

எஸ்.பி. என்னிடம், “வாசு, அந்த இளைஞன் பற்றி விசாரிங்க?” என்று சொல்லிவிட்டு திண்டுக்கல் கிளம்பிப் போனார்.

நான் என் ஆபீஸ் சேம்பரில் வந்து உட்கார்ந்தேன்.

நான் வாசுதேவன். வயது 32. ஏ.எஸ்.பி.யாக  புரமோஷன் பெற்றுக்கொண்டு இங்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று.

இந்த ஊருக்கு போஸ்டிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. நான் 10 நாள் லீவில் இருந்தபோது,  ரீஜினல் ஆஃபீஸ் லருந்து ஒரு போன் வந்தது. மதுரை அல்லது சோழவந்தான் இரண்டு
டிவிஷன்களுள் ஒன்று உங்களுக்கு போஸ்டிங் என்றார்கள்.

வேலை பார்க்க வந்துட்டோம் எந்த ஊரா இருந்தா என்ன?

அன்று விஜயதசமி. ஞாயிற்றுக் கிழமை. கலை ஆர்வம் மிக்க நான், தெரு குழந்தை களின் கிரியேட்டிவிட்டிக்கு, தீனி போடும்  விதமாக,  15 நிமிடம் அளவுக்கு “நவீன திருவிளையாடல்”  நாடகம் என்று மைக்கில் தெரிவித்து விட்டு, இதை  நகைச்சுவையாக ரசியுங்கள். ஆன்மீகவாதிகள் மனம் புண்படவேண்டாம். சீரியசாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.  என்று ஒரு டிஸ்க்ளைமர் கொடுத்து விட்டு நாடகம் அரங்கேற்றம் செய்தேன்.

மாம்பழத்துக்குப் பதில் புரூட்டி வைத்துக்கொண்டேன்.

சிவனும் பார்வதியும் கணேசனுக்கு, புரூட்டி  கொடுத்ததால்,  கோபித்து கொண்ட முருகன், ரெஸ்ட் எடுக்க, கொடைக்கானல் போகும் வழியில், மயில் தோள் பட்டை வலி காரணமாக, பழனியில் இறக்கிவிட, “ஏன் என்னை இங்கு இறக்கி விட்டாய் மயிலே?” என்று முருகன் கேட்டதற்கு,  “அட போ முருகா! ஒன்னை சுமந்து, சுமந்து,  தோள் பட்டை வலிக்குது.”

“பழனியும் கிட்டத்தட்ட கொடைக்கானல் மாதிரிதான். இங்கேயே தங்கி
அருள்பாலிக்கவும்” என்று  மயில் சொல்வதாக முடித்து இருந்தேன்.

நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டு இருந்தது ஒரு காரணம். குழந்தைகளின் நடிப்பு அமர்க்களம். ஏகப்பட்டப் பாராட்டுகள்.

மறுநாள் திங்கள் 11 மணி அளவில், என் லேண்ட்லைன் போன் அடித்துக் கொண்டே இருந்தது. ரீஜினல் ஆபீஸ் போன்.

“உங்க போஸ்டிங்ல சின்ன மாற்றம் வாசுதேவன் . மதுரையும் இல்ல சோழவந்தானும் இல்ல.”

“பின்ன எங்கே சார்?”

“பழனி சப் -டிவிஷனுக்கு போஸ்டிங். அடுத்த வாரம் ஜாயின் பண்ணிடுங்க”

ஒரு நிமிஷம் நான் ஆடிபோய் விட்டேன்.

“ஏண்டா! என்னை பாத்து  கிண்டல் பண்ணி, டிராமாவா போட்டே… வாடா மவனே, என் ஊருக்கு வாடா… என்று  பழனி முருகன் சொல்வதுபோல் இருந்தது.

அப்படிப்பட்ட பழனியில், இப்போது எனக்கு வேலை. முருகனின் கருணையை என்னவென்று சொல்ல!!

என்  ஆர்டர்லியிடம், அவனை என் ஆபீஸ் சேம்பர்க்கு அழைத்து வரச்  சொன்னேன் .

அவன் உள்ளே நுழையும்போதே மது வாடை. தலை சரியாக சீவபடவில்லை. கண்களில் ஒளி மங்கி இருந்தது. சிகரெட் வாசம் வேறு. ’ஒரு ஆபீசர் சேம்பரில் நுழைகிறோம்’, என்கிற பயம் அவனிடம் தென்படவில்லை.

“சார்…  மன்னிச்சுடுங்க சார்.”

சற்றும் எதிர்பார்க்கவில்லை என் காலில் விழுந்து மீண்டும் மன்னிப்பு கேட்டான்…

கை கட்டி நின்றுக்கொண்டே இருந்தான்.

“உன் பெயர் என்ன?”

“ஆறுமுகம்”

“எவ்வளவு நாளா இந்த போஸ்ட் ஆஃபீஸில் வேலை செய்யறே?”

“அஞ்சு வருஷமா அவுட்  சைடர்”

“ஏன் உனக்கு யாரும் அபாய்ண்ட்மெண்ட் போடல?”

“இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரிங்க என் கிட்டே துட்டும் வர்த்தமானத்தி டாம்  மீனையும், வாங்கி சாப்பிட்டுவிட்டு ஏமாத்திட்டங்கா சார்?”

“யூனியன் கூட உனக்கு ஹெல்ப் பண்ணலையா?”

“இல்லை சார்… அவங்களும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டங்கா.”

“அப்பா அம்மா?”

“அவங்க தம்பியுடன் இருக்காங்கா.”

“தம்பியும் சீனியாரிட்டி லிஸ்ட்ல ஐந்தாவது ஆள். அவனுக்கு நியமன உத்தரவு கொடுத்துட்டாங்கா சார்!”

“என் பொண்டாட்டி பைத்தியம்ன்னு என் வீட்டுக்கு  அவங்க யாரும் வரமாட்டாங்க சார்.”

“நான் ஒத்த ஆளு சார் கஷ்டப்படுறேன்.”

உறவில் இத்தனை நிறங்களா?

அதற்குள், ஆர்டர்லி  சீனியாரிட்டி பைல், மற்ற ரெக்கார்ட்ஸ்களை, என் டேபிள்  முன்னே வைத்தார்.

அவன் சொன்னது சரிதான். ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மேல் வேலைபார்த்து, சீனியாரிட்டி லிஸ்டில், முதல் ஆளாக இருந்தும், எனக்கு முன்பு இருந்த அதிகாரிகள் இவனை  புறக்கணித்துவிட்டு, இவனுக்கு பிறகு உள்ளவர்களுக்கு, பணி நியமனம் உத்தரவு, போடப்பட்டு உள்ளது தெரிய வந்தது.

“ஏன் இவனை செலக்ட் செய்யவில்லை?” என்பதற்கு, “ஒழுக்க குறைவு. தண்ணி போட்டுவிட்டு ஆபீஸில் அதிகாரிகள், கூட வேலை பார்க்கும் ஊழியர்களை தரகுறைவாக பேசுவது போன்ற  ஒழுக்ககேடுகளுக்காக இவன்  நிராகரிக்கப் படுகிறான்” என்று “நோட்” போடப்பட்டு இருந்தது.

என் பார்வையில் அந்த அதிகாரிகள்தான் தரம் கெட்டவர்கள்.

’அப்பாய்ண்ட்மெண்ட் போட முடியாது’, என்று நினைப்பவர்கள், எதற்காக பணத்தையும், வர்த்தமாநதி டாம் மீன்களையும், வாங்க வேண்டும். யாருக்கும் வெட்கமில்லை!

“நெஞ்சு பொறுகதில்லை இந்த நிலை கெட்ட மனிதரை கண்டு விட்டால்” என்கிற முண்டாசு கவிஞன் பாட்டுதான் என் நினைவுக்கு வந்தது.

ஆனால், பழனி கோயிலில் உள்ள அவன் செல்வாக்கை அதிகாரிகளை அழைத்து போக மட்டும், பயன்படுத்தும் வேடிக்கை  மனிதர்கள்  என்பதை புரிந்துகொண்டேன்.

எந்த உயர் அதிகாரிகள் பழனி முருகன் கோயில் தரிசனம் பண்ண  வந்தாலும்,
“கூப்பிடு ஆறுமுகத்தை” என்பார்களாம். அந்த அளவிற்கு கோயிலில் உள்ள அதிகாரிகளுடன் இவனுக்கு நல்ல நட்பு இருந்தது.

இந்த காரணத்தினால், ஆறுமுகம்தான் வருகின்ற அதிகாரிகளை நன்கு கவனித்து , அவர்களுக்கு வின்ச் பாஸ் வாங்கி, முருகன் தரிசனம், ஓசியில் தங்க தேர் இழுக்க வைப்பது, பஞ்சாமிர்தம்  எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு, அவர்களை கெஸ்ட் ஹௌஸ்வரை கொண்டுவிட்டு, அவர்களுக்கு சாப்பாடு, டிபன் வாங்கி கொடுத்துவிட்டு வருவதற்கு லோக்கல்  ஏ.எஸ்.பி.யிடம் முன் கூட்டியே பணம் வாங்கிக்கொண்டு செலவு கணக்கை சொல்லிவிடுவது வழக்கமாக இருந்து இருக்கிறது.

தரிசனம் பண்ண வந்த அதிகாரிகள் டிப்ஸ் கொடுத்தால் வாங்கமாட்டான். ஆனால்,  அந்த அதிகாரிகளிடம், தான் 180 நாட்கள் வேலை பார்த்தும், தனக்கு இலாகாவில் நியமன உத்திரவு வரல சார்? “கொஞ்சம் ஏ.எஸ்.பி.கிட்ட சொல்லுங்க சார்” என்று கோரிக்கை வைப்பான்.  அவர்களும் சொல்றேன், நிச்சயம் சொல்றேன், என்று தலையாட்டிவிட்டு, போவார்கள் . ஆனால் யாரும், ஒன்றும் செய்யமாட்டார்கள்.

ஒரு வருடம், இரு வருடம் அல்ல ,தொடர்ந்து  அஞ்சு  வருடங்கள், இதே நிலையில் தான் இருக்கிறான்.

“அவன் ஏன் குடிக்கிறான்? ”

குடிப்பதற்கு  அவன் சொன்ன காரணம், உண்மையா? பொய்யா? என்று நேரில் விசாரித்தபோது, “பைத்தியமான மனைவி, தினமும் இவனை போட்டு அடிப்பதும், அந்த விரக்தியில்,  இவன்  குடிப்பதும், சில நேரங்களில் காலையிலே சண்டை வந்தால், குடித்துவிட்டு வேலைக்கு வருவது, போதை ஏறி, இங்கு உள்ளவர்களிடம், தகராறு செய்வது”  என்று தெரிந்தது.

அதுமட்டுமல்ல, வேலை கிடைக்காததால், விரக்தியின் உச்சம், குடி, கோபம் , சண்டை, வேதனை.

வாய்ப்பும், உரிமையும்  இருந்தும், நிரந்தர வேலை இல்லை. பைத்தியமான பொண்டாட்டி. பெற்றோர் கூட பிறந்த  தம்பி, சப்போர்ட் இல்லாதது.

இன்னொருவனாக இருந்தால், இந்நேரம் தற்கொலை செய்துகொண்டு இருப்பான்.

அவன் மேல் எனக்கு இரக்கம் தானாக பிறந்தது. இவனை மனிதனாக ஆக்க வேண்டும். இவன் இப்படி  மாறிய காரணம் எனக்கு புரிந்தது.

எனக்கு அனாடமி பற்றி தெரிந்ததால், ”இதற்கெல்லாம் காரணம்  மூளையின் ‘அமிக்டலா’தான்  முக்கியக் காரணம்” என்று தெரிந்துக்கொண்டேன்.

என் ஆர்டர்லி டிகிரி முடித்தவர். “அமிக்ட்லா என்றால் என்ன சார்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சார்”என்றார்.

பொறுமைசாலி மனிதன்கூட  யோசிக்காமல் கோபம், சண்டை  செய்துவிடுகிறான்.

அதற்கு என்ன காரணம்?

உடனடி எதிர்மறை எண்ணங்கள், மற்றும் கோபத்தை வெளிப்படுத்தும். தான் செய்வது சரியா? தவறா? என்று முடிவெடுக்க முடியாத செயல் அது. மூளையின் இரு பக்கமும்  பாதாம்பருப்பு அளவே உள்ள ஓர் உறுப்பு இதற்கெல்லாம் காரணம்.

நமது மூளையின் ‘அமிக்டலா’ (amygdala) என்ற பகுதியும், அங்கு ஏற்படும் மாற்றங்களும்தான் என்கிறது மருத்துவ அறிவியல். உண்மையில், எமோஷனல் ஹை-ஜாக் என்பதை புத்தகத்தில், ‘அமிக்டலா ஹைஜாக்’ என்றே குறிப்பிடும் ’டேனியல் கோல்மேன்’ என்ற மனவியல் நிபுணர் அமிக்ட்லாவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர்.

நல்லா இருக்கும் நாமே, சில சமயங்களில் கோபம் வெறுப்பு காண்பிக்கும்போது ஆறுமுகம் பாதிக்கப்பட்டவன் ஆறுமுகம். அவனுக்கு அறிவியல் ரீதியாக மனோதத்துவ சிகிச்சை தொடர வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.

எம்.எஸ். உதயமூர்த்தியின் “தன்னம்பிக்கையும் உயர் தரும் நெறி முறைகளும்” என்ற  புத்தகத்தை கொடுத்து, “படித்துவிட்டு வா” என்றேன்.

“எனக்கு புக் படிப்பதில் ஆர்வம் இல்லை சார்.”

“ஒரு நாளைக்கு ஒரு பக்கம் படி…  உன்னால் முடியும்.”

கொஞ்சம் அவன் இறுக்கமான சூழ்நிலையை மாற்ற நினைத்தேன்.

“நீ சினிமா பார்ப்பதுண்டா?”

மௌனமாக இருந்தான்.

“சொல்லு ஆறுமுகம். நீ நின்றது போதும்”

“உன்னை சக மனிதனாக நினைக்கிறேன். மரியாதை மனதுள் இருந்தால்போதும். நீ என்னை பொறுத்து வெளி ஆள். இந்த சேர்ல ஒக்காரு.”

தயங்கியபடி சேரை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யாமல், சீட்டின் நுனியில் உட்கார்ந்துக்கொண்டான்.

“நான் கேட்ட கேள்விக்கு  நீ பதில் சொல்லவில்லையே?”

“சார் கமல் படம் உசிறு சார்.”

“அப்படிப் போடு அருவாளெ”

” ‘உன்னால் முடியும் தம்பி’ படம் பார்த்த தானே”

“வெள்ளந்தியா ஆமாம் சார்.  வள்ளுவர்  தியேட்டர்ல பத்து தடவை  பார்த்தேன்.”

“இப்ப இரண்டு நாளைக்கு முன்னாடி இரண்டாவது ரிலீஸ் ஓம் ஷண்முகா டாக்கீசில் பார்த்தேன்.”

“புஞ்சை உண்டு  நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு “பாட்டு  புலமைபித்தன் அருமையா எழுதி இருப்பார் சார்.”

இவனுக்குள் ரசனை இருக்கிறது. முழு பாட்டையும் பாடுவான் போல் இருந்தான்.

படத்தோட மைய கருத்து என்ன”?

“உன்னால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்ற  கருத்து சார்”

“குட் இவ்வளவு அழகா பேசற”

“நீ அந்த  படத்தில், உன்னால் முடியும்  தம்பின்னு, ஒரு  பாட்டில், குடியை பத்தி கமல் சொல்லி இருப்பார், அதை நீ கவனிக்கலயா?”

என் கேள்விக்கு அவனால் பதில்சொல்ல முடியவில்லை. தலையை தொங்க போட்டான். அவன் குற்ற உணர்ச்சி,  மேலே பேச முடியவில்லை. விசும்பல் தெரிந்தது.

“சரி சரி விடு”

“கோபத்தை அடக்குவது எப்படி?” என்று தமிழ்வாணன் எழுதிய புக் அவனுக்கு  கொடுத்தேன்.

யோகா கிளாஸ் போறீயா?

தலையை ஆட்டினான்.

“திருச்சியில் எனக்கு தெரிந்த மனநல மருத்துவரிடம், நீயும் உன் மனைவியும் போங்க.

”நீ செலவு  செய்ய வேண்டாம் அவர் ஃப்ரீயாக சிகிச்சை கொடுப்பார்.”

“நான் சொன்னதை எல்லாம் செய்து விட்டு, ஒரு வாரம் கழிச்சு வா. திருச்சி போனதும், எனக்கு போன் செய். டாக்டர்கிட்ட பேசறேன்”

“ரொம்ப  தாங்க்ஸ் சார்”

ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு, மனைவியை, நான் சொன்ன, கிளினிக்கில் சிகிச்சைக்கு இருவரும் கிளம்பி போனார்கள்.

ஒரு வாரம்  கழித்து, திரும்பி வந்ததும் ,நான் ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன் எடுக்கும் ஊர் எல்லாவற்றுக்கும் ஆர்டர்லி உடன், அவனையும் அழைத்துப் போனேன்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது,  தன்னம்பிக்கை வளர்ப்பது பற்றி, உதயமுர்த்தி சொல்லியிருந்தை பற்றி, ஞாபகப்படுத்தினேன்.

மறுவாரம்,  அவனை, ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்க்கு  வரச் சொல்லிவிட்டு, நானும் அங்கு சென்றேன்.

ஆர்டர்லியை கூப்பிட்டு, காந்தி படத்தை எடுக்க சொன்னேன்.

“இத பாரு ஆறுமுகம்  நீ சொன்ன விஷயம் எல்லாம்  நியாயமான ஒன்றுதான் ”

“உன்னை ஏமாற்றியவர்களுக்கு ஏதோ ஒரு  விதத்தில் தண்டனை கிடைக்கும்.”

“அவை  எல்லாவற்றையும் மறக்க முயற்சி செய்.”

“இப்ப நீ ஒரு மனுஷனா வாழணும்ன்னு,  நினைச்சா, கடவுள் படம் எதுவும்  வேண்டாம், காந்தி படம் மீது சத்தியம் பண்ணு.”

“ஒரு மாசம் உன்னை கண்காணிப்பேன். நீ குடிக்காமல், உன் முகத்தில் ஒரு தெளிவு வந்தால் மட்டுமே, நீ பெர்மனென்ட் ஆக்கப்படுவாய்.”

மற்றவர்கள் எல்லாம் இது விஷ பரீட்சை என்று என்னை எச்சரித்தார்கள்.

“அவன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. என் நம்பிக்கை பொய்க்காது என்றேன்.”

அவன் மூன்று முறை, காந்தியின்  படத்தின் மீது சத்தியம் செய்தான்.

ஒரு மாதம்  கழித்து பார்த்தபோது, முன்பைவிட தெளிவு, சுறுசுறுப்பு கண்டேன்.

அவன் பணி நியமன உத்தரவு கடிதத்தை கொடுத்தேன். முகத்தில் சந்தோச ரேகைகள்.

“சார் இதுக்கு முன்னாடி இருந்தவங்க, என்னை புழுவாக நினைச்சங்கா! ஆனா, நீங்க சார் தான், என்னை நல்லா புரிஞ்சு புக் படிக்க சொல்லி என்னை மனுஷனா ஆக்கி இருக்கீங்க!”

அவன் கண்களில் அனிச்சையாக கண்ணீர்.

அவனுக்கு எவ்வளவோ  சந்தர்ப்பம் கிடைத்தும், குடிக்காமல் இருக்கிறான்.

என் வார்தைக்கும் சத்தியத்துக்காகவும்.

இனி எப்போதும் அவன் குடிக்கமாட்டான்.

எனக்கும், மனதில் திருப்தி. ஒரு குடிகாரனை திருத்தி நல்வழிபடுத்தியதற்கு…

 

‘அமிக்டலா’ (amygdala)பற்றி…

ஒவ்வொருவரின் மூளைக்குள்ளே ஓர் ஓரத்தில் அடியில் இருக்கும் ஒரு தக்கினியூண்டு சதைக்கட்டு, மூளையின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம்பருப்பு அளவே உள்ள ஓர் உறுப்பு. பாதாம் பருப்பின் கிரேக்கப் பெயர் – அமிக்டலா. ‘ஜோசப் லே டவுக்ஸ்’ என்ற நரம்பியல் நிபுணர்தான் முதன்முதலில் அமிக்டலாவுக்கும், உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து சொன்னவர்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

2
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...