0,00 INR

No products in the cart.

உங்கள் குரல் 

“மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க” என்ற ஒற்றைச் சொல் மனதை ஏதோ செய்தது. அனுமதி தந்த ராணுவ அதிகாரிக்கு மிக்க நன்றி.
– திருச்சிற்றம்பலம் சுரேஷ்

ரு நிருபரின் டைரி  சுவாரஸ்யமான தகவல்கள். சரளமான எழுத்து லாவகம். அருமை மௌலி. ஆரம்பமே அசத்தல். பாராட்டுக்கள். முதல் பேட்டியை வெளியிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
– வி.தயாளன்,  சென்னை

த்தன் டாடா  பற்றியும் அவர் பிறந்த நாள் கொண்டாடிய விதம் பற்றியும்  “தராசு” சொன்ன பதில் மிகவும் அருமை. ரசிக்க வைத்த பதில். பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

 கிரிஜா ராகவன்  எழுதிய “வித்தியாசம்” சிறுகதை படித்ததும் கண்ணில் நீர் வழிந்தது.  கணவன் இறந்த பிறகு தன் மகன் வீட்டிலேயே தங்க முடிவு செய்த நீலா மாமியின் முடிவு பாராட்டுக்குரியது.  நீலா மாமியிடம் தெரிந்த அந்த விடுதலை வித்தியாசத்தை மருமகள் உஷா மட்டுமல்ல நாங்களும் உணர்ந்து கொண்டோம்.  மிகவும் அருமையான சிறுகதை!
– உஷாமுத்துராமன், மதுரை

டைசிப் பக்கத்தில் வந்த “சுஜாதா தேசிகன்” அவர்களின் “சாமி, இது என் ஊர்; என் கிராமம்” என்ற பக்கத்தை படித்தவுடன் ”அந்த ஆசிரியரை பாராட்டி மாலை அணிவிக்க வேண்டும்” என்று தோன்றியது. இதுபோன்று ஒவ்வொரு ஆசிரியரும் இருந்து விட்டால்  கிராமத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே. இவர்களை அரசு தேட வேண்டும் என்று சொன்ன  சுஜாதா தேசிகன் அவர்களின் வாயில் சர்க்கரைதான் போட வேண்டும்.
– ராதிகா, மதுரை

ந்த காலத்து ஆணாதிக்க கணவனின் பிடியில் அகப்பட்டு அடிமைப் பெண்ணாக வாழ்ந்த பல்லாயிரம் இல்லத்தரசியரின் வண்ணக் கனவுகளுக்கு விடிவு காலம் ஏற்பட்ட பரிதாப கோலத்தை நெகிழ்ச்சியுடன் படம் பிடித்துக் காட்டியது, “வித்தியாசம்” சிறுகதை.
– என். ராமச்சந்திரன், நாமக்கல்

மும்பையில் ஐந்து நட்சத்திர தாஜ்மஹால் ஹோட்டல் பெரும் சேதமடைந்து,  ஒரு வருட காலம் மூடப்பட்ட நிலையிலும் பணியாளர்கள் யாரையும் வேலையில் இருந்து நீக்காத ரத்தன் டாடாவின் பெருந்தன்மையும், ஹோட்டல் மறுபடியும் இயங்கிய போது முன்பை விட அதிகமாக வாடிக்கையாளர்கள் வரக் காரணமாக டாடா மீது வைத்துள்ள  நிர்வாக நம்பிக்கைக் குறித்தும் தராசார் பதில் படித்து மெய்சிலிர்த்தேன்.

திடீரென்று தோன்றும் சாமியார்கள், அதிர்ஷ்டம் இருந்தால் கார்ப்பரேட் சாமியார்கள் ஆகி விடுகிறார்கள். அதிர்ஷ்டம் இல்லையென்றால் காணாமலும் போய் விடுகிறார்கள் … கலக்கல் தராசாரே! (குறிப்பு : அவர்கள் சீக்கிரமாகவோ, காலங்கடந்தோ கம்பி எண்ணுவார்கள் தானே?)
– ஆ .மாடக்கண்ணு, பாப்பான்குளம்

வித்தியாசம் சிறுகதையில் நீலா மாமி 88 வயதிற்கு பிறகுதான் வாழ்க்கையை வாழ நினைத்திருப்பாள் போல. கதை வித்தியாசமாகதான் இருக்கிறது.

றிவும்,இறைவனும். அறிவால் ஒரு இலக்கின் புள்ளியை மட்டுமே தொடமுடியும். இறைவனால் அந்த இலக்கை முழுமை அடைய செய்ய முடியும்.ஞானம் நம்முள் அடி எடுத்து வைக்கும்போது அறிவு ஏதுமில்லை. அழகான வரிகள்.

“கொஞ்சம் சிரிங்க பாஸ்” நன்றாகவே சிரிக்க வைத்து விட்டது.
– கலை மதி, வந்தவாசி

நெஞ்சை நெகிழ வைக்கிறது! எப்பேர்ப்பட்ட வீரமரணம்! எப்பேர்ப்பட்ட தேசபக்தி கொண்ட பெற்றோர்! பயண செலவை ஏற்ற உயர் ராணுவ அதிகாரி, மகனின் மரணத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட சக அதிகாரி! படிக்கும் போதே என் கண்கள் குணமாகி விட்டதேன்.
– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வேட்டிகட்டி  காத்திருக்கும்  “தம்பிக்கு”  வாழ்த்துகள்

0
“ஒரு நாய் கூட மீறாத சட்டம்”  என்ற எமர்ஜென்சி காலத்தைப்பற்றிய கட்டுரை சூப்பர்,  மிகையில்லாத சரித்திர பதிவு. - தமிழரசு, ஈரோடு ஒரு கட்சியை ஒவ்வொரு தலைவர் மறைவிற்கு பிறகு சின்னம் முடக்கம், பிளவு  என்று...

ஆரம்பமே அசத்தலாகயிருக்கிறது.

1
  உங்கள் குரல்   மத்திய அமைச்சரவை சார்ந்த இலாகாவில் பல லட்சம் இந்திய இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் இருந்தும் அவைகள் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் பலன் தரும் விஷயமாகவும் அமைத்து விட்டு, அக்னி...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

0
உங்கள் குரல்    மணிரத்தினத்தின் “அலைபாயுதே” படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு “டோபி”யை பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும். - ஜானகி பரந்தாமன், ...

ஜாதியைச் சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

0
உங்கள் குரல்    ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா்  பிறந்தநாளை  முன்னிட்டு  கலைஞா்  படம் அட்டைப்படமாக  அலங்காிக்கும்  என நினைத்தேன். இருப்பினும்  சொல்லாமல்  சொல்லும் விதமாய் பிரதமா் மோடி - முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு ...