
"சென்னையில போய் செட்டிலாகப் பயிற்சி எடுக்குது அந்தக் குடும்பம்!"
"அதுக்கு என்ன சார் பயிற்சி?"
"நீச்சல் பயிற்சிதான்…!"
– வி.ரேவதி, தஞ்சை
"உங்க வீட்டுக்கு வந்த திருடன் எப்படி சார் இருந்தான்?"
"வேண்டாம் சார், விடுங்க! சொன்னா, உங்களுக்குக் கோபம் வரும்!"
– வி.ரேவதி, தஞ்சை
"போலீஸ் ஸ்டேஷன்ல யாராவது லஞ்சம் வாங்கினா எங்க இன்ஸ் பெக்டர் தொலைச்சுடுவாரு."
"அடடா, பத்திரமா வெச்சுக்க மாட்டாரா? சின்னப்பையன் மாதிரி தொலைச்சுடுவாரா?"
– சி.பி.செந்தில்குமார், ஈரோடு
"டி.வி.ல நான் நியூஸ் பார்க்கும்போது மனைவி உள்பட யாருமே என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க!"
"நீங்க லக்கிமேன் சார்!"
"ஹி.. ஹி… ராத்திரி 12 மணிக்கு மேலதான் நான் நியூஸே பார்ப்பேன்!"
– வி.வேதி, தஞ்சை
"கடனா ஆயிரம் ரூபா கொடுங்க சார்…."
"தப்பா நினைக்காதீங்க. கடன் கொடுத்தா நமது நட்பு கெட்டுடும்."
"அப்படியெல்லாம் இல்ல சார். திருப்பிக் கேட்டாதான் நட்பு கெடும்!"
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
"அமைச்சர் ஆகிற வாய்ப்பு எனக்கு அமோகமா இருக்குன்னு எப்படிச் சொல்றீங்க ஜோதிடரே?"
"கிரக அமைப்புகளைப் பார்த்தால் உங்களுக்கு ஊழலில் சிறைத்தண்டனை உண்டுன்னு சொல்லுதே சார்?"
– வி.ரேவதி, தஞ்சை