0,00 INR

No products in the cart.

இம் மாதிரி இணைய இதழ்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

இது குவிகம் மின்னிதழின் 100வது இதழின் முகப்பு 

 

– அழகியசிங்கர்

 

70களில் சிறுபத்திரிக்கைகள் காலம். ஏகப்பட்ட சிறுபத்திரிக்கைகள்   போட்டி போட்டுக்கொண்டு  வந்துக்கொண்டிருந்தன. உண்மையில் கொஞ்சம் பணம் இருந்தால்போதும் சிறுபத்திரிகை ஆரம்பித்து விடலாம்.

எழுபதுகளில் புயலை உண்டாக்கிய சிறுபத்திரிகைகள் ‘கசடதபற,’ ‘பிரஞ்ஞை,’  ‘கணையாழி,’ ‘தீபம்.’  ஆனால்   சிறுபத்திரிகையிலிருந்து        கற்று விலகிய கணையாழியும், தீபமும் நடுத்தர பத்திரிகையின்  ஸ்தானத்தை எட்டி நிலைத்துவிட்டது. ஆனால்  இது மாதிரி வெளிவருகிற       சிறுபத்திரிகைகள் பூரண ஆயுளுடன் வாழ்வதில்லை.  சில ஆண்டுகளிலேயே உதிர்ந்து போய்விடும்.

சிறுபத்திரிகை வருவதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது.  அதேபோல் நிற்பதற்கும் காரணம் கூற முடியாது.  கூட்டாக இயங்கும் சிறுபத்திரிகைகள் எழுத்தாளர்களுக்குள் ஏற்படுகிற கருத்து வேற்றுமையால் கூட நின்றுவிடும்.  ஆனால் தனிமனித செயல்பாட்டால் வரும்  சிறுபத்திரிகை  இன்னும் கொஞ்சக் காலம் தொடர்ந்து வரும்.  அதற்கும் பொருளாதார இம்சை வந்தால் தொடராமல் போய்விடும்.

இன்றைய இணைய இதழ் காலத்திலும் அதேபோல் ஒரு நிகழ்ச்சிதான் திரும்பவும் தொடருகிறது என்று நினைக்கிறேன். அன்றைய காலத்தில் புற்றீசல் மாதிரி தொடர்ந்த சிறுபத்திரிகைகள் இன்றும் இணைய இதழ்கள் மூலம் தொடருகின்றன. இன்றைய  இணைய இதழுக்கு முன்னோடி ‘திண்ணை’ என்ற பத்திரிகை.   திண்ணை தமிழில் முதல் இணைய இதழ் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு வருகிறது.  “புதிய திண்ணை” என்ற பெயரில் வாரம் ஒரு முறை வந்துக் கொண்டிருக்கிற பத்திரிகை இது. இதில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை.

எத்தனையோ இணைய இதழ்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன.  உதாரணமாக 20 பத்திரிகைகள் பட்டியல் என்னால் கொடுக்க முடியும்.  ஆனால் இதற்கு மேலேயும் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில்  ‘குவிகம்’ என்ற இணைய  மாத இதழ்  தன் 100வது இணைய இதழை வெளியிட்டு  இணைய நேரலையில்  ஒரு கூட்டம் நடத்தியது.  அந்த இதழை நடத்தி வருபவர்கள் சுந்தர்ராஜன்,கிருபானந்தன் என்ற இரு நண்பர்கள்.  இதழ்  ஆரம்பத்திலிருந்து  இதுவரை 2500 மின்னிலக்க பக்கங்கள் கொண்டு வந்துள்ளார்.  அந்தக் கூட்டத்தில் ச  முதல் இதழ் முதற்கொண்டு வெற்றிகரமாக இவ்வளவு தூரம் எப்படி வந்தது என்பதைக் குறிப்பிட்டுக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல்  சுந்தர் ராஜன்  பேசினார்.  அந்த இதழின் பல வாசகர்கள்- (வெளி நாடு வாசகர்கள் உட்பட) பங்கு  கொண்டார்கள்.

“குமுதம், விகடன், கல்கி, குங்குமம்  இவற்றின் இணைப்புதானே  குவிகம்” என்று நிறைய நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்.

குவிவோம், (GATHERING)  கவனம் (FOCUS) இவ்விரண்டையும் இணைப்பதே குவிகம் என்ற பொருளில்  நாமே உண்டாக்கிய சொல்தான் குவிகம்.

எட்டு ஆண்டுகளுக்கு மேல் வந்துகொண்டிருக்கும் மின்னிதழ்!.

மாதாமாதம் 25 டிஜிடல் பக்கங்கள் ! கதை- கவிதை- கட்டுரை – தகவல் – தொடர் – ஆடியோ – வீடியோ குறும்படம் இப்படி எல்லா வகையான வடிவங்களைத் தரும் மின்னிதழ்!

இப்போது  கிட்டத்தட்ட 20 பேர் மாதாமாதம் எழுதுகிறார்கள்.

குவிகத்தில் வந்த தொடர்கள் அனைத்தும் புத்தகமாகவும் வந்துள்ளன!

இன்னும் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல எழுத்தாளர் நண்பர் வட்டம் குவிகத்தில் இணைந்திருக்கிறார்கள்!

அவர்கள் துணையோடு இன்னும் பயணிப்போம்.

மனநலக் கல்வியின் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன.

மலையாளம், ஆங்கிலம், கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து சிறந்த கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறோம்.

தாகூரின் ‘நாட்டிய மங்கை’ நாடகத்தையும், காந்தியின் ‘கடைசி ஐந்து வினாடிகள்’ என்ற நாடகத்தையும் வழங்கினோம்.

அறுசுவை உணவைக் கவிதையாகவும், குதூகலம் தரும் குழந்தைப் பாடல்களை எழுத்திலும், வீடியோவிலும் தந்தோம்.

குவிகம் பொக்கிஷம் என்ற தலைப்பில் கிளாசிக் சிறுகதைகளை பதிவு செய்தோம்.

திரைக் கவிதை, திரை ரசனை என்று திரையில் தொடரும்.

இன்னும் எண்ணற்ற கதைகள் கவிதைகள் கட்டுரைகள். சிறப்பான அட்டைப்படங்கள்”

இவற்றையெல்லாம் நமக்கு அளித்த எழுத்தாளர்கள் யார் என்பதைப் பற்றியும் குவிகத்தின்  100 மாதப்  பயணத்தைப் பற்றியும் அந்த உரையில் அவர் சொன்ன இந்தச் செய்திகள்   நம் புருவத்தை உயர வைத்தது.

இது எப்படிச் சாத்தியமாகிறது?  ஒரு சிலர் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டே போக வேண்டும்.  அப்படி ஒரு சிலர் இருந்து விட்டால் பத்திரிகையைக் கொண்டு வந்து விடலாம்.  அது மட்டும் போதாது.  எழுதுபவர்களுக்குள் எந்த உரசலும் ஏற்படக் கூடாது. இது முக்கியம்.   இதை குவிகம் சாதித்திருக்கிறது.

இம் மாதிரி இணைய இதழ்களின் எதிர் காலம் எப்படியிருக்கும்?

இதற்கு ஜெயமோகன் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைக் கூறாமலிருக்க முடியாது.

“இன்னும் இங்கே வாசிப்பு 2 சதவீதம் பேரைக்கூட எட்டவில்லை. காப்பிரைட் கட்டுப்பாடு செய்து அதை மேலும் குறைப்பது இலக்கியம் ஒரு இலட்சியவாதச் செயல்பாடு என நம்பும் என் இயல்புக்கே எதிரானது. சென்ற பல ஆண்டுகளில் காலச்சுவடில் வந்த எந்தக் கதையாவது, கட்டுரையாவது பேசுபொருளாகிப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் அது பணம் கேட்டு பூட்டு போட்டு வைத்திருக்கிறது. எதையும் பகிர முடியாது.

இதனால் இணைய இதழ்கள் பல இலவசமாகத்தான் வாசிக்கக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைப்பதால் யாரும் இதில் மோகித்துப் படிப்பதில்லை.  பெரும்பாலோர் புரட்டுவதே இல்லை.  ஆனால் போகப் போக இதற்கும்  மவுசு ஏற்படாமல் இருக்காது. இனிமேல்  எல்லோரும் இணைய இதழ்களைப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உண்மையில் இணைய இதழ்களைப் படிக்க அலாதியான பொறுமை வேண்டும்.  அது நிச்சயம் கிடைக்கும்.

அச்சு இதழில் நமக்கு விருப்பமானதைப் படிப்பதுபோல் இணைய இதழ்களிலும் நமக்கு விருப்பமானதைப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒருவர் படிக்க வேண்டுமென்றால் எப்போதோ வந்த இணைய இதழ் கட்டுரையைத் தேடிப் படிக்க முடியும்.  ஆனால்  இந்த வசதி அச்சு இதழில் கிடையாது.  அச்சு இதழை எப்போதும் பத்திரப்படுத்த வேண்டும்.

இணைய இதழில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது.  வருடத்திற்கு ஒரு முறை இணைய இதழைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். புதுப்பிக்காவிட்டால் அதில் பதிவான டிஜிட்டல் பக்கங்கள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

‘மின்னம்பலம்’ ஒரு செய்தி பத்திரிகை.  நடுநிலையான செய்திகளைத் துல்லியமாக அளிக்கும் தமிழின் முதல் மின்னிலக்க பத்திரிகை. ஏழு வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் சுஜாதாவும் திருப்பூர் கிருஷ்ணனும் இப்பத்திரிகையின் ஆசிரியர்களாக இருந்து பார்த்துக் கொண்டார்கள்.  இன்று இந்த இதழ்  காணாமல் போய்விட்டது. அவர்கள் வெளியிட்ட எதையுமே இப்போது படிக்க முடியாது.  இந்தப் பிரச்னை எப்படி ஏற்பட்டது?

இதற்குக்  கரணம் இதழைத் தொடர்ந்து  நடத்தியவர்களின்  அக்கறையின்மை.

இன்றைய சூழ்நிலையில் காகித விலை, அச்சுக் கூலி எல்லாம் எதிர்பாராத நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.  அச்சு இதழைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  ஆனால் இணைய இதழைத் தயாரிப்பது வெகு சுலபம்.

யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம்.  ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள்.  இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1 COMMENT

  1. யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள். இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    //

    இவர்கள் அவரவர்களுடைய இணையத் தளத்தைத்தான் நடத்திவருகிறார்கள். தமிழ் எழுத்தாளர்களில் முதலாவதாக 1990-களில் தொடங்கியவர்களில் நானும், மறைந்த ஞாநியும் சுஜாதாவும் உண்டு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...