0,00 INR

No products in the cart.

‘கல்விக்கு’ என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? தி.மு.க. அரசால் “தாலிக்கு தங்கம்” திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா?
– மகாலட்சுமி, திண்டுக்கல்

! ஏழைப்பெண்களின் திருமணங்களுக்கு உதவ கலைஞரால்  அறிவிக்கப்பட்ட மூதலூர் ராமலிங்க அம்மையார் திட்டம்தான் காலப்போக்கில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாறியது.  ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு  தங்கம் வழங்குவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால்  அதையே ‘கல்விக்கு’ என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்.  இலவசங்களைத் தவிர்த்து இதுபோல சமூக மேம்பாட்டு திட்டங்களை அரசியல் கட்சிகளும்  மக்களும் வரவேற்க வேண்டும்.

? அமித்ஷா  ஆங்கிலத்திற்கு பதில் ‘ஹிந்தி’ என்கிறாரே?
– அ. சுஹைத் ரஹ்மான், திருச்சி

! இந்த நாட்டில் ஒரு போதும் ஹிந்தி மொழி  ஆங்கிலத்துக்கு மாற்றாக இருக்க முடியாது. இந்தியாவின் இளம் தலைமுறையினர்  ஆங்கிலமும் அறிந்த உலகக்குடிமகன்களாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

? தமிழணங்கின் படத்தைப் பார்த்தீர்களா?
– ரஞ்சனிப்பிரியன், ஈரோடு

! ‘அணங்கு’ என்ற சொல்லுக்கு ‘அரக்கி’ என்றும் ஒரு பொருள் உண்டு. ‘ஓவியர் அதை மனதில் கொண்டு வரைந்துவிட்டாரோ’ என எண்ணத் தோன்றுகிறது. அன்னையாக மதிக்கப்படும் அழகு தமிழுக்கு இப்படி அவலட்சணமா, வெள்ளைச் சேலையில்  அமங்கலமா, தலைவிரி கோலமா வரைய  வக்கர எண்ணங்கள் கொண்ட ஒரு ஓவியனால் மட்டுமே முடியும். அதை குறியீடுகள் என்று விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் இன்னும் மோசமானவர்கள்.

? ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி என்கிறாரே?
– வைத்தியநாதன், மன்னை

! அபத்தம். ஒரு காஷ்மீரியும்  பஞ்சாபியும் தமிழில் பேசிக்கொள்ள முடியுமா?   இரண்டு  வெவ்வேறு மொழி அறிந்தவர்களை இணைக்க உதவுவது அவர்கள்  இருவரும் அறிந்த பொது மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க முடியும்.  அது தமிழாக இருக்க முடியாது.

? இன்றைய பாகிஸ்தான்/ இலங்கை நிலை?
– சரஸ்வதி, திருமங்கலம்

! ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் நடக்கும்  ‘சர்வாதிகார ஆட்சிகள் நிலைத்ததில்லை’ என்பதுதான் வரலாறு.

 

? ‘டாணாக்காரன்’  படம் எப்படி ?
– குருமூர்த்தி, மதுரை

! படத்தின் டைரக்டர் தமிழ் இவர் ‘ஜெய் பீம்’ படத்தில் ‘குருமூர்த்தி’ என்கிற பெயரில் கொடூர இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தவர். இவர் 12 வருடம் அந்த இலாகவில் பணிபுரிந்துவிட்டு திரை துறைக்கு வந்தவர். தன் அனுபவத்தை அழகாக செதுக்கி உள்ளார்.

போலீஸ் துறையில் நமக்கு தெரியாத விஷயம் இவ்வளவு கடுமையான பயிற்சி. அதோடு அதிகாரிகளின் ஆணவ போக்கு. இவையெல்லாம் நமக்கு புதுசு.

தமிழ் மிக சிறந்த படைப்பாளி என்பதை தன் முதல் படத்தில் நிரூபித்து உள்ளார்.

? பெட்ரோல் விலை இறங்காதா?
– ப. முரளி, சேலம்

! இந்திய அரசு கடைப்பிடிக்கும்  எரிபொருள் விலைக்கொள்கை நீடித்தால் நிச்சயம் வாய்ப்பில்லை.

? கல்கியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறதே?
– நாராயணன், பாளையங்கோட்டை

!  “ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கல்கிதான். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மிகப் பெரிய சக்திகளை அவர் பத்திரிகையாளராக எதிர்கொண்டார். அவர் தன்னுடைய அரசியல் சார்புகளை மறைத்ததில்லை; ஆனால், தன்னுடைய இதழியலை அவை பாதிக்காமல் இயங்கினார். எழுத்தைத் தாண்டி, இசை, நடனம் எனப் பல்துறைகளில் கல்கியின் பங்களிப்பு விரிகிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கடந்த நூற்றாண்டில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை; குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் முதல் பாதி குறித்த எந்த அறிதலும் இல்லை. தமிழில் எது எழுதப்பட்டாலும் அது ‘ஆங்கிலத்தில் கிடைக்கிறதா’ என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் வெளியாகியிருக்கும் கௌரி ராம்நாராயணனின்  இந்த மொழிபெயர்ப்பு நூல், இன்றைய தலைமுறையினரில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கடந்த நூற்றாண்டைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும்; மேலும், கடந்த தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்குமான பாலமாகவும் இந்த நூல் இருக்கும்.”

? மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆரோக்கியம் தானே?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

!  அதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்களை சொல்லாமல், “வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க, ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தைப் பெற சிறு மாவட்டங்களாக பிரிக்கிறோம்” என்று சொல்லுகிறார்கள். ஆனால், அரசின் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என்பதே உண்மை.

?அண்மையில் ரசித்த ஜோக்?
– நரசிம்மன், ஶ்ரீரங்கம்

! இது ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் பார்த்தது.  “பார்க்குகளின் மேம்பாட்டு  வசதிகளுக்கான பட்ஜெட்டை  75% குறைத்துவிட்டார்கள்”  என்ற செய்தியை அறிவிக்கும்போது வெளியான படம் இது.

?  கடவுளின் தீர்ப்பு , நீதிபதியின் தீர்ப்பு , மக்களின் தீர்ப்பு  என்ன வித்தியாசம் ?
– ஆ.மாடக்கண்ணு, பாம்பன்குளம்

!  கடவுளின் தீர்ப்பு வெளியாக நிர்ணயிக்கபட்ட நாள் தெரியாது.  நீதிபதியின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளில் வெளியாகும். மக்களின் தீர்ப்பு வெவ்வேறு நாட்களில் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் அறிவிக்கப்படும். மூன்று தீர்ப்புகளுமே வெளியானவுடன் ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் தரக்கூடியவை.

? தர்மம், கூட்டணி தர்மம் என்ன வேறுபாடு?
– கண்ணன், நெல்லை

!  கூடா நட்பு கேடாகும் என்பது தர்மமாக இருக்கும் போது கூட்டணியில் எப்படி தர்மம் இருக்கும்.

1 COMMENT

  1. அரசின் திட்டங்கள் இலவசங்களைத் தவிர்த்த சமூக மேம்பாட்டிற்காக அமைவதை அரசியல் கட்சிகளும் மக்களும் வரவேற்க வேண்டும் என்று தராசார் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த கணிணி உலகத்தில் ஹிந்தி மொழி ஆங்கிலத்துக்கு இணையாக இருக்க முடியாது என்பது முற்றிலும் சரியே. கடந்த நூற்றாண்டில் என்ன நடந்ததென்று தெரியாமல் நிற் (தவிக்)கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு கௌரி ராம்நாராயணனின் அமரர் கல்கியின் வரலாற்று ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் சரியான புரிதலைக் கொடுக்கும் என்பதோடு தராசார் கூறியுள்ளது போல கடந்த தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்குமான பாலமாகவும் இந்த நூல் இருக்கும்.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...