0,00 INR

No products in the cart.

‘மனித நேயத்தை யாராலும் மடிய வைக்க முடியாது’

உங்கள் குரல்

 

விஜய் கிருஷ்ணா அவர்களின் முகநூல் பக்கம் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர் சோலை என்ற நந்தவனத்தில் பூக்கும் மலர்களை மிக அழகாக சொல்லி அவர்களுடைய பாசத்தையும் நேசத்தையும் வாசத்தையும்  எங்களை நுகர வைத்த  மிக அருமையான முகநூல் பக்கம். பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

டாக்டர் ஜோ.ஜாய்ஸ்  திலகம் எழுதிய சிறுகதை “கை குட்டை கனவு”  வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை. வார்டன் கேள்வி கேட்டது யதார்த்தமான விஷயம் . சஞ்ஜையின் தாயார் பதில் மூலம் தெரிந்துகொண்ட விஷயம் சூப்பர். முடிவு அருமை அருமை.
– கவிச்சுடர் எஸ்.வி.ரங்கராஜன்,  சென்னை

வ்வொரு வாரமும் நூல் அறிமுகப் பகுதியில் மிக அருமையான புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். படித்தவுடனேயே வாங்கி முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. கல்கிக்கு நன்றி.
– முனைவர் முருகவேல், திருச்சி

‘நம்பிக்கை’ கதை உக்ரைன் போரின் களத்தை கண்முன்னே காட்டியது. அவர்களின் நம்பிக்கையின் படையே இந்த தேசம் அவர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டதையும் சொல்லியிருக்கலாம்.
– உமா குருமூர்த்தி, பொள்ளாச்சி

‘பூனை, தாய், சித்தப்பா’ என்ற சுஜாதா தேசிகன் அவர்களின் கடைசி பக்கத்தை படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும், அவர் சொன்ன வரிகளை படித்ததும் கண்களில் நீர் துளிர்த்தது. “நாயினுடைய “ஆயி”னை கூட கையால் எடுத்துப் போடுபவர்கள், தன் அம்மாவை பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்களே” என்று எண்ணும் போது அந்த வாயில்லா ஜீவன்களுக்கு கொடுக்கும் மதிப்பைகூட  தன்னை ஈன்ற தாய்க்கு அவர்கள் கொடுக்கவில்லை என்று மனம் கனத்தது. ரசிக்க வைத்த பக்கம் பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், மதுரை

“நான் எல்லா உயிர்களிலும் உறைந்து உள்ளேன்” என்ற டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்களின் கீதை பற்றிய சாராம்சம் படித்ததும் மனதுக்குள் பக்தி ரசம் பெருக்கெடுத்தது. சிலந்தி தன் வாயால் வலையைப் பின்னி அதில் எப்படி தனித்து நிற்கிறது, அதுபோல் பிரபஞ்சத்தின் நாய்கன்  ஹிரண்ய கர்ப்பன் பிரம்மம், ஓம் என்ற பிரணவ நாமத்தில் கலந்து நிற்கிறது என்ற பிரணவம் எப்படி நம்மிடையே கலந்துள்ளது என்பதை தெளிவாக சொன்ன கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

கே.பாரதி அவர்கள் எழுதும் “தேவ மனோகரி” தொடர் கதையை படிக்கத் தொடங்கியதும் அதை முடித்து விட்டுதான் அடுத்த பக்கமே திரும்ப வேண்டும் என்ற அளவுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. “இதுதான் பதவி என்பதோ” என்ற மனோகரியின்  மன நிலையை படித்த போது அடுத்த வாரம் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் அருமையான தொடர்.
– பிரகதாநவநீதன், மதுரை

க்கத்து நாட்டு பாலிடிக்ஸ் கவர் ஸ்டோரி, ஆரம்பமே அசத்தல். ( நம்ம ஊரு அ.தி.மு.க.வைப் போல்…) ரன் அவுட்டான இம்ரான்கானை வச்சி ஆடி, சிக்ஸர் தட்டி விட்டார் சந்திர மெளலி. கிளாஸ்!

‘கல்லடி படாத காய்ச்ச மரம் ‘ பற்றிய கேள்விக்கு, பலாமரத்தை பதிலாக்கிய தராசாரின் கூர்மை பிளஸ் சாதுர்ய நயத்தை பாராட்ட வார்த்தை இல்லை.

க்ரைன் போரை மையமாக வைத்து படைக்கப்பட்டிருந்த ‘நம்பிக்கை ‘ சிறுகதை, எண்ணற்ற பிரச்னைகளால் மனித குலம் அலைக்கழிக்கப்பட்ட போதிலும் ‘மனித நேயத்தை யாராலும் மடிய வைக்க முடியாது’ என்ற நம்பிக்கையை, அழகாய் – அழுத்தமாய் ஊட்டியது சிறப்பு.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

பொன் போன்ற நேரத்தை வெட்டி பேச்சில் ஈடுபடுத்தாமல் எப்போதும் இறை சிந்தனையை அசைபோட்டுக்கொண்டே வாழ்ந்தால் அகந்தை நம்மை அணுகாது. அருளுரை அருமை.
– கலைமதி,  நாகர் கோவில்

வாரந்தோறும் மம்மூட்டி கலக்குகிறார்.  அவர் “நல்ல நடிகர்” என்பது தெரியும். ஆனால், “ஒரு நல்ல எழுத்தாளார்” என்பது கல்கியின் மூலம் அரிந்துக் கொண்டேன்.
– சம்பத் குமாரி, அம்பத்தூர்

கூட்டுக் குடும்பம் மறைந்த நிலையில், பெற்றோரையும்  தவிர்த்து விட்டு  நியூக்ளியர் ஃபேமிலியாகி ‘டே’ கொண்டாடுவதில் ஏது பயன். தம்பதியர்கள் இருவரும் தங்களது பெற்றோர்களை பேதம் பார்த்திடாமல் கூட வைத்து காப்பதே நல்லதொரு குடும்பம்.
மதுரை குழந்தைவேலு, சென்னை

 

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...