0,00 INR

No products in the cart.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் கமல்ஹாசன்

 

– வினோத்

 

மிழில் வெளியான பிரமாண்ட வரலாற்றுப் புதினங்களில் ஒன்று கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. பத்தாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சாகசப் பயணம், சோழப் பேரரசுக்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டி, எதிரிகள் சூழ்ச்சியுடன் செயல்படுவதை எதிர்கொண்டு பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடுவதுதான் இந்த கதை.

இது மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல் பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ராஜராஜ சோழன் வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனைப் புத்தகத்தில் மட்டுமே படித்தவர்கள், இந்தத் திரைப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க
செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. மிகப்பெரிய நாவலை சில மணி நேர படமாக்குவது இயலாத செயல். அதனால் பொன்னியின் செல்வன் கதையைக் குரல் மூலம் எடுத்துச் சொல்லித்தான் திரைக்கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.

மணிரத்தினம் இதற்காக  கமல்ஹாசனை அணுகியபோது மகிழ்ச்சியுடன் சம்மதித்து  படம் நெடுக கதையைச் சொல்லிக்கொண்டே வருகிறார். இதற்கான குரல்பதிவை  ரிகார்ட் ஸ்பீட்டில் முடித்துக் கொடுத்துவிட்டாராம் கமல்ஹாசன்.

ஏற்கெனவே ஏராளமான நடிகர்களைக் கொண்டிருக்கும் இந்தப் படத்துக்குக் குரல் கொடுத்ததன் மூலம் கமலும் பொன்னியின் செல்வனில் இணைந்திருக்கிறார். அதைத்தான் தலைப்பில் சொல்லியிருக்கிறோம்.

 

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மொழி‘பெயர்ப்பு’

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ‘ஆலியா பட்’ நடித்த ’டார்லிங்ஸ்’ என்ற திரைப்படத்தை சில நாட்கள் முன் ’ஓடிடி’யில் பார்த்தேன். ஹிந்தி தெரியாத காரணத்தால் என் விருப்பத்தேர்வாக ஆங்கிலத்தில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு...

தினந்தோறும் தேசியக் கொடி

0
  - எஸ். சந்திரமௌலி   இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அமுதத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் நமது மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டது மத்திய...

ஒரு குடும்பமல்ல ஒரு சமூகமே கல்விப் பெற்றதற்கு சமம்

0
முகநூல் பக்கம்   மஹாலட்சுமியின் முகநூல் பக்கத்திலிருந்து (மஹாலட்சுமி ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி கிராமப்  பள்ளி ஆசிரியர்)   "ஒரு குழந்தை Hostel கிடைச்சா மட்டும்தான் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தா உடனே அந்தக் குழந்தையை Hostelல Admission...

மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேரப் படித்துணர வேண்டிய நூல்

0
நூல் அறிமுகம்   1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்", உலகளவில் 9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு, அறிவியல் எழுத்திலும் உலகளவில் பாராட்டிலும் பிரபலத்திலும் ஒரு முக்கிய புத்தகமாகும். ஆல்பர்ட்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ்                                             ...