0,00 INR

No products in the cart.

சார்லி உனக்கு ஒரு சல்யூட்!

777 சார்லி சினிமா விமர்சனம்

 

– லதானந்த்

 

டிதடி, குத்து வெட்டுப் படங்களுக்கிடையில் தெருவோர மிருகங்களிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்ற அருமையானதொரு கருத்துடன் வந்திருக்கிறது 777 சார்லி.

நோய்வாய்ப்பட்ட நாய் ஒன்று, எஜமானரின் மேல் அதிகளவு பாசம் கொண்டிருப்பதும், போட்டியில் கலந்துகொண்டு பாராட்டுக்களைக் குவித்துக் கடைசியில் உயிரைவிடுவதும்தான் கதை.

“இருங்க…இருங்க… இதே போல ஒரு கதைதானே சமீபத்தில் வெளியான, ‘ஓ! மை டாக்’ திரைப்படத்திலும் இருந்தது?” என்கிறீர்கள்தானே? அதுவும் ஒரு வகையில் சரிதான்!

அதிலும் நாய்தான் முக்கியப் பாத்திரம் ஏற்றிருந்தது. அதற்குப் பார்வைத் திறன் இருக்காது. இருந்தாலும் கடைசியில் போட்டியில் திறமைகளைக் காண்பிக்கும். இதில் வரும் நாய்க்கு ரத்த நாளங்களில் கட்டிகள் தோன்றி ரத்தப் புற்றுநோல் அவதிப்படும். இதுவும் போட்டிகளில் கலந்துகொண்டு ஒரே சாகசத்தால் அனைவரையும் கவர்ந்துவிடும். இரண்டு படங்களிலும் பிறருக்குத் தெரியாமல் வீட்டில் நாயை மறைத்து வளர்க்கும் காட்சிகள் உண்டு. நாய்களுக்கான போட்டிக் காட்சிகள்கூட இரு படங்களிலும் ஒரே மாதிரி அமைந்திருக்கின்றன.

படத்தின் கதாநாயகன்: ரக்‌ஷித் ஷெட்டி. கதாநாயகி: சார்லி என்ற பெண் நாய். மிக நுணுக்கமாக அதற்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். பாசம், சிணுங்கல், குறும்பு, சோகம் எனப் பல வகையான உணர்வுகளையும் நாம் அன்றாடம் காணும் திரைப்பட நடிகர்களைவிட அற்புதமாய் வெளிக்காட்டுகிறது. சார்லி உனக்கு ஒரு சல்யூட்!

படத்தில் மிருக ஆர்வலராக வரும் சங்கீதா சிருங்கேரி, அந்த நாள் நடிகை லட்சுமியின் சாயலில் இருக்கிறார்; மேனரிஸங்களும் அப்படியேத்தானிருக்கின்றன.

படத்தில் காட்சிக்குக் காட்சி நாயின் ஆட்சிதான்! படத்தில் ஓரிரு காட்சிகளே வரும் இதர நடிகர்களும் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாகக் கால்நடை மருத்துவர், அவரது உதவியாளர், இட்லிக் கடைப் பாட்டி, நாயகனின் அண்டை வீட்டுச் சிறுமி, காவல்துறை அதிகாரி, பாபி சிம்ஹா எனப் பலரையும் சொல்லலாம்.

‘உதவிகேட்டு வர்ரவங்களை வெறுங்கையோடு அனுப்புவதில்லை; அவங்க திரும்ப வராதபடி கொடுத்து அனுப்புவேன்’ என்று ஆரம்பத்தில் இரும்பு இதயத்தோடு இருக்கும் கதாநாயகனைத் தனது அன்பால் மெழுகாக உருகவைத்துவிடுகிறாள் சார்லி.

படத்தின் உச்சக் காட்சியில் சார்லி என்ற அந்த நாய் தனது இரு கால்களையும் தூக்கி நன்றி சொல்லும்போது நெகிழ்ச்சியாகிவிடுகிறது.

படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரும் ஒரு வசனம்: If you are lucky, a dog will come in your life and change everything! உண்மையிலேயே மிகப் பொருள் பொதிந்த வாசகம் அது!

கன்னடப் படத்தின் டப்பிங் என்பது பாத்திரங்களின் முகங்களில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி உதட்டசைவுகள் மிக ஒழுங்காகக் சிங்க் ஆகியிருக்கின்றன.

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால் கூடுதல் சுவையாக இருந்திருக்கும்.

‘The tale of Dharmaraj in Kaliyug’ என்ற கதாநாயகனின் பேட்டி வெளியான பத்திரிகை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“பசிக்கும்போது சாப்பாடு கிடைக்காததைப்போல துரதிர்ஷ்டம் வேறு எதுவும் இல்லை” என்று போகிற போக்கில் வீசப்படும் பொருள் பொதிந்த உரையாடல்கள் நிரம்பியிருக்கின்றன.

மொத்தத்தில்: குடும்பதோடுகுழந்தைகளோடு பார்க்கக்கூடிய நல்லதொரு படம்.

1 COMMENT

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...