0,00 INR

No products in the cart.

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

 

ன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை.

மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும்.

“கவலைப்படாதே சகோதரா நம்ம ஓதைத்தெரு பிள்ளையார் பாத்துபாரடா”

‘காதல் கோட்டை’ பட பாடலை சொந்த மெட்டில் பாடிக்கொண்டே வந்தார்கள்.

M P L – ல் தன் தெரு டீம் ஐ செலக்ட் செய்த, உசிலமணி சைஸ், ஏத்தகுடி  எதிராஜ் ஐயங்கார் காச் மூச்ன்னு கோபாலிடம் கத்திக் கொண்டிருந்தார்.

“இரண்டு வருடமா உங்களை ஏலம் எடுத்து ஜெயிக்காம போயிடேங்க? இந்த தடவை ஜெயிக்கல அவ்வளவு தான்.”

தன் பெருத்த உடம்பை வைச்சுண்டு ,கையில் எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி. ஆர் மாதிரி,சாட்டையை சுழற்றின மாதிரி தன் அஞ்சு முழம் துண்டை ஒரு  முறுக்கு முறுக்கி ஒரு சுத்து சுத்தினார். நல்லவேளை யார் மீதும் படவில்லை. இதில் பாட்டு வேறு” நான் ஆணையிட்டால்  நீங்க ஜெயிக்கமா போனால்!.”

கோபாலுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. தன்னாலே வெளி வரும் தயங்காதே” என்று மாது பாடியதும் ஏத்தகுடி ஐயங்கார்க்கு இன்னும் கோபம் அதிகமானது.

மங்களூர்லருந்து  வந்த மாது, கூடவே ஒரு  வித்தியாசமான பேட்டும் கையுமா, சீனு வீட்டில் ஒரு வருஷமா கொட்டம் அடிக்கும் அவன்  தான். ஆஃப் தி பீல்ட் ஆன் தி பீல்ட் எல்லாமே.!!!

மாது சீனுவோட கசின்.

சும்மா பேருக்குதான் கேப்ஸ் சீனு.

MPL ன்னா மன்னார்குடி பிரீமியர் லீக். மூணு வருஷம் முன்னாடி ஊர்ல இருக்கிற பிக் ஷாட் எல்லாம் சேர்ந்து, இந்த MPL உருவாக்கி,.DCB கிட்ட அதாவது District Cricket Board கிட்ட பர்மிஷன் வாங்கி உருவானது.

ஸ்ரீனிவாசா  மெடிக்கல்  ஓனர், இரண்டாம் தெருவில் வசித்தாலும், அவர் தெரு பசங்களை, ஏலம் எடுக்காம  ஹரித்ரா நதி டீமை எடுத்தது. யாருக்கும் பிடிக்கல. குறிப்பா ஏத்தகுடியாருக்கு பிடிக்கல.

கட்ட கோபாலும், கேப்ஸ் சீனுவும் சேர்ந்து, ஸ்ரீனிவாசா மெடிக்கல் சம்பந்தி, ஏத்தகுடி எதிராஜ் அய்யங்காரை, உசுப்பிவிட்டு, தங்கள் தெரு டீமை ஏலம் எடுக்க வைத்து விட்டார்கள்.

மொத்தம் மன்னார்குடிக்குள் 10 டீம். T20 மேட்ச்.

A பிரிவில் 5  டீம்  B பிரிவில் 5 டீம் .

A பிரிவில் மேல இரண்டாம் தெருவுடன், ஹரித்திரா நதி.

டீம் முதல் லீக் மேட்ச்.

அந்த டீம் ஸ்டராங் . அதுவும் ஸ்ரீராம், வெங்கிட்டு, குமார் ராஜு போன்றவர்கள் வெரி ஸ்டராங் பேட்டிங் லைன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரண்டும் சேர்ந்த கலவை டீம்ன்னு சொல்லுவா.

அதுவும் குமார் இருக்கானே அவன் பேட் கம்மின்ஸ் மாதிரி, அதே உயரம்  . சீம் பௌலிங் 149.5 கி. மீ ஸ்பீட்.

வெங்கிட்டு வார்னர் மாதிரி.

“கவலைபடாதே சீனு. நாம ஜெயிக்கிறோம்”

“இதென்ன கிட்டி பில் விளையாட்டா!ஜெயிக்கறம்ன்னு சொல்றதுக்கு. மாதுவை கடித்தான் சீனு”.

“இதுவரைக்கும் எந்த மேட்ச்  அவங்கள நாம ஜெயிச்சு இருக்கோம்.? ”

“போன வருடம் ஒத்தை தெரு வத்தலும் சொத்தலுமா ஒரு டீம். அதைய கஷ்டப்பட்டுத்தான்  ஜெயிச்சோம்.” அதுக்கு முதல் வருடம் எல்லா டீம் கிட்டையும் செம அடி.”

“ஹரித்திரா நதி டீம் இரண்டு தடவை சாம்பியன் டா. இப்ப ஹாட்ரிக் அடிக்க போறங்கா!! ஒட்டு மொத்த மன்னார்குடியும், அவங்களுக்கு தான் சப்போர்ட்”.

“மன்னாரகுடி டைம்ஸ்  வேற, பக்கம் பக்கமா எழுதி புகழ்ந்து தள்ளி இருக்காங்க”.

“இருக்கட்டுமே. அதனால் என்ன?  “அசால்டா சொன்னான் மாது”. உன் மேல நம்பிக்கை வை.”

மாது ,”நம்ம டீம் ஒண்ணும் அவ்வளவு ஸ்ட்ராங் கிடையாது.  என் தம்பி ஸ்ரீராம். ஆப் பிரேக் ஸ்பின்.. பாஸ்ட்பௌலர்க்கு ஷாஹுல். லெகஸ்பினுக்கு அன்வர் பாட்சா. மீடியம் பேஸ் க்கு ஜேம்ஸ்..ஓமகுச்சி நந்து வயது 22சீனியர்அவன் ஒரு பார்ட் டயம் சீம் பௌலர் தான்.இப்போ நீ.”

“உன்னை நம்பிதான் இருக்கம்டா”

“யாமிருக்க பயமேன்” பேட்டில்  ஒட்டிருந்த ஸ்டிக்கர் வாசகத்தை காமிச்சான் மாது.

அப்படி இப்படின்னு ஒரு 15 பேர் தேத்தி, நல்ல நாளில் எதிராஜ் ஐயங்கார் முன்னாடி டீம் செலக்ட் ஆனது.

“எதிராஜ் அய்யங்கார் ரொம்ப நல்லவருடா”

மாது ஐஸ் வைக்க,

அவர் காலடி மண்ணை எடுத்து பூசி கொண்டனர்.

எல்லோரும்.

“எஜமான் காலடி மண் எடுத்து  “பாட்டை  பாட ஆரம்பித்தான்.மாது.

அய்யங்கார் முகத்தில் 1000 வாட் பல்ப் வெளிச்சம் மாதிரி சந்தோசம்.

முதல் மேட்ச் மாது சீனு ஸ்ரீராம்மூணுபேரும்வீட்டில் பழையதுபிளஸ்  மாவடு  ஊறுகாய்  புல்வெட்டு, வெட்டி விட்டு  கிளம்பும் போது ,

“போகாத போகாதே என் பசங்களா!! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!!!.  நீங்க தோக்கிற மாதிரி சொப்பனம் நான் கண்டேன்”சொப்பனம் கண்டேன்.!!!!.”

முகாரி ராகத்தில்

சீனுவோட அம்மா, இப்படி பாட,

‘ஐயோ என்ன மாமி? இப்படி அபசகுணம் மாதிரி பாடறேள்… கட்ட கோபால் அலற,

“போன வருஷம், அதுக்கு முதல் வருஷம் பாடினேன் தோத்துட்டு வந்தேள். இப்போ ஹாட்ரிக். அடிப்பேள்ன்னு ஒரு அல்ப சந்தோசம் அதான் . ஆட்டோமேட்டிக் சாவி கொடுத்த பொம்மை மாதிரி பாடிட்டேன்.ரிபிட்டு”

“சாரிடா கோபால். எங்க அம்மா  பாடின பாட்டுக்கு, வேணா ப்ராயசித்தமா, ஒரு வா பழையது ,சாப்பிட்டு போடா!!

கல் சட்டி பழையதுடா டேஸ்ட் டா இருக்கும்!!!..

“எங்கேடா அன்வர்  ஷாஹுல் ,,பாட்சா?”

“மூணு பேரும் ஓத்தைத்தெரு பிள்ளையார்கிட்ட ஆசிர்வாதம் வாங்க போய்ருக்காங்க?”

“என்னது !’ஆச்சர்யமாக கேட்டான் மாது.

“அவங்க மசூதிக்கு தானே போவாங்க?”

“‘டேய் மாது !ஒனக்கு தெரியாது ஒவ்வொரு மேட்சுக்கும், ஒத்ததெரு ஆனந்த் விநாயகர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு  வந்தாதான், அவங்களுக்கு. விக்கட் விழும்”

எதிர்பார்த்த மாதிரி ஹரித்தரா ந்தி டீமின்,   சீம் பௌலிங்கில் ,தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 120ரன் எடுத்தது.

இரண்டாம் தெரு.

மங்களூர் மாது மட்டும் 28 ரன்.டாப் ஸ்கோரர்.

ஸ்ரீராமின் ஆப் பிரேக்,  மாதுவின் ஹூக்ளியில் 110 ரன்னில் சுருண்டது. ஹரித் திரா நதி  3 விக்கெட் 28 ரன் எடுத்த மாதுமேன் ஆப் தி மேட்ச் ..ஷாஹுல் அன்வர்க்கு தலா 2 விக்கெட்.

“டேய் மாது !பாத்தியா ஆனந்த் விநாயகர் அருள் ஆசியை. வைட் டல்  விக்கெட் நான் எடுத்து இருக்கேன்.

“சாரிடா ஷாஹுல்.உன்னை இப்போ புரிஞ்சுக்கிட்டேன்.

அடுத்தடுத்து லீக் மேட்ச் கீழபாலம்டீம், கீழ மூணாம் தெரு, திருப்பாற்கடல் தெரு டீம் ஜெயிச்சது காரணம் மாது ஆலோசனைதான்.

இதோ செமி பைனல் அசேஷம் டீம்.

இந்த நேரம் பார்த்து ஸ்ரீராம் வயத்து வலின்னு  ஒதுங்க…

“டேய் நம்ம ஒல்லிக்குச்சி நந்துவை பௌலிங் போட சொல்லிசமாளிச்சுடலாம்” என்றான் மாது.

“அது முடியாதுடா”?

“அவனுக்கும் ஏத்தகுடிக்கும் ஆகாதுடா. அதான் இந்த நாலு மேட்ச் பூரா அவன் 12வது மேன்.”

“ஏண்டா என்ன தகராறு”?

“ஒண்ணுமில்லடா… அவர் பொண்ணு வசுமதிகிட்ட போய் ,”காதலிக்க கற்று கொள்ளுங்கள் என் அழகினலே  என் இதழ்களிலே”என்று பாடி இருக்கான்.

மறு நாளும் “என் அத்தை மக ரெத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே”ன்னு பாடி கிண்டல் பண்ணி  இருக்கான்.

” சொந்தம் தான்  இருந்தாலும், இவனோ ஓணான் ஒல்லிக்குச்சி. எப்பிடடா வசு இவனை லவ் பண்ணுவா சொல்லு?”.

வேற வழி இல்லாமல் சும்மா டீமில் வச்சுருக்கார்.

“அவன் உயரத்துக்கு ஜேசன் ஹோல்டர் மாதிரிடா! ஆனா உடம்பு சேப்புடா. புத்திசாலி கூட. பால் யார்க்கரா இல்ல புல் டாசான்னு தெரியாத மாதிரி, அவுட் ஸ்விங்கர் இல்லை , இன் ஸ்விங்கர் போட்டு தாக்குவான்”.

“நெட் ப்ராக்டிஸ்ல என் பேட் மூலம் டிபண்ட பண்ண முடியல. அவ்வளவு ஸ்பீட்” ஸ்டம்ப் தெரிச்சு ஓடுச்சு.  மாது சொன்னான்.

“திறமை இருந்தும் அவன் 11 பேர்ல் இருக்க கூடாதுன்னு சொல்லிட்டார்டா” ஏத்தகுடியார்.

நான் என்னடா செய்ய முடியும். புலம்பினான் சீனு.

“அவனை இது வரைக்கும் சரியா யூஸ் பண்ணவே இல்லை. இப்ப இந்த  செமில யூஸ் பண்ணலாம்”

நான் ஏத்த குடியார்கிட்ட  பேசிக்கிறேன்.

மாது இப்படி சொன்னதும் நந்துக்கு வாயெல்லாம் பல் தெரிய சிரித்தான்.

“மாப்ளே நீ செம பிளேயர் டா ! செமில நீ விளையாட போறே”.!!!

மாது கணிப்பு சரியா ஒர்க் அவுட் ஆச்சு.

ஒவ்வொரு ஒவர்  பால் போடும் போது, ஓல்லிக்குச்சியை,

தன் உயரத்துக்கு குனிய சொல்லி, மாது டிப்ஸ் கொடுத்தது வீண் போகலை.! ஓமகுச்சிக்கு  6 விக்கெட்.

அசேஷம் டீம் 90 ரன் ஆல் அவுட்.

மாது ஒல்லிக்குச்சி ஓப்பனிங் இறங்கி 6 ஓவர்ல மேட்ச் ஓவர்.மேன் ஆப் தி மேட்ச் ஓல்லிகுச்சிக்கு.

வாழ்நாளில் கிரிக்கெட்ல தான் வாங்கின,  சின்ன வெள்ளி கப்பை,  நூறு தடவ முத்தம் கொடுத்து இருந்தான் ஓல்லிகுச்சி நந்து.

ஏத்த க்குடி எதிராஜ் ஐயங்கார்க்கு சந்தோசம் தாங்கலை! தன் மருமான் மூலம் பைனல் வந்ததுக்கு.

“இப்போ ஹரித்திரா நதி டீமும் பைனல்.

நிச்சயம் நம்மள பழி வாங்குவாங்க”

மாது அலட்டிக்கவே இல்லை

“நாம் இருக்க பயமேன் ன்னு” பேட் டில் எழுதி இருந்த ஸ்லோகனை மீண்டும்  காமிச்சான்.

“இது சாதாரண பேட் இல்லாடா .மங்குஸ் பேட்”.

“அப்டின்ன்னா என்னடா?”

அப்ப்பவே கேக்கனும்ன்னு நினைச்சேன் ஒரு வருஷமா நீ சொல்லவே இல்லை.

சீனுவும் மத்தவங்களும் நச்சரிக்கவே

“ஒரு sprite ஆர்டர் பண்ணு அப்பதான் ஒரு sprit டு டன் சொல்வேன் “என்றான் மாது…

நன்றி கடனா ஓல் லிக்குச்சி ஓடிப்போய், நாடார் கடையில் ,sprite வாங்கி கொடுக்கspritவர ஆரம்பித்தது மாதுவுக்கு.

கட கடவென குடித்துவிட்டு,

இந்த பேட் மூலம்,  டிபன்ஸ் விளையாட முடியாது. ஷாட் தான். அடிக்க முடியும்.

2010 மே த் யூ ஹைடேன் சி. எஸ்.கே க்கு டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரா விளையாடினப்ப யூஸ் பண்ணி 43 பாலில் 93ரன் எடுத்தான்..

“டே  நீ  சமீபத்தில். 83 படம் பார்த்தல்ல.

ஜிம்பாபாவிக்கு எதிராக 175 ரன்கபில்தேவ் அடிச்சது இந்த மங்கூஸ் பேட் மூலம்தான்.

காஷ்மீர் போனபோது  வாங்கினது.

“இந்த பேட் வைச்சு தான்,ஒல்லிக்குச்சிக்கு பிராக்டடீஸ்கொடுத்து, செமி பைனல்விளையாடினான்.

இப்போ பைனல் செகண்ட் டவுன் இறக்க போறேன்”.

“வேண்டாம்டா விஷ பரிட்சை?”  கட்ட கோபாலும் சீனுவும் சொன்னதை காதில் வாங்கவில்லை மாது.

“அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா”!

கேட்டு கொண்டிருந்த ஒல்லிக்குச்சி உணர்ச்சி மேலிட அழ ஆரம்பித்தான்.

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்னு” பாடிட்டு போயிட்டான்.

“ஸ்ரீராம் வயத்து வலி தீரல. இப்ப என்னடா பண்றது?

மாட்ச்க்கு முன்னாடி 200 கிராம் மொச்சகொட் டை சுண்டல் வயிறு முட்ட  சாப்பிட்டா இப்படித்தான்?.”

ராத்திரி அவன் தொப்புள் சுத்தி 100 எம்.எல்,  விளக்கெண்ணை தடவிட்டு தூங்க சொல்லு . எல்லாம் சரியாயிடும். காலையில் பிரஷ் ஆயிடுவான். எதுக்கும் அவன் கையிலே ஒரு பால் கொடு. ராத்திரி பூரா மேட்ச்சை நினைச்சுண்டு  பாலை கையில் வைச்சுண்டு ரிஸ்ட்.  மூலம்  முறுக்கிக்கிட்டு இருப்பான்.

இது ஒரு சைக்காலசி ட்ரிட்மெண்ட்”.

“பாரேன் நாளைக்கு பாலும் கையுமா எழுந்துப்பான்.”

மாது சொன்னபடியே நடந்தது.

மறுநாள்  சாயந்திரம் சீனு, அம்மாவிடம்,  “இது பகல் இரவு மேட்ச்ம்மா.  மறுபடியும் அதே பாட்டு பாடி குங்குமம் இட்டு விடுமா!”

” உன் பாட்டு நெகட்டிவ் ஆக இருந்தாலும், நீ பாடினா டபுள்  பாசிட்டிவு மாதிரி நாங்க ஜெயிப்போம் நீ அதே பாட்டை பாடு…”

“பாடு சாந்தா பாடு சாந்தா.”

கொஞ்சும் சலங்கை ஜெமினி சாவித்திரியை கெஞ்சின  மாதிரி, அம்மா பேரை , சந்தடி சாக்கில் சொல்லி கெஞ்சினான் சீனு.

முகாரி ராகத்தில் அதே பாட்டை,  அம்மா பாட, வீறு நடை போட்டு கிரௌண்டுக்கு   போனது மேல் இரண்டாம் தெரு டீம்.

டாஸ் ஜெயிச்ச ஹரித்திரா நதி டீம் , சேஸ் பண்ணி ஜெயிக்கலாம்ன்னு பௌலிங் செலக்ட் செய்தது.

Dew பனிப்பொழிவு  இருக்கும். தங்களுக்கு சாதகமா இருக்கும்ன்னு நினைச்சங்கா.

ஒரு சேஞ்சுக்கு சீனுவோட அன்வர்  இறங்க, முதல் ஓவர்ல இரண்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்அவுட். பூஜ்யத்துக்கு 2 விக்கெட் அவுட்.

3வது  ஆளா இறங்கிய மாதுவும் ,4 வது ஆளா இறங்கிய ஒல்லிக்குச்சியும், நாலா பக்கமும் அடிச்சு 178 ரன்க்கு ஆல் அவுட். மாது மட்டும் 68 ரன். சப்போர்ட் பண்ணிய ஒல்லிக்குச்சி 50 ரன்.

179 ரன் எல்லாம் ஜுஜுபி ஹரித்திரா நதி டீமிக்கு. எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள்.

ஓப்பனிங் ஷாஹுல் அருமையான பௌலிங்.10 ஓவரில் 70 ரன் ஆனா விக்கெட் விழாமல் இருந்தது.

ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கட்ட கோபால்,  தானே வாட்டர் பாட்டிலை எடுத்து கொண்டு ஓடி, மாது சீனு ஓல்லிக்குச்சி,ஸ்ரீராம்.

அன்வர் எல்லார்கிட்டையும் சீரியஸ் டிஸ்கசன் பண்ணினான்.

“மிச்சம்  10 ஓவர்ல  பொளந்து கட்டுவாங்களே”.

மாது   போட்ட, இன்ஸ்விங்க்ர் ஒர்க் அவுட் ஆகி ஒரே ஓவரில் 2 விக்கெட். விழ, மாது அடுத்த ஓவர் ஒல்லிக்குச்சியை கூப்பிட்டு பௌலிங் போட சொல்ல  ரிசல்ட் கை மேல.

ஒல்லிக்குச்சி நந்துவின்  யார்க்கர் அடுத்தடுத்து 3 விக்கெட் கொடுத்தது.

ஸ்ரீராம் அன்வர் தலா இரண்டு விக்கெட்.

20வது ஓவர்12 ரன் தேவை…ஷாஹுலை டெத் ஓவரில்  கொண்டு வந்தான்.மாது.

ஒல்லிக்குச்சியை, லாங் லெக் பௌண்டரியில் நிக்க சொன்னான்.

“கோயில் புளியோதரை வாங்கற மாதிரி இரண்டு கையையும் தயாரா வைச்சுக்கோ.கேட்ச் கோட்டை விட்ட தொலைச்சுடுவேன்”.

ஷாஹுலிடம்,   குமார்  லெப்ட் ஹாண்ட் .நீ ஆப் சைடுல் போடு .

முதல் 3 பால் டாட் பால் ஆனது டென்ஷன் ஆனது..4வது பால் ஷார்ட் பிச்சு 4 ரன் 5வது பால் 2 ரன்.கடைசி பால் 6 ரன்தேவை.

பிள்ளையாருக்கு சந்தன காப்பு சாத்தறேன்  ஷாஹுல் வேண்டிக்கொண்டான்.

எப்படியாவது ஜெயிக்கணும்.

ஒட்டு மொத்த கிரௌண்டும் மயான அமைதி.திக் திக்கென்று இருந்தது.

யார் ஜெயிப்பா?

மாதுவும் சீனுவும்  மறுபடியும்  ஷாஹுல் கிட்ட வந்து ஷார்ட் பிச்சு பால்  நல்ல  லெங்க்த் ல போடு..  கம் ஆன் சியர்ஸ்.

சீனு  நீ லெக் சைடு நில்லு.நான் டீப்ல நிக்கறேன். ஒல்லிக்குச்சி லாங் லெக்கில.

எப்படியும்குமார் சிக்ஸர்க்கு தூக்கி அடிப்பான்.

மாது எதிர்பார்த்த மாதிரி குமார்  சிக்ஸர்க்கு, தூக்கி அடிக்க, பால் பௌண்டரிக்கு 5 அடி முன்னே நின்றுந்த ஒல்லிக்குச்சி கையில், லட்டு மாதிரி  விழ!!!

பிறகென்ன!

ஹரித்திரா நதி டீம்  173 ரன்னுக்கு  ஆல் அவுட்

ஆனது..5 ரன்னில் தோல்வி.

இரண்டாவது முறையா ஒல்லிக்குச்சி க்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்.

முதல் முறையாக MPL கப் சீனு மாது வசம்.

ஏத்தகுடி எதிரராஜ் அய்யங்காருக்கு  சந்தோசம் பிடி படலை.

எல்லாத்துக்கும் காரணம் ஒல்லிக்குச்சிதான் . 50 ரன் 4 விக்கெட் அதோட மங்குஸ்  பேட்டிங் டெக்னிக் தான்னு தல மேல கொண்டாடினார்.

மேட்ச் பார்க்க வந்த வசு கையை ஒல்லிக்குச்சி கையோடு சேர்த்தார்.

ஒல்லிக்குச்சி க்கு மட்டுமல்ல .மொத்த டீமிக்கும் ஆச்சர்யம்.

செமி யிலும் பைனல் மேட்ச் லும்  ஒல்லிக்குச்சி யை சேர்த்து, ஒருவேளை அவன் தன் திறமையை ப்ரூப் பண்ணி, கப் ஜெயிச்சுட்டா, வசுவை  நந்துக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ஓகே வா , என்று ஏத்தகுடி அய்யங்கார் கிட்ட மாது ,தையரிமாகேட்டதும்,  அவரும்நல்ல வேலை நல்ல சம்பளம் தான். ஆனா ஜெயிக்க முடியுமா?

ஜெயிச்சா ஓ.கே. தான் என்று சத்தியம் பண்ணியதும் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

“எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்ன்னு” பாட்டு பாடி நந்துவும் வசுவும் கிரௌண்ட் டில் ஓட, அவர்களை மற்ற பிளேயர் கள் துரத்தினார்கள்.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...