சர்வதேச விருது வென்ற இந்தியப் புகைப்படம்
– வினோத்
புகை மேகம் சூழ, அடுப்பில் வேலை செய்யும் தெரு உணவு விற்பனையாளரின் புகைப்படம் ஒரு பெரிய உணவு புகைப்பட விருதை வென்றுள்ளது.
உணவு தயாரிக்கும் நிகழ்வுக்கான சர்வதேச புகைப்படம் போட்டி ஒன்று பிங்க் லேடி புட் போட்டோகிராபர் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்தப் போட்டியில் முதல் பரிசையும் விருதையும் பெற்றவர் இந்தியர். வங்களாத்தைச் சேர்ந்த தேவ தத்தா சக்ரவர்த்தி அவர் எடுத்த படம் இது.
உலகெங்கிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. நேரடி ஒளிபரப்பு நிகழ்வு மூலம் வெற்றியாளர்கள் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டனர்.
அடர்ந்த புகை மண்டலம், அதை ஊடுருவும் விளக்கொளி, உணவு தயாரிப்பவரின் முகத்தில் உள்ள உணர்ச்சி என இதில் பல விஷயங்கள் உள்ளன.””கபாப்கள் சுடப்படுவதை உறுதிப்படுத்தும் நறுமணத்துடன் தெறிக்கும் தீப்பொறிகள், அந்த நறுமணமே சுவைக்குக் கட்டியம் கூறுகிறது.””இந்த படம், மென்மையான ஆனால் சக்தி வாய்ந்தது, நம் உள்ளத்தைத் தொடுகிறது.” என்கிறது விருது குறிப்பு.