0,00 INR

No products in the cart.

பக்தி என்றால் என்ன?

அருள்வாக்கு

காஞ்சி மகாபெரியவர்

 

க்தி என்றால் ‘பரமாத்மாவை சகுணமான, சாகாரமான [உருவம் கொண்டதான] ஒரு தேவதா மூர்த்தியாக நினைத்து அன்பு செய்வது’ என்பதே பிரசித்தமான பொது அபிப்பிராயம். சும்மா மானசீகமாக அன்பு செய்வதென்றால் முடியவில்லை என்பதால் பூஜை, ஆலய தரிசனம், ஸ்தோத்ர பாராயணம் என்றெல்லாம் காரியத்தைச் சேர்த்துச் செய்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். அது சரிதான்; தப்பென்று சொல்ல முடியாது. ஆனாலும் ஹையர் க்ரேடில் நினைக்கிறபோது சாகாரமாக, அதாவது உருவமாக பரமாத்மாவை ஒரு தேவதையாக நினைத்தால்தான் அன்பு செய்ய முடியும் என்றில்லாமல், நிராகாரமான – அருவமான – பரமாத்மாவாக அவன் இருக்கும் போதும் அன்பு செய்யப் பழகி அதில் தேறவேண்டும்.

சாகாரமாயுள்ளபோது இப்படியிப்படி கண்ணு, மூக்கு, கை – நாலு கை, எட்டு கை – இப்படியிப்படி வஸ்திர பூஷணங்கள் என்று கண்ணுக்குத் தெரிவதாலும், அந்த மூர்த்தியின் குண கணங்களையும் மகிமைகளையும், பரம கருணையையும் புராணங்கள், ஸ்தோத்திரங்கள் முதலியவை தெரிவிப்பதாலும் அப்படிப்பட்ட ஒரு மூர்த்தியிடம் அன்பு வைக்க முடிகிறது. அன்புதான் பக்தி. பல தினுசான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈஸ்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம், மனசுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட சகுணமூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் சுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது, மனசுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.

நம் நிலையில் அது முடியாமல் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். நமக்குண்டான மட்டில் ஒரு சாகாரமூர்த்தி, பூஜை, க்ஷேத்ராடனம் என்று பண்ணிவிட்டுப் போவோம். ஆனால் சாதன சதுஷ்டயத்தில் முன்னேறி ஸம்ஸ்க்ருதமான – அதாவது, refined , [சற்று யோசித்து] பண்பட்ட (பண்பட்ட என்பது நல்ல வார்த்தை; யோசித்தால்தான் வருகிறது! பண்பட்ட) சாதகர் களால் நிராகாரத்திடமும் நிர்குணத்திடமுங்கூட அன்பு வைக்க முடியும். ஏனென்றால் அந்த ஸ்டேஜில் எதனிடம் அன்பு என்றோ – அந்த எதுவோ ஒன்றிடம் நல்ல ரூபம், குணம், லீலை என்றெல்லாம் இருப்பதே அதனிடம் நமக்கு அன்பை உண்டாக்கும்; இப்படி ஒன்று வெளியில் இருந்தாலே அதன் பொருட்டாக நம்மிடம் அன்பு உண்டாகும்; இல்லாவிட்டால் இல்லை என்றோ – விஷயம் போகாமல் தானாகவே ஸ்வாபாவிகமாக அன்பு உண்டாக முடியும்.

முடியக்கூடிய அதை வாஸ்தவமாகவே சாதிக்காவிட்டால் அந்தப் பண்பட்ட நிலையிலேகூட அத்தனை சாதனையும் அகங்காரத்தில் போய் முட்டிக் கொண்டு முடிந்துவிடும். செய்த சாதனைக்காக மோக்ஷ சித்தி
கிடைக்குந்தான் என்றாலும் அது இப்போது என்றில்லாமல் எப்போதோ கோடி, கோடி வருஷத்திற்கப்புறம் ஏற்படக்கூடிய ஆத்யந்திக ப்ரளயத்தின்போதுதான் கிடைக்கும்படியாகத் தள்ளி, ரொம்பத் தள்ளிப் போவதாக ஆகிவிடும்! இப்போது நான் சொன்ன ‘அகங்காரம்’ என்ன, ‘ஏதோ ஒரு ப்ரளயம்’ என்ன என்பதற்கு அப்புறம் வருகிறேன்! முதலில் அன்பு என்னவென்று தெரிந்து கொள்வோம்.

1 COMMENT

  1. ஈஸ்வரனிடம் வைக்கும் அன்பு தான் பக்தி என்பதை எளிமையாக சொன்னதோடு நில்லாமல், மனதுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வைக்கும் உயரிய நெறியும் நமக்கு சாத்தியம் தான் என்பதை அருமையான முறையில் சித்தரித்து,
    அகங்காரத்தை நுட்பமாய் எச்சரித்து, பண்படுத்தும் காஞ்சி மாமுனிவரின் அருள்வாக்கை, அபாரம் என்று சொல்லவா? அற்புதம் என்று சொல்லவா? அமுதம் என்று சொல்லவா?

    நெல்லை குரலோன்
    பொட்டல்புதூர்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

நாய் ஜென்மமா? மனித ஜென்மமா?

4
அருள்வாக்கு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார்   எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும், பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்....

சரீர தாத்பரியம்

1
  அருளுரை காஞ்சி மகாபெரியவர்   ’தண்டம்’ என்றால் ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது...

இறைவனிடம் கொள்ளும் அன்பே நித்தியமானது

2
அருள்வாக்கு சுவாமி ராமதாஸர்   மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது. ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும்...

தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.

3
அருள்வாக்கு - சுவாமி சின்மயானந்தர்   ஓர் உதாரணமாக “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ‘நமோ’ என்று சொல்லுவது ‘காலில் விழுந்து வணங்குகிறேன்’ என்பதைக் குறிப்பதாகும். காலில் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்துவங்களைக்...

அகமும் புறமும்

3
அருளுரை காஞ்சி மகாப்பெரியவர்   மனுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால்...