spot_img
0,00 INR

No products in the cart.

பாரதியைப் பயில்வோம். பாரதியராக என்றும் எங்கும் வாழ்வோம்

பாரதி 100

 

மாலன்

 

ன்னுடைய மொழியை நேசித்தார்; ஆனால் மற்ற மொழிகளை வெறுக்கவில்லை. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்கவும், மராத்தியர் கவிதைக்குப் பரிசளிக்கவும், இந்திப் பாடங்களை வெளியிட்டதும், வங்கத்திலிருந்தும், பிரெஞ்சிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்தமை இதற்குச் சான்று. இனிமையான தமிழ் மொழி வலிமையானதாகவும் இருக்க எட்டுத் திக்கிலிருந்தும் கலைச் செல்வங்கள் கொண்டு வந்து சேர்க்க முயன்றார்.

தன்னுடைய நாட்டை நேசித்தார்; அதே நேரம் உலக நடப்புகளையும், அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டியவற்றையும் சொல்லி வந்தார். இங்கிலாந்து, துருக்கி, இத்தாலி, பெல்ஜியம், ரஷ்யா, சீனம், பிஜி ஆகியவை பற்றி அவர் எழுதியவை சான்று.

தன்னுடைய மதத்தை மதித்தார்; ஆனால் மற்ற மதங்களை இகழவில்லை. அல்லா, ஏசு, குரு கோவிந்த சிங் ஆகியோர் பற்றி எழுதிய பாடல்கள் சான்று.

தமிழின் தொன்மை குறித்துப் பெருமை கொண்டார் (தென்றலுடன் பிறந்த பாஷை).ஆனால் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் , பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றை உடைய காவியம் செய்து தருவோர் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான் என்று நம்பினார். இலக்கணம் துறந்த கவிதைகளை எழுதிப் பார்க்கவும் தவறவில்லை.

கம்பனை, இளங்கோவை, வள்ளுவனைப் போல் எங்கணும் கண்டதில்லை என்று சிலாகித்தார். ஆனால் ஷெல்லிதாஸனாகத் தன்னைக் கருதிக் கொண்டார்.

கவிதையில், இதழியலில் புதுமைகள் செய்த அவர், சிறுகதைகளில் மேல்நாட்டு இலக்கணங்களை மறுதலித்து நம் நாட்டு கதை சொல்லல் மரபுகளை கைக் கொண்டார்.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற அத்வைதக் கொள்கையை ஏற்ற அவர் அதன் மாயாவாதத்தை நிராகரித்தார்.

அரசியலிலே ஈடுபட்டு களமிறங்கினார். ஆனால் அதிகாரப் பதவிகளை நாடவில்லை.

பத்திரிகைகளை ஒரு தேசத்தினுடைய ஞானத்தின் அடையாளம் எனக் கொண்ட அவர் இதழியல் அறம் பிறழ்ந்தபோது அவற்றைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை.

பாரதியைப் பயில்வோம். பாரதியராக என்றும் எங்கும் வாழ்வோம்.

*பாரதியர் – இந்தியர் 

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

என் காதல் ஒரு கள்ள நாணயம்

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில் - 3 தமிழில் கே.வி.ஷைலஜா   நானும் பருவ காலத்தில் காதலித்திருக்கிறேன். இரண்டு நாட்கள் பார்ப்பதும், மூன்றாம் நாள் பேசிவிடத் துடிப்பதும் சாதாரண காதல்தான். “ஷக்கூர்பாவா என்ற உன்னத மனிதர்தான் அதெல்லாம் காதல்...

மைலாப்பூரில் இட்லி கச்சேரி

  சுஜாதா தேசிகன்                                             ...

எதையும் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

0
“உயிரோடு உயிர் சேர்வதே அன்பு” என்ற உண்மையை, செஸ், கிரிக்கெட் போன்ற எளிய உதாரணங்கள் மூலம் எடுத்துக்கூறி, மிகப் பெரிய தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தது, மஹா பெரியவரின் 'அருள் வாக்கு'! - ராமச்சந்திரன்,  நாமக்கல் எஸ்.பி.முத்துராமன்...

அப்பா ரொம்பக் கோபக்காரர்

1
சிறுகதை                                               ...

தமிழ்நாட்டையே மறைமுகமாக நீங்கதானே ஆளுறீங்க?

1
விமர்சனம் - லதானந்த்   கூர்மையான சங்கீத விமர்சகர்கள் சிறந்த பாடகர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையல்லவா? அதைப் போலவே பலப் பல திரைப்படங்களை நார் நாராகக் கிழித்துத்தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருக்கும் ‘ஆன்டி இண்டியன்’...