நினைத்தால் கனவுபோல் உள்ளது

நினைத்தால் கனவுபோல் உள்ளது
Published on

முகநூல் பக்கம்

ப்படி விதைக்கப்பட்டது இந்த எண்ணம் எனத் தெரியாது. படிக்கணும் அவ்வளவுதான் தெரியும். ஆடு மேய்க்கும்போது, நடக்கும்போது, விளையாடும்போது எப்பவும் அதே எண்ணம்.

படிப்பு வாசனையற்ற பரம்பரையில் கொஞ்சம் எழுதப்படிக்கத் தெரிந்த ஐயா! எழுதவே தெரியாவிட்டாலும் ராமாயணம், மகாபாரதம் முதல் படித்தறிந்த அம்மா. உள்ளூர் பள்ளிக்கூடம். ஆசிரியர், தம்பி, அரசாங்கம் இப்படி எல்லோரும் உதவ முறையான வழிகாட்டல் இல்லாமல் ஒரு வழியாக பி.எஸ்ஸி கெமிஸ்டரி படிச்சாச்சு. அப்புறம்? பெரிய கேள்விக்குறி.

என் கல்லூரிக்குப் பக்கத்திலேயே சட்டக்கல்லூரி. கொஞ்சம் சத்தமா நல்லா பேசிக்கொண்டிருந்ததால் எங்கள் தோழிகள் 'இப்படி பேசறவ பேசாம வக்கீலுக்குப் படி. பக்கத்துலதான இருக்கு' என சொல்லவும் 'படித்தாலென்ன!'  எண்ணம் வந்தாச்சு. யார்ட்ட போறது? கேக்கறது? ஒரு வெங்காயமும் தெரியாது.

கூடப்பொறந்தவன் ஆராஞ்சு, அய்யா, மாமா, கட்டிக்கப்போறவர்னு அனுமதி வாங்கி ஒரு வழியா அப்ளிகேசன் போட்ட பிறகு தம்பி சொன்னாரு "என்ட்ரன்ஸ் எழுதணும்க்கா" எதே? என்ட்ரன்ஸா? அப்படினா? குழம்பி, அப்புறம் மாமா(மாமனார்) ஒரு கோச்சிங் க்ளாஸ் கண்டுபிடிச்சு அவரு இரண்டு, நாள் கூடப்பிறந்தவன் ஒரு நாள்னு கூட வந்தார்கள். கடேசில என்ட்ரன்ஸ் எழுத தம்பி கூடவந்தான். ஒரு வழியா எப்படியோ பாசாவி, வக்கீலாவி என் தெய்வமான சீனியர் கற்றுக்கொடுத்து கடந்த பயணத்தில் 32 வருடங்கள் ஓடி மறைந்ததை நினைத்தால் கனவுபோல் உள்ளது.

இத்தனை பேர் உதவி வீண்போகவில்லை. என் வக்கீல் தொழிலில் இப்பொழுது அரசு வழக்கறிஞர் ஆனது ஒரு மகுடம். காலம் எனக்கு எப்பப்ப எது தேவையோ அதை அளித்துக்கொண்டிருக்கிறது.

நம் கனவுகளான நினைவுகளை நினைக்க ஒரு நாள் தேவைதான்.

வழக்கறிஞர் சமுதாயத்துக்கு வக்கீல் தின வாழ்த்துகளும் பேரன்பும்!

வாழ்க வளமுடன்!

பூமதி கருணாநிதி முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com