உங்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது நீங்கள்தான்

உங்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது நீங்கள்தான்
Published on

வினோத்

21 ஆண்டுகளுக்குப் பின் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற இந்தியா.
'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்துக்காக 70ஆம் ஆண்டாக நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.
இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.

2017இல் 'மிஸ் சண்டிகர்' பட்டத்தை வென்றவர் ஹர்னாஸ் சந்து.

17 வயது முதலே மாடலிங் செய்து வரும் ஹர்னாஸ் சந்து, சில பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது குடும்பம் சண்டிகரில் வசிக்கிறது.பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.

2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் ஆண்ரியா மேசா,  ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.

21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000வது ஆண்டில் லாரா தத்தா வென்றிருந்தார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார். தமது பெற்றோர், கடவுள் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.

கடைசி சுற்று கேள்வி: ஹர்னாஸ் சந்து பதிலென்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய அழுத்தங்களுக்கு அவர் அளிக்கும் ஆலோசனை என்ன என்று போட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "தங்களை நம்ப வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய அழுத்தம். நாம் வேறுபட்டவர் என்பதை அறிவது உங்களை அழகாக்கும். பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு, நம்மைச் சுற்றிலும் நடப்பவை பற்றி பேசத் தொடங்குவோம்," என்று பதிலளித்தார் ஹர்னாஸ் சந்து.

"உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழிநடத்துபவர் நீங்கள்தான். உங்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது நீங்கள்தான். நான் என்னை நம்புகிறேன்… அதனால்தான் இங்கே நிற்கிறேன்."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com