0,00 INR

No products in the cart.

எதையும் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

“உயிரோடு உயிர் சேர்வதே அன்பு” என்ற உண்மையை, செஸ், கிரிக்கெட் போன்ற எளிய உதாரணங்கள் மூலம் எடுத்துக்கூறி, மிகப் பெரிய தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தது, மஹா பெரியவரின்
‘அருள் வாக்கு’!
– ராமச்சந்திரன்,  நாமக்கல்

எஸ்.பி.முத்துராமன் எழுதும் “அண்ணாத்தே வந்த பாதை” தொடரில் குறிப்பிட்டது போல், தான் இயக்கிய ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படத்தில், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோயிசம் நிறைந்தவராக நடிக்க வைத்ததன் மூலம், அப்படத்தை திரை வானில் ஓர் ஆச்சரிய குறியாக ஆக்கி விட்டார்.
– உஷா ராமச்சந்திரன், நாமக்கல்

நாடு தேர்வாணைய தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் ஆக்கப்பட்டதை வரவேற்று தீட்டப்பட்ட “தமிழுக்கு மரியாதை” தலையங்கம் மிகவும் அருமை. ஆனால், இக்கால இளைஞர்களில் எத்தனை பேருக்கு தமிழில் ழ,ல,ள,ர,ற,ண,ன ஆகியவற்றை பிழையின்றி சரியாக எழுத, படிக்கத் தெரியும் என்பது ‘ஆயிரம் பொன்’ பரிசுக்குரிய கேள்வியாகும்.
– பி.வெங்கட்ராமன், கும்பகோணம்

ள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்படியாக தமிழ் கற்பித்தல் குறைந்து வரும் வேளையில், டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு,  அரசாணை வெளியிடப்பட்டிருப்பது தமிழை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு உற்சாகம் ஏற்பட்டு, புது நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த அரசாணை மூலம் தமிழக இளைஞர்களே தமிழக அரசுப் பணிகளில் தேர்வு செய்வதற்கு வழி செய்த இந்த அரசை பாராட்டியே ஆக வேண்டும்.

ட்கட்சி பூசல், வலுவான தலைமை இல்லாமை மேலும் எதிர்க்கட்சிகளை ஒருமித்த கருத்துகளோடு அரவணைத்து செல்லும் திறன் இல்லாததால் காங்கிரஸ் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், மம்தா தனது கட்சியை தேசிய கட்சியாக்க முயற்சிப்பதும், அடுத்த பிரதமர் வேட்பாளராக களம் காண  இறங்கிவிட்டார் என்பதே அவரது நடவடிக்கைகள் உணர்த்துகிறது. காங்கிரஸை கபளீகரம் செய்ய பா.ஜ.கட்சி கையாண்ட காங்கிரஸ் முக்கியஸ்தர்களை கட்சிக்கு இழுக்கும் அரசியல் சூத்திரத்தை மம்தா திறன் படவே செய்து வருவது பா.ஜ. உட்பட மற்ற கட்சிகளையும் உன்னிப்பாக கவனிக்க வைக்கிறது. பா.ஜ.வுக்கு மாற்று தேவை என்று ஏங்கும் அனைத்து மனதிலும் மம்தா மலருவாரா என்பது போகப் போக தெரியும்.
ஆ .மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ல்கியை திறந்ததும் தராசாரின் பதில்களைத்தான் ஆவலுடன் தேட வைக்கிறது ஆத்மா! அந்த அளவுக்கு கனகச்சிதமும் கறார் நெறியும் கலக்கமோ, களங்கமோ இல்லாத நேர்மைத் திறனும் நிறைந்து செம கலக்கலாக இருப்பது, உண்மையிலேயே பெருமிதம் நெஞ்சில் பொங்குகிறது. இது சாமீ சத்தியம்!

‘எதிரி நாட்டு சொத்துகள் ‘ என்பது என்ன என்பதை தராசார் பதிலில் அறிந்து  கொள்ள முடிந்தது. நடிகைகள் அடிக்கடி மாலத்தீவுகள் செல்வதில் உள்ள   வியாபார தந்திரத்தை  தெரிந்து கொள்ள முடிந்தது. ‘இரும்பு திரை நாடல்ல இந்தியா. எதையும் சமாளிப்போம்’ என்று ஒமைக்கரான் வைரஸ் குறித்து தராசார் கூறியுள்ள பதில் எதையும் எதிர்கொள்ளும் வலிமைையைத் தருகிறது.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

னால் அவர் மாறவில்லை. அரசியல் வாதிகளின் வீட்டில் நடக்கும் சம்பவம் சாதகமாக இல்லைஎனில் துன்பமாகத்தான் சங்கோஜப்படும் என்ற உணர்வை மனதில் விதைத்த கதை. வாழ்த்துகள்.
– து.சேரன், ஆலங்குளம்

ஜீவ சமாதி அடைவது எப்படி என்ற கேள்விக்கு தராசுவின் பதில் சூப்பர்.
– மங்கையர்கரசி, திருநின்றவூர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வேட்டிகட்டி  காத்திருக்கும்  “தம்பிக்கு”  வாழ்த்துகள்

0
“ஒரு நாய் கூட மீறாத சட்டம்”  என்ற எமர்ஜென்சி காலத்தைப்பற்றிய கட்டுரை சூப்பர்,  மிகையில்லாத சரித்திர பதிவு. - தமிழரசு, ஈரோடு ஒரு கட்சியை ஒவ்வொரு தலைவர் மறைவிற்கு பிறகு சின்னம் முடக்கம், பிளவு  என்று...

ஆரம்பமே அசத்தலாகயிருக்கிறது.

1
  உங்கள் குரல்   மத்திய அமைச்சரவை சார்ந்த இலாகாவில் பல லட்சம் இந்திய இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் இருந்தும் அவைகள் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் பலன் தரும் விஷயமாகவும் அமைத்து விட்டு, அக்னி...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

0
உங்கள் குரல்    மணிரத்தினத்தின் “அலைபாயுதே” படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு “டோபி”யை பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும். - ஜானகி பரந்தாமன், ...

ஜாதியைச் சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

0
உங்கள் குரல்    ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா்  பிறந்தநாளை  முன்னிட்டு  கலைஞா்  படம் அட்டைப்படமாக  அலங்காிக்கும்  என நினைத்தேன். இருப்பினும்  சொல்லாமல்  சொல்லும் விதமாய் பிரதமா் மோடி - முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு ...