0,00 INR

No products in the cart.

வண்ண கோலங்களும் எண்ண கோலங்களும்

தனுஜா ஜெயராமன்

 

னி இல்லாத மார்கழியா? என்பது போல கோலமில்லாமல் மார்கழியா என நினைக்க வைப்பது விதவிதமான மார்கழியில் போடப்படும் வண்ண வண்ண கோலங்கள். பொதுவாகவே கோலம் போடுவதென்பது நமது மரபுவழி கலாசாரம். அதிலும் மார்கழியில் போடப்படும் கோலங்கள் மிகவும் ஸ்பெஷலானவை. பூக்கோலம் , இழைக்கோலம் , கம்பிக்கோலம், மாக்கோலம், படிக்கோலம், ரங்கோலி என பல்வேறு வகைகளில் விதவிதமாக நமது ரசனைகேற்ப போடப்படுதென்பதே அதன் சிறப்பு. மார்கழியில் அதிகாலை காற்றில் ஓசோன் அதிகம் கலந்திருக்கும். அதனை சுவாசித்தல் நம் உடல் நலனுக்கு மிகவும் நலம் பயக்கும். பொதுவாக கோலங்களில் மகாலெஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

மார்கழியின் கொட்டும் அதிகாலை பணியில் வீட்டின் பெண்குலங்கள் குளித்து முடித்து தலையில் ஈரத்துண்டுடன் வாசலில் மண் விளக்குகளை ஏற்றி வைத்து மார்கழியை வரவேற்பது அழகு. அதன் பிறகு அப்பெண்கள் தங்கள் ரசனைக்கேற்ப தெருவடைக்க கோலமிடுவது பேரழகு. இப்பெண்கள் கோலமிட்டால் மயில்களும் குயில்களும் நட்சத்திரங்களும் தெருவில் இரைந்து கிடக்கும். அப்பொதெல்லாம் நேர் புள்ளி கோலங்களும் சந்துப்புள்ளி கோலங்களும் வழமையானவை. புள்ளி வைத்து கோலமிடுவது என்பதும் நமது எண்ணங்களை ஒருங்கே குமியச்செய்யும் சிறந்த பயிற்சியே.

அதே போன்று பழைய காலங்களில் வீட்டு வாசலில் மண்தரைகள் மட்டுமே இருக்கும். அதனை  நன்றாக பதப்படுத்தி பசுஞ்சாணம் மொழுகு காயவைத்திருப்பார்கள். பசுஞ்சாணம் கிருமிகளை வீட்டினும் அண்டவிடாத இயற்கை கிருமிநாசினி. நன்றாக மொழுமொழுவென மொழுகிய மண் தரையில் பளீர் வெண்மையான பச்சரிசி மாவில் போடப்படும்  கோலங்கள் மிக அழகானவை.  அதன்  ஓரங்களில் செம்மண் இட்டு கூடுதல் அழுகுபடுத்தி இருப்பார்கள். நடுவில் பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து அதில் பூசணிப்பூவை வைப்பதே நமது வழமையான பழக்கங்களில் ஒன்று.  அந்த கோலங்கள் ஒரங்களில் செம்மண் மிளிர பளீர் வெண்மையில் பூசணி பூவுடன் மனதை கொள்ளை கொள்ளும் அந்த கோலங்கள் வாசலிலே பூசணிப்பூ வைச்சதென்ன வைச்சதென்ன? என நம்மை பாடவைப்பதில் வியப்பில்லை.

பழங்காலத்தில் போடப்படும் கம்பி கோலங்கள் பல்வேறு பயன்களை தரும் ஆற்றலுண்டு. நெளிநெளியாக வளைந்து நெளிந்து போடப்படும் கம்பி கோலங்கள் நமது மூளைக்கு பயிற்சி தரக்கூடியவை. சிக்கலான அந்த கோலங்கள் நமது வாழ்வின் இடியாப்ப சிக்கலை எளிதாக கையாளும் இயல்பை தரக்கூடியது என்பது பலருக்கு தெரியாதது. சவால்நிறைந்த கம்பி கோலங்கள் மூளைக்கு சுறுசுறுப்பும் ஆகச்சிறந்த பயிற்சி என்பது கூடுதல் சிறப்பு.

மாக்கோலமென்பது பச்சரிசியை ஊறவைத்து நன்றாக அரைத்து சிறிது தண்ணீரில் கரைத்து விரல் தேய கோலமிடுவதே. நம் மனதில் நினைத்த உருவங்களை டிசைன்களை எளிதாக வரைந்து விடலாம். இதில் கம்பிக்கோலம் வரைந்து செம்மண் இடப்படும். இது காங்கிரீட் தரைகளில் போடுவதே வழக்கம்.  பச்சரிசி மாவு கோலங்கள் இடுவது  ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவன்களின் உணவுக்கான எளிய ஈகை முறையென்பது அதன் தனிச்சிறப்பு.

அதே போன்று படிக்கோலம் என்பது கோடுகளால் ஆன ஒரு ஸ்பெஷல் வகை கோலம். வளையாமல் நேர்த்தியாக வரையப்படும் இவ்வகை கோலங்கள் சவால் நிறைந்தவை. இவை நமது மூளைக்கும் மனதிற்கும் பயிற்சி தருபவை. இவை கைகளினாலும் சிறியவகை கோலடின்களை வைத்தும் மிகப்பெரியதாக போடுவார்கள். ஒரங்களில் செம்மண்களை இட்டு அழகுபடுத்துவார்கள். இதுவும் நம் பாரம்பரிய கோலமுறைகளில் ஒன்று.

நாகரீகம் பெருகி தெருக்கள் குறுகி அபார்ட்மெண்ட் கலாசாரம் பெருகிய இக்காலகட்டத்தில் அதிகம் போடப்படுவது கலர்கலரான ரங்கோலி கோலங்கள். சிறிய நரையோ பெரிய தரையோ மண்தரையோ கான்கிரீட் தரைகளோ எதுவாகினும் மிக அழகாக போட்டுவிடலாம் வகைவகையான ரங்கோலி கோலங்களை. மயில்கள், பூக்கள், கடவுள் உருவங்கள் மற்றும் மத்தளம் முதல் வீணை வரை விதவிதமான டிசைன்களை  விதவிதமாக நமது ரசனைக்கேற்ப போடுவது ரங்கோலி கோலங்களின் சிறப்பு.

விதவிதமான பூக்களை வைத்து போடப்படும் கேரள அத்தப்பூ கோலங்களும் நமது பாரம்பரிய கோலமுறைகளில் ஒன்றே. பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரவல்லவை.

அக்காலம் முதல் இக்காலம் வரை கோலம்போடும் முறைகளில் ஏதேனும் மாற்றமிருக்கலாம். அதன் மகிழ்ச்சியில் மாற்றங்களேதுமில்லை. அப்போதைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கோலநோட்டென்று  கட்டாயம் இருக்கும். அது இல்லாத வீடுகளில்லை எனலாம். அது தற்போது உருமாற்றம் பெற்று இணையங்களில் கோலங்கள் கொட்டி கிடக்கின்றன.  விரல்நுனியில் விரும்பிய கோலங்களை பெற்று விடலாம். வாசலடைக்க கோலமிடுவதிலிருந்து சிறிய இடங்களில் அழகான வண்ண கோலங்கள் இடும் மாற்றத்தை பெற்றிருக்கிறது அவ்வளவே.

கோலங்கள் அதனை போடுபவர்க்கும் பார்ப்பவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சியை பரப்ப வல்லது என்றால் மிகையில்லை. வண்ண வண்ண கோலங்கள் நமது வாழ்விலும் பல வண்ணங்களை வரவழைப்பவை. மயிலையின் நான்கு  மாடவீதிகளில் இடப்படும் கோலங்களை காண கண்கோடி வேண்டும். கோலம் நமது பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்தவை. அவற்றை அடுத்த தலைமுறைக்கும் இட்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் உண்டு.

இந்த மார்கழியில் பல்வேறு இடங்களில் கோலப்போட்டிகள் நடைபெறுவதும் உண்டு. அதில் இளைய தலைமுறையினர் பலரும் ஆர்வமாக கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயங்கள். நமது பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்பும் மார்கழியை போற்றுவோம்!!! கோலக்கலைகளை வளர்ந்தெடுப்போம்!!!

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

மைலாப்பூரில் இட்லி கச்சேரி

சுஜாதா தேசிகன்                                             ...

எதையும் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

0
“உயிரோடு உயிர் சேர்வதே அன்பு” என்ற உண்மையை, செஸ், கிரிக்கெட் போன்ற எளிய உதாரணங்கள் மூலம் எடுத்துக்கூறி, மிகப் பெரிய தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தது, மஹா பெரியவரின் 'அருள் வாக்கு'! - ராமச்சந்திரன்,  நாமக்கல் எஸ்.பி.முத்துராமன்...

அப்பா ரொம்பக் கோபக்காரர்

1
சிறுகதை                                               ...

தமிழ்நாட்டையே மறைமுகமாக நீங்கதானே ஆளுறீங்க?

1
விமர்சனம் - லதானந்த்   கூர்மையான சங்கீத விமர்சகர்கள் சிறந்த பாடகர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையல்லவா? அதைப் போலவே பலப் பல திரைப்படங்களை நார் நாராகக் கிழித்துத்தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருக்கும் ‘ஆன்டி இண்டியன்’...

நினைத்தால் கனவுபோல் உள்ளது

1
முகநூல் பக்கம்   எப்படி விதைக்கப்பட்டது இந்த எண்ணம் எனத் தெரியாது. படிக்கணும் அவ்வளவுதான் தெரியும். ஆடு மேய்க்கும்போது, நடக்கும்போது, விளையாடும்போது எப்பவும் அதே எண்ணம். படிப்பு வாசனையற்ற பரம்பரையில் கொஞ்சம் எழுதப்படிக்கத் தெரிந்த ஐயா! எழுதவே...