0,00 INR

No products in the cart.

வலிமையோடு களமிறங்குகிறார் தல அஜித்

 

 – வினோத்

 

தமிழ் சினிமாவில் இப்போது டிரெண்டிங்கில் இருப்பது  ’ படங்கள் வெளி வருவதற்கு முன்னரே ’ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், இசை ஒலிப்பதிவு ஆரம்பம், டீசர், டிரைலர்  அப்டேட்ஸ்’  என்ற அலப்பரைகள் செய்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதுதான். இதைத்தாண்டி  அந்த ஆவலை  அடுத்த கியரில்  இப்போது  வேகமாகக் கொண்டுபோகிறது அஜித்தின் ’வலிமை’ படம் .   “மேக்கிங் ஆப்  வலிமை” என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ரேஸ் பைக் சேசிங் காட்சிகள் மிரட்டுகின்றன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹெச். வினோத்துடன் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக வலிமையில் இணைந்திருக்கிறார். படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வலிமை’ படத்தின் இந்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. ‘வலிமை’ பட பூஜையில் இருந்து கொரோனா சமயத்தில் படப்பிடிப்பு நின்றது, படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பொது வெளியிலும், இணையத்திலும் வைரல் செய்தது என அனைத்தையும் இந்த காணொளியில் இணைத்திருந்தார்கள்.

மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள், அஜித் பைக் ரேஸில்  கீழே விழுந்தது என இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கம், அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் ஆகியவை குறித்து இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தனி பேட்டியே கொடுத்திருக்கிறார்.

’வலிமை’ படத்தைப்  பொருத்தவரை அனைத்து சேசிங் காட்சிகளுமே உண்மையான வேகத்தில் எடுக்கப்பட்டது. 120 கி.மீ. வேகம் என்றால் அதே 120 கி.மீ. வேகத்தில் காட்சிகளும் படமாக்கப்பட்டது. காட்சி முதலில் எடுத்து விட்டு பின்பு அதை படமாக்கப்பட்ட பின்பு வேகப்படுத்துவது என்பது போன்றவற்றை நாங்கள் செய்யவில்லை. ஏனெனில், திரையில் பார்வையாளர்கள் பார்க்கும்போது எந்த அளவுக்கு வேகத்தில் ஓட்டுகிறார்கள் என்பது உண்மையாக அவர்கள் ரசிக்க வேண்டும். இதற்காக சிறப்பு வாகனங்கள், கேமரா எல்லாம் தயார் செய்து 120/150 கி.மீ. வேகத்தில் படமாக்கினோம். ஏனென்றால் அவை எல்லாமே ‘சூப்பர் பைக்குகள்’. பைக் ஸ்டார்ட் செய்த உடனே அதிவிரைவாகத்தான் செல்லும்.

அதனால், அதை சரியாக படமாக்க சரியான கருவிகள் தேவைப்பட்டதால் மெனக்கெட்டு அதற்காக வேலை செய்தோம். படத்தை திரையில் பார்க்கும்போது ’இதை இவ்வளவு வேகத்தில் எப்படி படமாக்கினார்கள்’ என பார்வையாளர்கள் நிச்சயம் யோசிப்பார்கள். அதேபோல, இடைவேளை காட்சியும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போல பார்வையாளர்களை இருக்கை நுணிக்கு இழுத்து வரக்கூடிய தருணமாக ‘வலிமை’யில் 10%- 20% அதிகமாக இருக்கும்.

எல்லா காட்சிகளுமே ‘டூப்’ எதுவும் இல்லாமல், முறையான பயிற்சி எடுத்து தவறுகளை திருத்தி, ”இந்தக் காட்சி எடுக்க முடியும் என்று நம்பிக்கை வந்த பின்பே படமாக்கப்பட்டது” என்கிறார்  திலீப் சுப்பராயன்.

இந்தப் படத்துக்காக அஜித் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.  ஒரு காட்சியில் மயிரிழையில் ஒரு விபத்திலிருந்து  உயிர்  தப்பியிருக்கிறார். “ஒரு  காட்சி படமாக்கப்பட்டபோது நான் அடுத்த சாலையில் வேறொரு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தேன். இந்த பக்கம் அஜீத் பைக் ஓட்டும் காட்சியை எங்கள் அணியில் இருந்த ஒருவர் 110-120 கி.மீ. பைக் ஓட்டும் வேகத்தில் அவரும் பயணித்து மாலை வேளையில் படமாக்கிக் கொண்டிருந்தார். அது, ஹைதராபாத்தில் உள்ள பெரிய சாலை. உண்மையில் அந்த காட்சி நான் எதிர்பார்த்தது போலவே முன்பே கிடைத்து விட்டது. ஆனால், அஜித் ’மற்றுமொரு முறை எடுக்கலாம்’ என்று சொன்னார். அது ரிஸ்க் நிறைந்த காட்சி என்பதால் ‘இல்ல சார் போதும்’ என்று நான் சொன்னேன். ஆனால் அவர் ’காட்சியின் நீளத்தை அதிகப்படுத்தலாம்’ என்று மீண்டும் எடுத்த காட்சிதான் அது.

அப்படி படமாக்கும்போது படப்பிடிப்பு தளத்தை விட்டு கிட்டத்தட்ட நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி வந்து விட்டோம். அஜித் பயணித்த அந்த சாலையில் சிறு கல் இருந்திருக்கிறது. வண்டி சென்ற வேகத்தில் அதை கவனிக்க முடியவில்லை. அந்த கல் தடுக்கித்தான் வண்டியில் இருந்து அஜித் கீழே விழ நேரிட்டது. அதை பார்த்தும் கூட எங்களால் உடனே வண்டியை நிறுத்த முடியவில்லை. ஏனென்றால் அதே 120 கி.மீ. வேகத்தில் நாங்களும் இங்கு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறோம். உடனே  நிறுத்தினால் எங்களுக்கும் நிலை தடுமாறும், வண்டியில் இருக்கும் கேமரா முதலிய கருவிகள் எல்லாமே சேதாரமாகும். எனவே, பொறுமையாக வண்டியை நிறுத்திவிட்டுதான் அங்கு செல்ல முடிந்தது. அஜித் கீழே விழுந்ததை பார்த்ததும் அங்கே கேமராவை கையாண்டு கொண்டிருந்த நபர் பயந்து விட்டார். அந்தப் பதற்றத்தில் அவர் கேமராவை ஆட்டியதால்தான் அது அங்கிருந்து விலகி காட்சிகள் தாறுமாறாக இருக்கிறது.  அதை அப்படியே மேக்கிங் வீடியோவில் காட்டுகிறார்கள்.

கீழே விழுந்ததும் அஜித் பைக்கை விடவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் மோதியிருப்பார். பைக்கை விட்டதால்தான் அடி குறைவாக இருந்தது. எல்லாரும் பதறி அவரிடம் போனதுபோது, அவர் கேட்ட முதல் கேள்வி, ‘எனக்கு எதுவும் இல்லை, பைக் என்னாச்சு? நாளைக்கு ஷூட்டிங் இருக்கே, மறுபடியும் பண்ணனுமே’ என்பதுதான்.

அந்த விபத்தில் பயங்கர அடி அவருக்கு. ஆனால், எங்களிடம் காட்டவேயில்லை. பைக் ஓட்டும்போது அவர் அணிந்திருந்தது தொழில்ரீதியான ரேஸருடைய உடைதான். அதனால் பாதுகாப்பானது என்றே சொல்லலாம். ஆனால், அன்று அஜித் அவர் விழுந்த வேகத்திற்கு நன்றாக அடி வாங்கியிருக்கும்.

அந்த பைக் கிட்டத்தட்ட 80 லட்சம் மதிப்பிலானது. இந்தியாவிலேயே ஒரு சிலர் மட்டும்தான் அதை வைத்துள்ளார்கள். அதனால், உடனே அஜித் அவருடைய நண்பரிடம் பேசினார். பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு அடுத்த நாள் காலையே வேறொரு பைக் வந்துவிட்டது. அதனால், அடுத்த நாள் மீண்டும் அந்த காட்சியை படமாக்கினோம். அஜித் ஒரு காட்சி தனக்கு திருப்தி ஏற்படும் வரை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதன் வெளிப்பாடுதான் இது.

“படத்தில் நிறைய உச்சமான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். பல பேருடைய உழைப்பு அதில் இருக்கிறது” என்று சொல்லும் திலீப், “படத்தில் பைக் சேஸ், கார் சேஸ், க்ளைமேக்ஸ்ஸில் அதிரடி காட்சி என எல்லாமுமே இருக்கும். அஜித்திற்கு எந்த அளவிற்கு சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் கார்த்திகேயாவுக்கும் இருக்கும். பைக் இப்படிதான் ஓட்ட வேண்டும், உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது என படப்பிடிப்பு தளத்தில் கார்த்திகேயாவுக்கும் எங்களுக்கும் நிறைய விஷயங்கள் சொல்லி தந்தார். அஜித் பைக்கை பார்த்தாலே குழந்தை போல மாறிவிடுவார்” என்கிறார்.

இதோ  தீபாவளிக்கு, பொங்கலுக்கு, தல பிறந்த நாளன்று ரிலீஸ்  என்று ஒரு வருடமாகப் பேசப்பட்ட படம், வரும் வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் என்று உறுதியாகச் சொல்லும் தயாரிப்பாளார் போனிகபூர்,

இந்தப் படம் அஜித்தின் முதல் பான் இந்தியா படமாக மட்டும் இல்லாமல்  ’வலிமை’  உலகளவில் ரிலீஸாகிறது. இங்கிலாந்து சென்சார் சர்டிபிகேட் வாங்கியிருக்கிறோம். ’சன் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் ’வலிமை’ படம் விநியோகம் செய்யப்பட உள்ளது’ என்றும்  சொல்லுகிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.

’திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கே அனுமதி’ என்ற நிலையில் ’வலிமை’ படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது 100 சதவிகித பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் வலிமை கொண்டாட்டத்தில் ரசிகர்கள் திளைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

2 COMMENTS

  1. கட்டுரையை படிக்கும்போதே பிரமிப்பில்
    சீட் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் வலிமை அஜித் ரசிகர்களுக்கு அருமையான அறுசுவை விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

  2. ‘வலிமை’ படத்தின் தலைப்பில் இருந்தே
    வலிமையோடுதான் களம் இறங்குவார்
    ‘தல அஜித்’என்பது சந்தேகம் இல்லாத உண்மைதான்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

புதிய முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கிறார்கள்

0
 நேர்காணல் - ஆதித்யா   “தேசபக்திப் பாடல்களால் மட்டுமே ஒரு கச்சேரி” என்ற  எண்ணம் எப்படி எழுந்தது? ஆண்டுதோறும் அமரர் கல்கியின் நினைவுநாளைக் கொண்டாடும்  கல்கி அறக்கட்டளை அந்த நிகழ்ச்சியில் ஒரு பாரம்பரிய பாணி  இசைக்கலைஞரின்  இசைக்கச்சேரி நடைபெறும்.  இந்த ஆண்டு அந்தப்...

“அந்தப் பாராட்டு வாழ்வில் மறக்கமுடியாதது.”

                           தமிழக  நாடகக் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் திருமதி. லாவண்யா வேணுகோபால்.  இவர் அடிப்படையில்...

ஶ்ரீலங்கா மக்களுக்கு விடியல் எப்போது?

1
கவர் ஸ்டோரி ஸ்ரீலங்காவில் என்ன சிக்கல்? - எஸ். சந்திரமௌலி   1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் முதல் பிரதமரான லீ குவான் யூ என்ன சொன்னார் தெரியுமா? “சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்து இன்னொரு...

ரன் அவுட் ஆன இம்ரான் கான்!

1
- எஸ். சந்திரமௌலி   நம்ம ஊரு தி.மு.க.வைப் போலவே பாகிஸ்தானில் இருளைப் போக்கி, விடியல் தரப்போவதாக கடந்த 2018ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்தார் இம்ரான் கான். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம்  342...

இசை இளவரசரின் 25

0
கவர் ஸ்டோரி - எஸ். சந்திரமௌலி   தமிழ் சினிமாவில் திரையிசையைப் பொறுத்தவரை மூன்று முக்கிய அத்தியாயங்கள் உண்டு. முதலாவது எம்.எஸ்.விஸ்வநாதன் காலம்.  அடுத்தது இளையராஜாவின் காலம். மூன்றாவது ஏ.ஆர். ரஹ்மானின் காலம். அதற்கு அடுத்து, தமிழ்...