0,00 INR

No products in the cart.

அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

யக்குனர் ஆர்.சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

அவரது இயக்கத்தில் ‘நான் பாடும் பாடல்’ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொன்னார் ஆர்.சுந்தரராஜன்:

“எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். அதை யார் வாங்கி கொடுக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் அடுத்த படம் செய்வேன்.”

உடனடியாக ஏவி.எம். நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாய் பணமும் வந்தது.

கொஞ்சம் தயங்கினார் ஆர்.சுந்தரராஜன். “அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே..!”

“அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை வாங்கிக் கொள்ளுங்கள்.”

அந்தப் பணத்தை வாங்கி புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் கொடுத்து விட்டார் ஆர்.சுந்தரராஜன்.

அடுத்த ஒரு சில நாட்களில்…

கதை தயாரானது. அதுதான் வைதேகி காத்திருந்தாள். ஏவி.எம்.முக்கு போய் கதையை சொன்னார் சுந்தரராஜன்.

“நல்லா இருக்கு. ஹீரோ யார் ?”

விஜயகாந்தை போட்டால் பொருத்தமாக இருக்கும். படமும் பிரமாத வெற்றி பெறும் என்றார் சுந்தரராஜன்.

“விஜயகாந்தா ?”

”அவர் வேண்டாம். ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற ‘நான் பாடும் பாடல்’ படத்தில் சிவகுமார்தானே ஹீரோ? ’வைதேகி காத்திருந்தாள்’ படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள்.”

ஆர்.சுந்தரராஜன் உறுதியாகச் சொன்னார். “அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த்தான் பொருத்தமாக இருப்பார்.”

பொறுமையாக அதைக் கேட்ட ஏவி.எம். : “இல்லை. அதில் எங்களுக்கு சம்மதமில்லை. அப்படியானால் நாங்கள் கொடுத்த இரண்டு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.”

ஆர்.சுந்தரராஜன் திகைத்துப் போனார்.

ஏனெனில் ஏவி.எம். கொடுத்த அந்த பணத்தை வாங்கித்தான் புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டிருந்தார் அவர். வேறு பணம் எதுவும் அவர் கைவசம் இல்லை.

என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினார் ஆர்.சுந்தரராஜன்.

ஏவி.எம் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படி அவர்களுக்கு திருப்பி கொடுப்பது?

அன்று மாலை வாடிய முகத்தோடு  வாக்கிங் சென்றபோது எதிரே வந்தார் தூயவன் என்ற கதாசிரியர்.

என்ன நடந்தது என்று உண்மையான அக்கறையோடு தூயவன் விசாரிக்க, நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னார் ஆர்.சுந்தரராஜன்.

“இவ்வளவுதானே? இதற்கு போய் ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்? வாருங்கள் என்னுடன்.”

அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

‘வைதேகி காத்திருந்தாள்’ கதையை மறுபடியும் ஆர்.சுந்தரராஜன் சொல்ல…

உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் ஆர்.சுந்தரராஜன் கைகளில் கொடுக்கப்பட,

ஏவி.எம்மிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆர்.சுந்தரராஜன்.

தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்.

வீடு வாங்க வேண்டும் என்றபோது அதற்கான பணத்தை உடனடியாக ஏவி.எம். மூலமாக கொடுத்தது இந்த பிரபஞ்சம்.

’அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்ற சூழ்நிலை வந்தபோது கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக வேறு ஒரு தயாரிப்பாளரை தேடி கொடுத்ததும் அதே பிரபஞ்சம்.

நமக்கு எப்போது எது தேவையோ அதை நம்மிடம் கொண்டுவந்து கொடுக்க ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.

ஆர்.சுந்தரராஜனுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே உதவுவதற்கு இந்த பிரபஞ்சம் எப்போதுமே காத்திருக்கிறது.

அதற்குத் தேவை அசைக்க முடியாத தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள் மட்டுமே !

ஜான் துரை ஆசீர் செல்லய்யா முகநூல் பக்கத்திலிருந்து…

 

 

1 COMMENT

  1. உண்மைதான்.காலமகள் கட்டாயம் கண் திறப்பாள் தக்க தருணத்தில்!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....

என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…

0
முகநூல் பக்கம்   முதுமை + தனிமை= கொடுமை ! பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...இங்கு... 70...

“என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!”

0
முகநூல் பக்கம் அண்மைக்காலமாக, பொதிகை தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகும்  “மங்கையர் சோலை” நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  எளிய மற்றும் மீடியா வெளிச்சம் விழாத சாதனைப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துப் பாராட்டுகிறார்கள்.  எதிர்வரும் 14.04.2022...