0,00 INR

No products in the cart.

“ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமை தான் உதவும்”

ந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கான தகுதிகளில் “வயது 90+ இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டார்களோ” என்று கூட எண்ணத்தோன்றுகிறது. செளகார் ஜானகிக்கு அடுத்து தமிழ் நாட்டின் கிளாரினட் இசைக்கலைஞருக்கு இந்த ஆண்டு பத்மஶ்ரீ வழங்கப்படுகிறது.

கிளாரினெட்டிலுள்ள பொத்தான்களை (KEY) அகற்றியும் மாற்றியும் அமைத்ததால் மட்டும் அந்த இனிமை வந்துவிடாது. மூச்சுக்காற்றையும், கை விரல்களையும், நாவையும் இயக்கும் தனித்துவ ஆற்றலால் அந்த இனிமை இவருக்கு  வசமானது. பெரும்பாலும்  PLAIN NOTES இசைக்கவே பயன்பட்ட கிளாரினெட்டை கர்னாடக இசையின் தனித்துவமான கமகங்களை உதிர்த்து இசைத்துக் காட்டியபோது அமெரிக்கர்கள் எப்படி இது சாத்தியம் என  அதிசயித்துப்போனார்கள்.

“ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமைதான் உதவும். எங்கள் ஊரில் நாங்கள் வாத்தியத் தேர்ச்சி பெறுவதுபோல கிளாரினெட்டை ஏகேசி கற்றிருந்தார் எனில்,  ஒரு ஜீனியஸ் கிடைத்திருக்க மாட்டார். வாத்தியத்தின் எல்லைகளில் ‘அறிவு’ அவரை நிறுத்தியிருக்கும். அவர் கற்ற வாய்ப்பாட்டும் நாகஸ்வரமும் அவருக்குச் சங்கீதத்தைக் காட்டியிருக்கின்றன. எவையெல்லாம் வாத்தியத்தில் வராதோ, அதையெல்லாம் வரவழைக்க வாத்தியத்தை என்ன செய்யலாம் என்பதை நோக்கி அறியாமைதான் செலுத்த முடியும். கிளாரினெட்டில் தவிர்க்க முடியாத சில விசைகளைத் தவிர மற்றதை நீக்கிவிட்டு, நாகஸ்வரத்தைப் போலவே துளைகளில் விரலடியாகவும், ஊதுகின்ற உத்தியைக் கைவரப்பெற்றும் கர்னாடக சங்கீத நுட்பங்களை முழுமையாக அவரால் கொண்டுவர முடிந்திருக்கிறது.” இதைச்சொன்னது, ஒரு அமெரிக்க இசைப் பேராசிரியர்

“இந்த சாதனை எளிதில் வரவில்லை. ஒவ்வொரு ராகத்தையும் கிளாரினெட்டுக்கு ஏற்றபடி எப்படி அணுகுவது என்பதைக் கண்டடைவதற்குப் பல மணி நேரம் பயிற்சி செய்துள்ளேன். எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம். உயிரையும், ஆன்மாவையும், வஞ்சகமில்லாமல் அதில் வைத்தால் எதிலும் வெல்ல முடியும் என்று புரிந்து கொண்டேன்” எனச்சொல்லும் ஏகேசி, இந்த விருது பற்றி என்ன நினைக்கிறார்.

மத்திய அரசு எனக்கு இந்த 91வது வயதில் பத்மஸ்ரீ விருது அறிவித்து இருக்கிறது. மேலும் என் வாழ்நாளில் பல விருதுகளை பெற்றுள்ளேன். அந்த சூழ்நிலையில் சில சமயங்களில் ’நமக்கு உயரிய விருது கிடைக்கவில்லை’ என்றும் வருத்தங்கள் இருந்தாலும், ’அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து செல்வேன்’ என்றார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகாலம் கழித்து எனது 91வது வயதில் மத்திய அரசு எனக்கு  பத்மஸ்ரீ விருதை அளித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் முன்னதாக இந்த விருது அறிவிக்கப்பட்டு இருந்தால் நான் பெற்ற விருதுகள் பத்தோடு, பதினொன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இந்த கால சூழ்நிலையில் அறிவிப்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ஓவியர் ஸ்ரீதர்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இதில் எழும் இசை எப்படியிருக்கும்?

  இந்த வாரம் இவர்   சந்தூர் என்பது ஜம்மு-காஷ்மீருக்குச் சொந்தமான ஒரு பழங்கால தந்தி வாத்திய  இசைக்கருவி. இது பெர்சியாவில் தோன்றியது. இந்த வகை கருவி மெசொப்பொத்தேமியாவில் (கிமு 1600-911) கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது வரலாறு.  சந்தூர் செவ்வகமானது பொதுவாக...

கனவில் கண்ட நீலக்குருவியைக் கையில் பிடித்தவர்

இந்த வாரம் இவர்   எப்போதும் கனவில் இருப்பவர் எலான் மஸ்க். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா செல்கிறார். "சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள். அதன் பிறகுதான் பெற்றோர்கள்"  என்று...

இந்த வாரம் இவர்

0
மகிந்த ராஜபக்சே - ஶ்ரீதர்   1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த...

இந்த வாரம் இவர்

0
“பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார்...

அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட்!

இந்த வாரம் இவர் ஒருமுறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது ஷேன் வார்ன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். ஒரு பேட்ஸ்மேன் தனது சராசரி ரன்னைத் தாண்டுவதற்குள் அவரை வெளியேற்றுவதுதான் பந்துவீச்சாளருக்கான பெருமை. உதாரணமாக,...