அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட்!

அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இந்த வாரம் இவர்

ருமுறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது ஷேன் வார்ன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

ஒரு பேட்ஸ்மேன் தனது சராசரி ரன்னைத் தாண்டுவதற்குள் அவரை வெளியேற்றுவதுதான் பந்துவீச்சாளருக்கான பெருமை.

உதாரணமாக, சச்சினின் சராசரி ரன்கள் 65 என்றால் அந்த ரன்களை எடுப்பதற்குள் அவரை வெளியேற்றிவிட வேண்டும். அப்படிச் செய்தால் அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட். சராசரி ரன்களைத் தாண்டியபிறகு வெளியேற்றினால், அது பேட்ஸ்மேன் கொடுத்த விக்கெட். இது கிரிக்கெட்டுக்கு அப்பாலும் பொருந்தக்கூடிய  ஒரு கருத்து.

'வார்ன், சச்சினுக்கு இணையாக மதிக்கப்பட்டவர்' என்ற விஷயமே அவர் இடத்தை, புகழைச் சுட்டப் போதுமானது. எங்கள் தலைமுறையில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அத்தனை பேருக்கும் அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. ஓர் அணியின் உச்ச நட்சத்திரமாக ஒரு பௌலர் இருப்பது சாதாரண விஷயமல்ல. சச்சின் அவரை எதிர்கொள்வது புகழ்பெற்றதாக இருந்தாலும் பொதுவாகப் பெரும்பாலான முன்னணி இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை மிகச் சிக்கலான பந்து வீச்சாளராகக் கருதியதில்லை. உடலைப் பேணும் ஒரு விளையாட்டு வீரரின் மரணம்
52 வயதில் நடப்பது அதிர்ச்சியானதே. அஞ்சலி!

ஓவியர் ஸ்ரீதர்
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com