0,00 INR

No products in the cart.

அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட்!

இந்த வாரம் இவர்

ருமுறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது ஷேன் வார்ன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

ஒரு பேட்ஸ்மேன் தனது சராசரி ரன்னைத் தாண்டுவதற்குள் அவரை வெளியேற்றுவதுதான் பந்துவீச்சாளருக்கான பெருமை.

உதாரணமாக, சச்சினின் சராசரி ரன்கள் 65 என்றால் அந்த ரன்களை எடுப்பதற்குள் அவரை வெளியேற்றிவிட வேண்டும். அப்படிச் செய்தால் அது பந்துவீச்சாளர் எடுத்த விக்கெட். சராசரி ரன்களைத் தாண்டியபிறகு வெளியேற்றினால், அது பேட்ஸ்மேன் கொடுத்த விக்கெட். இது கிரிக்கெட்டுக்கு அப்பாலும் பொருந்தக்கூடிய  ஒரு கருத்து.

‘வார்ன், சச்சினுக்கு இணையாக மதிக்கப்பட்டவர்’ என்ற விஷயமே அவர் இடத்தை, புகழைச் சுட்டப் போதுமானது. எங்கள் தலைமுறையில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அத்தனை பேருக்கும் அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. ஓர் அணியின் உச்ச நட்சத்திரமாக ஒரு பௌலர் இருப்பது சாதாரண விஷயமல்ல. சச்சின் அவரை எதிர்கொள்வது புகழ்பெற்றதாக இருந்தாலும் பொதுவாகப் பெரும்பாலான முன்னணி இந்திய பேட்ஸ்மேன்கள் அவரை மிகச் சிக்கலான பந்து வீச்சாளராகக் கருதியதில்லை. உடலைப் பேணும் ஒரு விளையாட்டு வீரரின் மரணம்
52 வயதில் நடப்பது அதிர்ச்சியானதே. அஞ்சலி!

 

ஓவியர் ஸ்ரீதர்

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இதில் எழும் இசை எப்படியிருக்கும்?

  இந்த வாரம் இவர்   சந்தூர் என்பது ஜம்மு-காஷ்மீருக்குச் சொந்தமான ஒரு பழங்கால தந்தி வாத்திய  இசைக்கருவி. இது பெர்சியாவில் தோன்றியது. இந்த வகை கருவி மெசொப்பொத்தேமியாவில் (கிமு 1600-911) கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது வரலாறு.  சந்தூர் செவ்வகமானது பொதுவாக...

கனவில் கண்ட நீலக்குருவியைக் கையில் பிடித்தவர்

இந்த வாரம் இவர்   எப்போதும் கனவில் இருப்பவர் எலான் மஸ்க். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க தென்னாப்பிரிக்காவில் இருந்து கனடா செல்கிறார். "சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள். அதன் பிறகுதான் பெற்றோர்கள்"  என்று...

இந்த வாரம் இவர்

0
மகிந்த ராஜபக்சே - ஶ்ரீதர்   1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த...

இந்த வாரம் இவர்

0
“பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார்...

காற்று வெளியிடை

கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன்   சில நாட்களுக்கு முன் சால் மரத்திலிருந்து விழும் விதைகளின் காணொளி ஒன்று கண்ணில் பட்டது.  குட்டி டிரோன் மாதிரி அவைகள் விழும் காட்சியைப் பார்க்கும்போது தற்போது பெங்களூருவில் பிங்க் நிறப்...