வாசகர் ஜோக்ஸ்     

வாசகர் ஜோக்ஸ்     
Published on

     ஓவியம்: ரஜினி

"எந்த வேலையா இருந்தாலும் என் மனைவி உடனுக்குடன் செய்துடணும்னு நினைப்பா!"

"அவங்க ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்லுங்க..?"

"சுறுசுறுப்பா… நான் செய்யணும்னு நினைப்பா…"

–   வி.ரேவதி, தஞ்சை

"கம்பி வாங்க கடைக்கு வர்றியா கபாலி?"

"நான் எதுக்கு வரணும்?"

"உன் அனுபவத்தில் ஸ்ட்ராங் கம்பியைப் பார்த்து எடுத்துக்கொடு…"

– ஏ.நாகராஜன், பம்மல்

"எதுக்கு சார் என் பையனை அடிச்சீங்க.?"

"ஒரு புஷ்பத்தைப் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டு வான்னு சொன்னேன். இவன்  'புஷ்பா' பட விமர்சனக் கட்டுரை எழுதிக்கொண்டு வந்துருக்கான்!"

–  கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

நடிகை : "பேட்டி எடுத்த நிருபர், நான் சொன்னதை அப்படியே தலைகீழா மாத்திப் போட்டுட்டாரு மம்மி…?"

அம்மா: "என்ன போட்டாரு?"

நடிகை :  " 'சம்பளம் பிடிச்சிருந்தா கதையே இல்லாட்டிகூட நடிப்பேன்'னு நான் சொன்னதை, 'கதை பிடிச்சிருந்தா சம்பளம் இல்லாமலே நடிப்பேன்'னு எழுதிட்டாரு மம்மி."

– வி.ரேவதி, தஞ்சை

" உக்ரைன் சண்டையைப் பற்றிப் பேசலாம்னு அவரோட வீட்டுக்குப் போனேன்…"

"சரி, என்ன ஆச்சு?"

"அந்த வீட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் 'உக்ரமான' சண்டை நடந்துட்டிருந்தது…"

– ஏ.நாகராஜன், பம்மல்

"எங்க தலைவர் தப்பு பண்றவங்க முகத்துலயே முழிக்க மாட்டாரு!"

"அப்ப உங்க தலைவர் கண்ணாடியையே பார்க்க மாட்டாருன்னு சொல்லு!"

– சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com