
இங்கிலாந்தின் எழுத்தறிவு இயக்கம் கடந்த ஆண்டு நகரிலுள்ள ஒரு நூலகத்துக்கு நிதி சேர்க்க ஒரு புதுமையான வழியையைக் கையாண்டது.
பார்க்குகளில் இருக்கும் பெஞ்சுகளை ஒரு விரிந்த நிலையிலிருக்கும் புத்தகம் போல வடிவமைத்து அதில் இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளை நினைவூட்டும் வகையில் படங்கள் வரைந்து ஒரு கண்காட்சியாக நடத்தியது.
ஓவியங்களைத் தீட்டியவர்கள் நாட்டின் பிரபல ஓவியர்கள். ஆனால் அந்தப் படத்தில் அது எந்த ஆசிரியருடைய படைப்புக்கானது என்பது சொல்லப்பட்டிருக்காது.
அதை "சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்குப் பரிசு" என்று அறிவித்திருந்தார்கள். வந்தியத்தேவன் படத்தைப் பார்த்தால்
'பொன்னியன் செல்வன்' என்று சொல்லுவது போல…
போட்டியின் முடிவில் இந்த பெஞ்சுகள் ஏலமிடப்பட்டது. கிடைத்த தொகை 2.50,000 பவுண்ட்கள். வாங்கியவர்கள் நாட்டின் பெரும் நிறுவனங்கள். அதை தங்களுடைய பங்களிப்பாக நகர பார்க்குகளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
நிதி திரட்டுவதிலும் கூட இலக்கியங்களை நினைவூட்டுவதோடு ஒரு புதுமையையும் செய்திருக்கிறார்கள்.