0,00 INR

No products in the cart.

1947ல் எந்தப் போர் நடந்தது?

சர்ச்சை

– வினோத்

 

அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை கங்கணா ரனாவத்  பேசியது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற அடுத்த இரண்டு நாட்களில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘1947ல் பெற்றது சுதந்திரம் அல்ல; அது பிச்சை. 2014ம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது,’ என பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார்.

‘சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய கங்கணாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறவேண்டும்; அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’  என காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சித் தலைவர்கள் கங்கணாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாட்டின் பல மாநிலங்களில் கங்கணா மீது போலீசில் புகார்கள் குவிகின்றன.  ராஜஸ்தான், உத்தரகாண்ட்,   மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காவல் நிலையங்களில் புகார்    அளித்துள்ளன. “கங்கணா தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற்று,
பொது வெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்ற குரல் வலுத்துவருகிறது.

இந்த நிலையில் நடிகை கங்கணா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ், ராணி லட்சுமிபாய், வீரசாவர்க்கர் போன்ற தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்துடன் 1857ல் முதல் கூட்டுப் போராட்டம் தொடங்கப்பட்டது.  அதைப்பற்றி நான் அறிவேன். ஆனால், 1947ல் எந்தப் போர் நடந்தது? அதைப் பற்றி எனக்குத் தெரியாது. யாருக்காவது அதைப் பற்றித் தெரிந்திருந்தால் பதில் கூறுங்கள், நான் என் பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருகிறேன், மன்னிப்பும் கேட்கிறேன். எனக்கு உதவுங்கள்.

‘பகத் சிங்கை காந்தி ஏன் இறக்க விட்டார்?’
‘வலதுசாரிகளால்தான் தேசப்பற்று  வளர்ந்தது. ஆனால், அவர்கள் ஏன் விரைவில் மடிந்தார்கள்?’
‘நேதாஜி ஏன் கொல்லப்பட்டார்?’
காந்தியின் ஆதரவு ஏன்  அவருக்குக் கிடைக்கவில்லை?வெள்ளைக்காரர்களால் பிரிவினைக் கோடு வரையப்பட்டது  ஏன்?
‘சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக இந்தியர்கள் ஒருவரையொருவர்  கொன்றது ஏன்?’ என்றும் கங்கணா தனது பதிவில் கூறியுள்ளார்.

இந்தியாவை மொத்தமாக சூறையாடிய ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜியின் ஐ.என்.ஏ. படை சிறிய போரை நடத்தியிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்கும், நேதாஜி பிரதமர் ஆகியிருப்பார். வலதுசாரிகள் சண்டையிட்டு சுதந்திரத்தை வாங்க தயாராகிய நிலையில், காங்கிரசின் பிச்சை பாத்திரத்தில் சுதந்திரம் தரப்பட்டது ஏன்? –  ‘இதைப் பற்றியெல்லாம் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு புரியவையுங்கள்’ என்று  கங்கணா தனது பதிவில் கூறியுள்ளார்.

இவருக்கு எதை, யார், புரிய வைக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

‘சிறுமாமனிசர்’  பாரதி மணி

சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

0
‘அது ஒரு கனாக் காலம்’ தொடரில் ஜெயராம் ரகுநாதன் "ரத்தம் கக்கும் மெட்ராஸ் " என பிரிட்டிஷ் கும்பினியின் பருத்தி ஏற்றுமதி, நெசவாளர்களை அடிமைப்படுத்தித் துணி நெய்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தது அந்த காலத்தை...

“நான் மாடல் இல்லையே!”

0
- ஆறுமுகம் செல்வராஜு   ஐரோப்பிய இரும்பு பெண்மணி ஜெர்மனியின் தேவதை, என வர்ணிக்கப்படுபவர்  அங்கெலா. இவரைப்போன்ற ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைப்பாரா? உலகின் மிகப்பெரிய ஆளுமை நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குப் பதினாறு ஆண்டு காலமாக அதிபராகவும், ஐரோப்பிய...

மன நிறைவாகவே தொடர்கிறது தினமும்…

1
முகநூல் பக்கம்   டீச்சர் உங்கள ரெம்பப் பிடிச்சிருக்கு எனக்கு... முத்தமிட்டுக் கொண்டாள் ரக்சிதா செல்லம்... பிரம்மாண்டமான தனியார் பள்ளியில் L.K.G., U.K.G., படித்திருக்கிறாள் போலும்... வந்த இரண்டு நாட்களில் இங்க விளையாட பார்க் இல்லையா, டைரி sign...

மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் பெயர்

0
- M.A. முஸ்தபா   ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் சூட்டப்படுகிறது. 'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி...