0,00 INR

No products in the cart.

வீடு தேடி வரும் கல்வி

தலையங்கம்

 

ந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலமான  கொரோனா  பெருந்தொற்று. கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், மிக முக்கியமானது கல்வி. ஓர் ஆண்டுக்கு முன் ‘சில நாட்களுக்கு’ என்ற அறிவிப்புடன் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் கதவுகள் ‘திறக்காமலேயே போய்விடுமோ?’ என்ற அச்சம் எழுமளவுக்குத் தொடர்ந்து மூடும் தொடர்கதையானது. இம்மாதம் முதல் தேதி பள்ளிகள் மீண்டும்  திறக்கப்பட்டபோது,  சொல்லொணா துயரங்களோடு வீடுகளில் அடைந்து  கிடந்த குழந்தைகள், பள்ளி நோக்கி ஆர்ப்பரித்து வந்த மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்களைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்தனர். ‘பள்ளி விடுமுறை’ என்றால் பேரானந்தம் அடையும் சிறார்கள், முதல் முறையாகப் பள்ளித் திறப்பைக் கண்டு பேரானந்தத்தோடு பள்ளி நோக்கி ஓடிவந்த காட்சிகள் அண்மைக்காலத்தில் மனதைத் தொட்ட காட்சிகளில் ஒன்று.

ஆனால், பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இணைய வழித்தொடர்புகள் மூலம் கல்வி பெறும் வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்கள் ஒருபுறம், அத்தகைய வசதிகள் இல்லாமலேயே கல்வியையும் கற்பதில் ஆர்வத்தையும் இழந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருபுறம் எனப் பிரிந்து நின்றனர். இப்படியான சம வயது, சம வகுப்புக் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, ‘கற்றல் இடைவெளியை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்ய முடியாத இடைவெளியாகிவிடுமோ’ என்ற அச்சம் எழுந்தது.

பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மேம்பட்டு இருந்தாலும், அனைவருக்கும் தரமான, சமமான பள்ளிக் கல்வியை நோக்கிப் பயணிக்க ‘நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது’ என்பதை உணர்த்திய தருணம் இது.

இந்த நிலையைச் சீராக்க அரசு அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘இல்லம் தேடிக் கல்வி’. இந்தத் திட்டம் 18 மாதங்கள், கொரோனாவால் முற்றாகக் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. அந்த இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், வாரத்தில் ஆறு மணி நேரம். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் வழியாக மாணவர்கள்  குடியிருப்புப் பகுதிகளில் கற்றல்   செயல்பாடுகளை முன்னெடுக்கவிருக்கிறார்கள். இவர்கள் பள்ளிப்பாடங்களுக்கு மட்டும் டியூஷன் எடுக்காமல், மாணவர்களைக் கவரும் ஆடல், பாடல், புதிர், விளையாட்டுகள் என்ற முறையில் பள்ளிச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்.

இதன் முக்கிய நோக்கம் பள்ளிக்குச் செல்லாமலிருந்த நீண்ட இடைவெளியில் பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகள் பள்ளி செல்வதைத் தவிர்த்துப் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரச்செய்ய வேண்டும் என்பதுதான்.

இது ஒரு ஆறு மாதச் செயல்திட்டம். இதற்கான திட்டச் செலவு ரூ.200 கோடி. இந்த நிதியாண்டின் வரவு-செலவு அறிக்கையில், இத்திட்டத்துக்கான தேவையும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு செயல்திட்டம் இது. காலச்சுழலின் கட்டாயத்தால் எழுந்திருக்கும் இந்தத் திட்டத்தை வரவேற்போம்.

ஒரு திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட அரசின் நிதி ஆதாரம், தன்னார்வலர்களின் ஆர்வம், அதிகாரிகளின் செயலாக்கும் திறன் மட்டுமே போதாது. இந்தத் திட்டத்தின் சிறப்பை, அது நம் கிராமப்புறக் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவப்போகும் நல்ல முயற்சி என்பதை மக்கள் உணர்ந்து ஆதரவளிக்க வேண்டும்

மாணவர்களில் கல்வி இடை நிற்றல் நிகழ்ந்துவிடக்கூடாது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வேண்டாமே! இந்த அக்னிப் பரீட்சை

1
தலையங்கம்   ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’  என்றொரு திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவச் சேவையில் சேர்வதற்கு தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஒன்றிய அரசு...

காலத்தின் கட்டாயம் -சாட்டையைச்  சுழற்றுங்கள்

1
தலையங்கம்   இன்றைய நாகரிக உலகில் தொழில்நுட்பமானது பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். வளர்ச்சி ஒருபுறம் பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் பல...

ஆபத்தான பீஹார் மாடல்

1
தலையங்கம்   இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு...

பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகள் அல்ல!

தலையங்கம்   பல்கலைகழங்கங்களின் பட்டமளிப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் நிகழ்த்தப்படும் உரைகள் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தகுந்தவையாக இருந்த காலம் ஒன்று உண்டு. நேரு, இராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள், தங்கள் பணிகளுக்கிடையே இந்த உரைகளை...

வருமுன் காக்க

தலையங்கம்   வருமுன்னர்க் காதாவான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும். அரசன் மக்களை நாட்டிற்கு வரும் கேடுகளிலிருந்து  அவை வரும்முன் காக்க வேண்டும். அதுவே சிறந்த ஆட்சி என்கிறான் தெய்வப்புலவன். அப்படிக் காத்துக்கொள்ள வேண்டிய ஒரு...