0,00 INR

No products in the cart.

“நான் மாடல் இல்லையே!”

– ஆறுமுகம் செல்வராஜு

 

ரோப்பிய இரும்பு பெண்மணி ஜெர்மனியின் தேவதை, என வர்ணிக்கப்படுபவர்  அங்கெலா.

இவரைப்போன்ற ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைப்பாரா?

உலகின் மிகப்பெரிய ஆளுமை நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குப் பதினாறு ஆண்டு காலமாக அதிபராகவும், ஐரோப்பிய நாடுகளுள் தவிர்க்க முடியாத தலைமையுமாக விளங்கிய ‘அங்கெலா மெர்கெல்’ (Angela Merkel) அவர்கள், அதிபர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார்.

ஜெர்மனியின் சக்திவாய்ந்த பதவியிலிருந்த இந்தப் பதினாறு ஆண்டுகளில், இவரின் உறவினர்கள் எவரும் அரச பதவிகளில் அமர்த்தப்படவில்லை. தனக்குச் சொந்தமாக, வில்லாக்களையோ, கட்டடங்களையோ, வணிக வளாகங்களையோ, கார்களையோ, தனி விமானத்தையோ, உல்லாசப் படகையோ இவர் வாங்கியிருக்கவில்லை.

எந்தவொரு சுயலாபமும் இல்லாத ஒரு தலைவராக இன்றுவரை இருந்து, வெளியேறுகிறார். பதினாறு ஆண்டுகளில் தனது தோற்றத்திலோ, ஆடைகளிலோ சிறிய மாற்றத்தையும் செய்து கொள்ளாதவர்.

பல தடவைகள் முன்னர் அணிந்த உடைகளையே மீண்டும் அணிந்தபடி விழாக்களில் காட்சி தந்திருக்கிறார். இதைக் கவனித்த ஊடகவியலாளர்கள் அவரிடமே கேள்வியும் எழுப்பினார்கள்.

“ஏற்கெனவே அணிந்த உடைகளையே நீங்கள் மீண்டும் மீண்டும் அணிவதாக நாங்கள் அவதானிக்கிறோம்” என்று ஒரு ஊடகவியலாளர் கேட்டதற்கு, “நான் மக்களுக்குச் சேவை செய்யும் பணியிலிருக்கிறேனேயொழிய, மாடலாக இல்லையே!” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

இன்னுமொரு தடவை ஊடகச் சந்திப்பின்போது, “நீங்கள் வீட்டில் சமையலுக்கும், பணிகளுக்குமாக எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “என்னுடைய வீட்டில் எவரும் பணியாளராக இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. நானும், என் கணவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்கிறோம்” என்றார்.

அப்போது குறும்புக்காரப் பத்திரிகையாளர் ஒருவர், “அப்படியெனில், வீட்டின் துணிகளைத் துவைப்பது நீங்களா, உங்கள் கணவரா?” என்று கேட்க, “நான் துணிகளை ஒன்று சேர்த்துத் துவைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்ய, கணவர் துவைக்கும் இயந்திரத்தை இயங்க விடுவார்” எனக் கூலாகப் பதில் கொடுத்தார்.

இயற்பியல் (Physicist), குவாண்டம் வேதியியல் (Quantum Chemist) ஆகிய துறைகளில் உயர் கல்வித் தகுதிபெற்ற அங்கெலா, ஒரு சாதாரண குடியிருப்புக் கட்டடத்திலேயே வாழ்ந்து வருகிறார்.

அவர் பதவி வகிக்கும் முன்னரும், பதவி வகிக்கும்போதும், பின்னரும் அதே மாடிக் கட்டடம்தான்.

ஒரு சிறிய நீச்சல் குளமோ, தோட்டமோ இல்லாத குடியிருப்பு அது.

இவரைப் போன்ற ஓர் அதிபர் இனி மீண்டும் ஜெர்மனிக்குக் கிடைப்பது கடினமே!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...