0,00 INR

No products in the cart.

மிதிவண்டிகளின் தோழன்!

அமெரிக்காவின்  முகங்கள்!

– முனைவர் சோமலெ சோமசுந்தரம்

மிதிவண்டிகளின் தோழன்  – ஆரெகன் மாநிலம்

 

லகெங்கும் கிராமங்களில்கூட மிதிவண்டிகளின் எண்ணிக்கை குறைந்து, இரு சக்கர தானியங்கி வண்டிகளின் (Two Wheelers) ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் நம் உடலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, ஆரெகன் மாநில அரசு 1971-இல் அறிமுகப்படுத்திய மிதிவண்டி மசோதாவே மிதி வண்டிகள் தொடர்பாக அமெரிக்க மாநிலங்களில் முதன் முதலாக வந்த சட்டமாகும்.

அந்த சட்டப்படி, ஆண்டுதோறும், மாநிலப் போக்குவரத்து நிதியிலிருந்து ஒரு சதவிகிதம் மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் விளைவாக மாநிலம் முழுவதும்
மிதிவண்டிகளுக்கான தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மிகப் பெரிய நகரான போர்ட்லேண்டில் மட்டும் 350 மைல் நீளத்திற்கு மிதி வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிவேகமாகச் செல்லும் மகிழ்வுந்துகள் நிறைந்த அமெரிக்கச் சாலைகளில் மிதிவண்டிகளில் செல்வது மிகவும் ஆபத்தானது. அமெரிக்க மக்களில் 0.5. சதவிகிதத்தினரே அலுவலகம் செல்ல மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், போர்ட்லேண்ட் நகரில் 5 சதவிகித மக்கள் தினமும் அலுவலகத்திற்கு மிதிவண்டிகளில் செல்கின்றனர்.
மிதிவண்டிப் பயணத்தை பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற, மாநில மற்றும் நகர அரசுகள் எடுத்துள்ள முயற்சிகளே அதற்குக் காரணம். “மிதிவண்டிகளுக்குத் தோழமையான நகரம்” எனப் போர்ட்லேண்ட் பெயர் எடுத்துள்ளது.

சைவ மயம்!

காலையில் எழுந்ததும்  (“bacon”, “sausage”) எனப்படும் பன்றிக் கறி வகைகளில் தொடங்கி, மூன்று வேளையும் அதிக அளவில் மாட்டு இறைச்சியையும், பன்றி இறைச்சியையும் சாப்பிடுபவர்கள் அமரிக்கர்கள். “இந்த நாட்டில் சைவ உணவே கிடைக்கதா?” என்பதே அமெரிக்கா வரும் இந்தியர்களின் முதல் ஏக்கமாக இருக்கும். அவர்கள் போர்ட்லேண்ட் நகரத்திற்குச் செல்லும் வரை பசுமையைப் போற்றும் இந்த மாநிலத்தின் உணவகங்களில், குறிப்பாக ’போர்ட்லேண்ட்’ போன்ற பெரு நகரங்களில் அமெரிக்காவின் மற்ற மாநிலங்களைவிட சைவ உணவு வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் 80 சதவிகித உணவகங்கள் உள்ளூர் மக்களால் நடத்தப்படுபவை. நாடு முழுவதுமுள்ள விரைவு உணவகங்கள் (fast food) போன்று இல்லாமல் அவை உள்ளூரில் விளையும் காய்கறிகளைப் பயன்படுத்தி சைவ உணவுகளை வழங்குகின்றன.

ஆரெகன் பாதை

அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஆரெகன் பாதை (Oregan Trail) மிசௌரி மாநிலத்தில் தொடங்கி 2,200 மைல்களுக்கு அப்பால் ஆரெகன் சிட்டியில் முடிகிறது.  “Lousiana Purchase” என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1803-இல் விலைக்கு வாங்கிய 828,000 சதுர மைல் பகுதியை ஆய்வு செய்து வரைப்படமாகத் தயாரிக்கும் பொறுப்பை லூயிஸ், கிளார்க் என்ற இருவரிடம் அதிபர் தாமஸ் ஜெபர்சன் ஒப்படைத்தார். அவர்களைத் தொடர்ந்து அந்தப் பாதையில் ஆயிரக்கணக்கான வெள்ளையர்கள் குதிரை வண்டிளில் பயணம் செய்து புதிய அமெக்காவின் பல மேற்கத்திய மாநிலங்களை உருவாக்கினார்.

பணம் காய்க்கும் மரங்கள்!

வருடத்தில் 155 நாட்களுக்கு மழை பெய்யும் மாநிலம் இது என்பதால் எப்போது குடை எடுத்துச் செல்ல வேண்டுமென்ற சந்தேகத்திற்கு வாய்ப்பில்லை. மேகமூட்டமும் அதிகமாக உள்ள மாநிலம் ஆரெகன். அந்த தட்பவெட்ப நிலைமையும், மண் வளமும், மரங்கள் நன்கு வளரும் காடுகளுக்கு உகந்ததாக உள்ளன. ஆரெகன் மாநிலத்தின் 47 சதவிகித பரப்பளவு காடுகளில் உள்ளது. அந்தக் காடுகளில் மூன்றில் இரண்டு பகுதி அரசிடமும், எஞ்சியுள்ள பகுதி தனியார் நிறுவனங்களின் மேற்பார்வையிலும் உள்ளன.

மரங்களை வெட்டி, மீண்டும் அப்பகுதிகளில் புதிய மரக் கன்றுகளை நட்டு, பிறகு அவற்றையும் வெட்டி நடைபெறும் தொழில் ஆரெகன் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் அமெரிக்க நாட்டின் மரத் தேவைகளுக்கும் முதுகெலும்பாக விளங்குகின்றது. அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் காடுகள் அதிகம் இருந்தாலும், கட்டட வேலைகளுக்கான மரங்களை வளர்த்து வெட்டுவதில் ஆரெகன் முன்னிலையில் உள்ளது.

மரங்களுக்குப் பஞ்சமில்லை என்பதாலும், மரங்களே மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாலும் ஆரெகனில் மரங்களை வெட்டத் தடையில்லை. ஆனால், வெட்டிய ஒரு வருடத்திற்குள் மீண்டும் அங்கு புதிய மரங்களை நட்டாக வேண்டும். அத்தோடு நீங்கள் அரசிடமிருந்து தப்பிக்க முடியாது. அந்தக் கன்று அடுத்த ஆறு வருடங்களுக்கு நல்ல நிலையில் உறுதியாக வேரூன்றி வளருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்! அரசின் விதிமுறைகளை தனியார் நிறுவனங்கள் கண்டிப்புடன் பின்பற்றுவதால் மரங்கள் வெட்டப்படுவதும், வளர்க்கப்படுவதும் ஆரெகனில் தொடர்கதையாக உள்ளது.

பசுமை மற்றும் சுற்றுப்புறு சூழலைப் பேணிப் பாதுகாக்கும் ஆரெகனில் “இப்படி மரங்களை வெட்டுகிறார்களே” என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். மாநிலத்தின் மூன்று கோடி ஏக்கர் காடுகளைக் காட்டுத் தீ, பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றிடமிருந்து காப்பாற்ற, வளர்ந்த மரங்களை வெட்டுவதும், புதிய கன்றுளை நடுவதும் உதவியாக உள்ளதாம். இந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் பெரும்பாலானா வேலைகள் மரங்களை நம்பியே உள்ளன. வருடத்திற்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் (13 பில்லியன் டாலர்) பணத்தை ஆரெகனுக்கு கொண்டு வரும் இந்த மரங்கள் சாதாரண மரங்கள் அல்ல, பணம் காய்க்கும் மரங்கள்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அமெரிக்காவின் மதுரை

0
முனைவர் சோமலெ சோமசுந்தரம்   கொளுத்தும் வெயில், காரமான உணவு வகைகள், விறகு அடுப்புச் சமையல் என தமிழகத்திற்கும் டெக்சஸ் மாநிலத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சந்திர மண்டலத்திலிருந்து முதலில் ஒலித்த வார்த்தை “ஹுஸ்டன்.’’ இந்த...

இறந்தும் இடம் மாறும் அதிபர்

0
- முனைவர் சோமலெ சோமசுந்தரம்     படைக்கு முந்து! தன்னார்வத் தொண்டிற்கு அமெரிக்கர்களும், அமெரிக்காவும் கொடுக்கின்ற முக்கியத்துவமே என்னுடைய முப்பத்தேழு ஆண்டு கால அமெரிக்க வாழ்வில் என்னை மிகவும் கவர்ந்த அமெரிக்கப் பண்பாகும். 65 சதவிகித அமெரிக்கர்கள்...

இரண்டு  வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன்

1
- ஹர்ஷா   அமெரிக்காவில் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்று ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.  நன்றி தெரிவிக்கும் நாள் என்பது ஒரு வட அமெரிக்கப் பாரம்பரிய கொண்டாட்டம். 200 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக,...

‘சிறுமாமனிசர்’  பாரதி மணி

சுஜாதா தேசிகன்                                             ...

உங்கள் குரல்

0
‘அது ஒரு கனாக் காலம்’ தொடரில் ஜெயராம் ரகுநாதன் "ரத்தம் கக்கும் மெட்ராஸ் " என பிரிட்டிஷ் கும்பினியின் பருத்தி ஏற்றுமதி, நெசவாளர்களை அடிமைப்படுத்தித் துணி நெய்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தது அந்த காலத்தை...