0,00 INR

No products in the cart.

உங்கள் குரல்

‘அது ஒரு கனாக் காலம்’ தொடரில் ஜெயராம் ரகுநாதன் “ரத்தம் கக்கும் மெட்ராஸ் ” என பிரிட்டிஷ் கும்பினியின் பருத்தி ஏற்றுமதி, நெசவாளர்களை அடிமைப்படுத்தித் துணி நெய்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தது அந்த காலத்தை கண்முன் நிறுத்தியது.

இயக்குனர் ஷங்கர், ஜீன்ஸ் படம் இயக்கிய காலத்தில் திரையுலகப் பிரபலங்களுக்கு ஒரு பத்திரிகை சார்பில் “The making of jeans” படக்காட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எல்லோரும் ‘ஜீன்ஸ்’ படம் பற்றிய காட்சி என நினைக்க, ஜீன்ஸ் ஆடை தயாரிப்புப் பற்றிய குறும்படம் ஒன்று ஓடியது. அதையும் நடிகர் ரகுவரன் ரசித்துப் பார்த்ததாக, அந்நாளில் செய்தி வெளியானது.
– ஸ்ரீகாந்த், திருச்சி

‘இடைத்தோ்தல்  முடிவுகள் ஒலித்த எச்சாிக்கை மணி’, தலையங்கம் மிகமிகச் சிறப்பு. ஆளுவோா் புாிந்து கொள்வதோடு, புாிந்து நடந்து கொள்வதே நல்லது. தைாியமாக எடுத்துக்காட்டுகளோடு, அமைந்த கல்கியின் தலையங்கத்திற்குப் பாராட்டுக்கள்!
– நாகராஜன், செம்பனார்கோவில்

  “ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறதா?” என்ற செய்தியைப் படித்ததும் ஒருவித பய உணர்வு ஏற்பட்டது. ஃபேஸ்புக் தாய் நிறுவத்தின்  பெயர் மட்டுமே “மெட்டா” என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த “மெட்டா என்ற தாய் குட்டிகளைவிட பல அடிகள் பாயும் சக்தியுடைய புதுவடிவம் எடுக்கப் போகிறது” என்ற வார்த்தைகளைப் படித்ததும்,  ‘ஃபேஸ்புக்கில் இருக்கலாமா வேண்டாமா’ என்று யோசிக்க வைத்த அருமையான செய்தியை எங்களுக்குக் கொடுத்தது பாராட்டுக்குரியது!
-ராதிகா, மதுரை

‘தராசுவின் பதில்கள்’ என்றாலே அதில் நிச்சயம் அறிவுக்கு விருந்தாக ஏதேனும் கிடைக்கும். இந்த வாரம் நடிகை நிவேதா தாமஸ்   “கிளிமாஞ்சாரோ”வில் இந்தியக் கொடியை பறக்க விட்டதைப்  படிக்கும் போது பெருமையாக இருந்தது. அவருக்கு அவர் நடிப்பைவிட இதுபோன்ற மலையேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவது பெருமையாக உள்ளது. அருமையான செய்தியைக் கொடுத்த தராசுவுக்குப் பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், திருச்சி

‘உஷாதீபன்’ எழுதிய “உள்ளம் என்பது ஆமை” சிறுகதை படித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்தது. ’பணம்’ என்றால் அனைவரும் திரும்பிப் பார்க்கும் இந்த காலத்தில் கூட ’பணம் வேண்டாம்’ என்று சொல்லும் வேட்டையனின்  மனமாற்றத்திற்குக் காரணம் அவருடைய வயிறு நிரம்பி இருப்பதுதான் என்பது புரிந்தது. “பணம் இல்லாதவர்களுக்கு மனசு விரிந்திருக்கிறது, பணம் இருப்பவர்களின் மனம் எல்லாவற்றையும் கணக்கு பார்க்கிறது” என்ற வரிகள் மிகவும் அருமை.  நல்லதொரு செய்தியைச் சொன்ன அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், மதுரை

‘வெள்ளை மாளிகையில் தீபாவளி’  கட்டுரையை மிக அருமை. படித்ததும் மகிழ்ச்சியில் துள்ளினேன். ’தீபாவளி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’ என்று தாக்கல் செய்யப்பட்டது பெருமைக்குரிய விஷயம். “இருளில் அறிவு ஞானம் மற்றும் உண்மை மறைந்துள்ளது என்பதைத் தீபாவளி ஒளி நினைவூட்டுகிறது” என்ற ஜோ பைடன் அவர்களின் செய்தி உண்மைதான் என்று உணர வைத்தது.
– பிரகதாநவநீதன், மதுரை

பெட்ரோல் , டீசல் விலையை இடைத்தேர்தலுக்கு முன்பே குறைத்திருக்க வேண்டும் என்று தராசார் கூறியுள்ள பதிலில் ‘அரசியல் சதுரங்க வேட்டையை ‘ புரிந்து கொள்ள முடிகிறது. ‘கேக் வெட்டும் பணத்தில் கிணறு வெட்ட முடியுமா ? ‘,  ‘வெவ்வேறான தினகரன், சசிகலா பாதையில் தொண்டர்கள் வருவார்களா?’ என்று தராசார் வழக்கம் போல் தனது ஸ்டைலில் பதில் தந்து அசத்தியுள்ளது ‘வேற லெவல் ‘ .
– சத்யா, வேலூர்

லக வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் குறித்த கட்டுரை அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது. தலைவர்கள் பழைய விவாதங்களை விட்டொழித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய சவாலான  காலகட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். ’இன்றைய மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகள் வாழ்வதற்கு உகந்ததாகப் பூமியை வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு வாழ்கின்ற அனைவருக்கும் உண்டு’ என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘ஜெய் – சூர்யா’ கவர் ஸ்டோரி கண்ணீரை வரவழைத்தது. ‘உங்கப்பன  கொன்னவங்க குடுத்த பணத்துலதான் நாம சாப்பிடறோம்னு சொல்லனுமா சார்?’ என்ற வரி படம் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிழிந்து உயிரை தொங்க விடுகிறது. ‘அடிக்குற வலி கொஞ்ச நாள்ல சரியாயிடும்; ஆனா திருட்டுப்பட்டம்?’ என்று கேட்பது, வறுமையிலும் விளிம்பு நிலை மக்கள் அற வாழ்க்கை வாழ துடிப்பதின் சுகப்படாத சோகம். ‘ஜெய் பீம்’ தமிழ் திரை உலகின் புதிய அவதாரம் ;  புதிய நம்பிக்கை நட்சத்திரம். தமிழ் சினிமாவை புதிய உயரத்திதுக்கு எடுத்துச் செல்லும். ’ஜெய் பீம்’ விடியலுக்கு வழிவகுக்கும்.
– ஆர்.ரகுபதி, தாம்பரம்

‘இரண்டு பெண்கள், 27 நாட்கள் , 8000 கி.மீ . பயணம் –  ஸ்கூட்டரில் ‘ கட்டுரை படிக்கப் படிக்க த்ரிலாக இருந்தது.
‘பயணமே’ தனக்குப் பிடித்த வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து, தொடர் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் பெற்று தங்களை உற்சாகமாக வைத்திருக்கும் ஸ்ரீலேகா, ஷோபா இருவரும் சிங்கப் பெண்களே. பயணத்தின் மூலம் அவர்கள் பெற்ற அனுபவம் நமக்கும் படிப்பினையாக உள்ளது. ‘உலகம், நாம் அன்பாக நோக்கினால் அதுவும் அன்பைக் காட்டும்’ என்று கூறியுள்ளது அசத்தல்.  வயது என்பது எண்ணிக்கையே. வயதாக வயதாக பலம் அதிகரிப்பதாக’ கூறி நம்மையும் உற்சாகப்படுத்தும் இவர்களின் நேப்பாள் – பூட்டான் பயணம் இனிதாகட்டும். பயணங்கள் வாழ்வை ருசியாக்கிறது.
– நெல்லை குரலோன்,  நெல்லை

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

0
உங்கள் குரல்    மணிரத்தினத்தின் “அலைபாயுதே” படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு “டோபி”யை பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும். - ஜானகி பரந்தாமன், ...

ஜாதியைச் சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

0
உங்கள் குரல்    ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா்  பிறந்தநாளை  முன்னிட்டு  கலைஞா்  படம் அட்டைப்படமாக  அலங்காிக்கும்  என நினைத்தேன். இருப்பினும்  சொல்லாமல்  சொல்லும் விதமாய் பிரதமா் மோடி - முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு ...

தர்மத்தில் பேரம் பார்க்கக்கூடாது

2
முதலில் முகம் தெரியாதவர்களுக்கு  உதவுதல் கூடாது . எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் என்பதை கடைசிப் பக்கத்தில்  படித்து வாசகர்களாகிய நாங்கள் உஷாராக இருந்துக் கொள்கிறோம். - மதுரை குழந்தைவேலு, சென்னை - 600...

புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.

2
தலையங்கத்தில் “முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு கதறும் யானை” என்று தமிழக ஜவுளித்துறையை ஒப்பிட்டது கருத்து நோக்கிலும் சுவை நோக்கிலும் அருமை...அருமை ! - நெல்லை குரலோன் நூல் விலை ஏறும் போது , துணி...