பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?
Published on

ர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் "அதற்காக தனி பயிற்சியும் எடுத்துக் கொள்வேன் என்று சொல்வதுதான் அவருடைய வெற்றி வாகை சூடுவதற்கான படிகள்" என்று உணர வைத்த அருமையான பேட்டி.
– உஷா முத்துராமன், மதுரை

லக அமைதி குறித்த கேள்விக்கு, எதார்த்தம் தழுவிய  தராசார் பதில் அபாரம்…அபாரம்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 'எந்த ஒரு வெற்றியும் எல்லோராலும் ஏற்கப்படுவதில்லை. மேலும் எது மனிதகுல வளர்ச்சி என்பதை வரையறுக்க முடியுமா?' என்று பந்தை படு நேர்த்தியாக _ நேர்மையாக திருப்பி விட்டிருந்தது, ஆழ்ந்த சிந்தனைக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், 'அமைதியின்மை என்பது உலகம் உள்ளளவும் இருக்கும் ' என்று இன்றைய சூழலை மனதில் கொண்டு, சொல்லியிருந்ததை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. "ஒரு தனி மனிதன் – ஒரு குடும்பம் – ஒரு காலனி – ஒரு நகரம் அமைதியாக இருக்க, இங்கே வாய்ப்பு வெளிச்சம் இருக்கும்போது, உலகத்துக்கும் சாத்தியம்தான்" என்று பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே!

னிதகுலச் சொத்தான ஆறறிவுக்கு  லட்சணமும், இலக்கணமும், அழகும் இலக்கும் அவை தானே?!
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

வ்வொரு வாரமும் மம்முட்டியின் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. இந்தத் தொடரைப் படித்த பின்னர் அவர் படங்களை மேலும் ரசித்துப் பார்க்கிறேன்.
– பார்த்திபன்,  திருச்சி

தேவ மனோகரி தொடர்கதை ஒரு பெண்ணின் மனதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. கிட்டத்தட்ட அந்த உணர்வுகளை அனுபவித்தவள் நான்.
– மல்லிகா தமோதரன், தூத்துக்குடி

  விசித்திரன் விமர்சனம் விசித்திரமாகவே அமைந்துவிட்டது.
– அ. சம்பத், சின்னசேலம்

"கொரோனா தடுப்பூசி போட பொது மக்களை கட்டாயப்படுத்துவது அரசியல் சட்டம் 21வது பிரிவின் கீழ் விரோதமானது" என்பது நாணயத்தின் ஒரு பக்கம் என்றால், "கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்கை முடிவுகளை எடுக்கவும். தகுந்த காரணத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது" என்பது மறுபக்கம் ! இந்த இரண்டையும் அதிநுட்ப கவனத்துடனும், ஆழ்ந்த சமூக அக்கறையுடனும், தெளிந்த நுட்பத் திறனில் தலையங்கத்தில்  விளக்கி, சுட்டியிருந்தது அக்மார்க் தரம்!
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

ன்னுடைய தந்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.(வயது 75) அவரிடம் உலகக்குடிமகன் பேராசிரியர் பற்றி சொன்னபோது படிக்க ஆரம்பித்தவர் இப்போது  மிக ஆர்வமாக வாரந்தோறும் படிக்கிறார். அவர் பேராசியர் கண்ணனை தொடர்புகொள்ள விரும்புகிறார். தொடர்பு எண் தர முடியுமா?
– பால சுப்ரமணியன், புதுடில்லி 

"டிஜிட்டல் மோசடிகள்" பக்கத்தை படித்தவுடன் பகீரென்று இருந்தது. விஞ்ஞானம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அந்த அளவுக்கு மோசடிகளும் வளர்வதை நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. மிக அருமையான எச்சரிக்கையை எங்களுக்குக் கொடுத்து நல்லதொரு விழிப்புணர்வு செய்தியினை கொடுத்த கல்கியின் இதுபோன்ற சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை.
– கிருஷ்ணன், மதுரை -6

"கவனிக்கப்படாத இயற்கை" என்ற "சுஜாதா தேசிகன்" அவர்களின் "கடைசி பக்கதில் கோஸ் காயினை விவசாயி இலவசமாக கொடுத்தவுடன் அவருடைய மனதில் இருந்த மனிதாபிமானத்தை நினைத்து மனம் மகிழ்ச்சியாக இருந்தது.
ராதிகா, மதுரை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com