கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                          ஓவியம்: ரஜினி

"தலைவர் ஜெயில்ல இருக்கும்போதுகூட கட்சிக்காகப் பாடுபடறாரு!"

"எப்படிச் சொல்றே.?"

" ''கைதிகள் அணி'ன்னு ஒண்ணை ஆரம்பிச்சு ஜெயில்ல இருந்த கைதிகளை  எல்லாம் கட்சியில சேர்த்து விட்டுட்டாரு!"

– வி. ரேவதி, தஞ்சை

"ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமாக இருக்கிறதுன்னு சொன்னதுக்கு என்னை மனநல ஆஸ்பத்திரில சேர்த்துட்டாங்கய்யா…"

"அநியாயமா இருக்குதே…
நீ என்ன சொன்னே?"

"இதயத்தில் இருக்கும் என்னவளுக்கு குளிருமேன்னு சொன்னேன்!"

– எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

"மேடைப் பேச்சுல தலைவர் இப்பல்லாம் குட்டிக் கதை சொல்றதில்லையே, ஏன்?"

"கூட்டம் கலைஞ்சிடுதாம்!"

– வி. ரேவதி, தஞ்சை

"என்னோட ராசிக்கு இன்னிக்கு வெற்றின்னு போட்டிருக்கு."

"அதையெல்லாம் நம்பி என்னோட சண்டைக்கு வராதீங்க."

– தீபிகா சாரதி, சென்னை

"நான்தான் உன்னைக் காதலிக்கிறேன்னு உங்க அப்பாகிட்ட சொல்லிட்டியா லதா?"

"இல்லையே….!?"

"பின்ன எப்படி திடீர்னு என் கையை நீட்டச் சொல்லி, 'நீ காதலிக்கிற பொண்ண கட்டிக்கிட்டா வாழ்க்கையில 'ஓகோ'ன்னு வருவே'ன்னு சொன்னாரு…?"

– வி.ரேவதி, தஞ்சை

"நிறைய பேசினா கழுத்து வலிக்குது டாக்டர்."

"வாய்தானே வலிக்கும், கழுத்து எப்படி வலிக்குது?"

"என் பொண்டாட்டி பேசிக்கிட்டே இருக்கா… நான் தலைய தலைய ஆட்டிக்கிட்டே இருக்கேனே…"

– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com