ஆசிரியர்கள் தான் நம்மைச் செதுக்கிறார்கள்

ஆசிரியர்கள் தான் நம்மைச் செதுக்கிறார்கள்
Published on

உங்கள் குரல்

'தெய்வ அனுக்கிரகம் வேண்டுமானால் ஆக்கல், காத்தல், அழித்தல் மூன்றையும் செயல்படுத்தும் தேவியைப் பற்றிக்கொள்ள வேண்டும். அவள் நினைத்தால் நாம் பரலோகத்திற்கு செல்லலாம், அவள் அருள்பார்வை  இல்லையென்றால் நாம் பூமியில் வசிக்க முடியாது' என்று ராமகிருஷ்ணர் கூறியதன் மூலம் நம்முடைய ஒழுக்கத்தின் தேவையும், எல்லாம் வல்ல தேவியின் மகிமையும் வெளிப்படுகிறது.  தேவியைப் போற்றுவோம். பெண்களை மதிப்போம்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

"தமிழகத்திற்கு தலைகுனிவு" என்ற கல்கியின் தலையங்கம் நெத்தியடி. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டிய "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள். "இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தால் நாட்டில் ஜனநாயகம் மெல்ல மறைந்து  சர்வாதிகாரம் நுழைகிறது என்ற அச்சம் தலைதூக்குகிறது" என்ற கல்கியின்  கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. மிகவும் அருமையான "தலையங்கம்" பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

"பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி சறுக்கலா? சதியா? என்ற கவர் ஸ்டோரி படித்ததும் பல சந்தேகங்களுக்கு பதில் சொல்வது போல இருந்தது.  "ப்ளூ புக்" விதிகள் சரியாக பின்பற்றப்படாதது தான் முதல் குளறுபடி என்று மிகத் தெளிவாக சொல்லி   "பஞ்சாப் போலீசின் சொதப்பல்" என்று ஒவ்வொரு படியாக ஆராய்ந்து சொல்லி எங்களுக்கு புரிய வைத்த "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்.
– பிரகதாநவநீதன், மதுரை

தேவ மனோகரி தொடரின் பாத்திர வடிவமைப்பு அருமை!
– சீதா ராகவன்,  மன்னார்குடி

லக குடிமகன் படிக்கும் போது என் கிராமமும் பள்ளியும் ஆங்கிலம் சொல்லித்தந்த ஆசிரியரும் நினைவில் வருகிறார். "ஆசிரியர்கள் தான் நம்மைச் செதுக்கிறார்கள்" என்பது நான் அனுபவித்து உணர்ந்த  உண்மை.
– கணேசன்,  அழகர்கோவில் மதுரை

வாராவாரம் கடைசிப்பக்கம் பிரமாதமாகயிருக்கிறது. அதைத்தான் முதலில் படிக்கிறேன். அப்பப்பா- எத்தனை விஷயங்கள்- எத்தனை அனுபவங்கள்!
– மகேஷ் மூர்த்தி,  திருச்சி

விஞர் கண்ணதாசன் பற்றிய கேள்விக்கு தராசார் அளித்த பதில், கண்ணதாசனின் மகுடத்தில் பதித்த மற்றுமொரு 'மயிலிறகு'!
– உஷா,  நாமக்கல்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com