0,00 INR

No products in the cart.

உலகச் சாம்பியனைத் தடுத்து நிறுத்திய தடுப்பூசி!

– ஆதித்யா

 

ன்னுடைய வாழ்நாளில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாமல் நாடு திரும்ப வேண்டியதாகிவிட்டது.

ஏன்?

ஆஸ்திரேலியாவில்  ஜனவரி 17ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெறுகிறது.  இதில் பங்கேற்க வேண்டும் என்றால் “கொரோனா தடுப்பூசிகள் இரு தவணைகளும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  ஆஸ்திரேலியா வந்துள்ள வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, அவரின் விசாவையும் ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்தது.

ஜோகோவிச், “கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை” எனவும், “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் ஜோகோவிச்சினை விக்டோரிய மாகாண அரசு தடுத்து வைத்துள்ளது” என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.  இதோடு மக்களின் சுகாதாரம் மற்றும் நல் ஒழுங்கு அடிப்படையில் பொது நலன் கருதி விசாவை ரத்து செய்ததாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துதான் டென்னிஸ் வீரர் விசாவை ரத்து செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், “தனக்கு உடல் ரீதியான பிரச்னை இருப்பதாலும், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டேன் என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பை  ஜோகோவிச் மீறியுள்ளதாகவும், பொய்யான தகவலைக் காட்டி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய இருப்பதாகவும்” நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்தது. மேலும்,  “தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் தடுப்பு காவல் மையத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நாட்டின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் டென்னிஸ் வீரரின் விசாவை ரத்து செய்தார். இத்தகைய நடவடிக்கையால் தன்னுடைய வாழ்நாளில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. .

இது, அவரது சொந்த நாடான செர்பியாவில் கோபத்தையும் இனவெறி குற்றச்சாட்டுகளையும் தூண்டியது. அவருக்கு ஆதரவாக நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். மற்றும் செர்பியாவின் மதத் தலைவர்கள் “தங்களுக்கு பிடித்த மகனுக்காக பிரார்த்தனை செய்ய” தேசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போது,  ஜோகோவிச்சின் தந்தை ​​ஸ்ரட்ஜான் ஜோகோவிச், “நோவாக்கும் சிலுவையில் அறையப்பட்டார்” என்று கூறி, தனது மகனின் அவல நிலையை இயேசுவின் அவலநிலையுடன் ஒப்பிட்டார்.

செர்பியா இந்த வாரம் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் கொண்டாடும் நிலையில், செர்பிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் தனது ஆதரவை வழங்கினார்.“மில்லியன் கணக்கான ஆர்த்தடாக்ஸ் செர்பியர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்” என்று தனது முகநூலில்  எழுதினார். 

 “உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நன்றி. அதை என்னால் உணர முடிகிறது, இது மிகவும் பாராட்டத்தக்கது, நான் மேல் முறையீடு செய்திருக்கிறேன்” என்று மெல்போர்னில் உள்ள தடுப்புக் காவலில் இருக்கும் ஜோகோவிச் தன், Instagramஇல் தெரிவித்தார்.

“தடுப்பூசி அல்ல பிரச்னை, அவர் செர்பியன் மற்றும் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் என்பதால் தான்” என்று ஜோகோவிச் ரசிகர் மரின்கோ புலடோவிக்  செய்த ட்வீட்டை பல்லாயிரக்கணக்கானோர் ரீ டிவிட்  செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் தன்னுடைய விசாவை 2 முறை ரத்து செய்தது தொடர்பாக ஜோகோவிச் ஆஸ்திரேலிய நாட்டின்  உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். கிளைமாக்ஸாக  அங்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டுவிட்டது

தன்னுடைய வாழ்நாளில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி சட்டப்  போராட்டத்தில் தோற்றதால் நாடு திரும்பினார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பேசும் சித்திரங்கள்

தனுஜா ஜெயராமன்   அண்மையில்  புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாரதியார் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு மாலதி செல்வம் அவர்களின் பாரதியார் ஓவியத்தை கண்டு வெகுவாக ரசித்து பாராட்டினார். தனது ஓவியக்கலை பணிகளுக்காக...

அதென்ன பெயர் 3.6.9 ?

நேர்காணல் ஜான்சன்   21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம்...

சிஎம் செல் அறிவிப்பு:  சீரியசா? ஸ்டன்ட்டா?

1
- எஸ். சந்திரமௌலி   அண்மையில் சிஎம் செல் என குறிப்பிடப்படும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகத்திலிருந்து பின்வரும்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி,  “பொது மக்கள் வீடு கட்டும்போது அதற்கான பிளான் ஒப்புதல்...

டிஜிட்டல் மோசடிகள்

0
வினோத்    இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில்  ரிசர் வங்கி  20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது.  இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது. ஃபிஷிங் இணைப்புகள் இந்த முறையில்,...

நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு

0
 - ஜான்ஸன்   அண்மையில்  லயோலா பொறியியில்   நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே. நீண்ட நாட்களுக்குப்...