தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.

தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.
Published on

அருள்வாக்கு

– சுவாமி சின்மயானந்தர்

ர் உதாரணமாக "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்வோம். 'நமோ' என்று சொல்லுவது 'காலில் விழுந்து வணங்குகிறேன்' என்பதைக் குறிப்பதாகும். காலில் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்துவங்களைக் குறிக்கிறது. ஒருவன் தன்னைவிட உயர்வான ஒன்றின் முன்னால்தான் அப்படி வணங்குகிறான். அவ்விதம் வணங்கும்போது தன்னுடைய திறமை, சக்தி, புத்தி எல்லாவற்றையுமே அந்த உயர்ந்த ஒன்றின் முன்னால் வைத்து, தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.

'நமோ' என்று சொல்லும்போது மானசீகமாகவே ஜபம் செய்பவன் இப்படிப்பட்ட சரணாகதி நிலையை எட்டிவிடுகிறான். அவனுடைய போலித்தனமான தற்பெருமை, அகங்காரம், ஆணவம் எல்லாம் அவனை விட்டு விலகிவிடுகின்றன.  அந்த நிலையில் அவன் தன்னுள் இருக்கும் பரம்பொருளைப் புரிந்துகொள்வதும் எளிதாகிவிடுகிறது. ஓம் என்பது அந்தப் பரம்பொருளின் அடையாளம். இதற்கு ஓர் உருவமும் கொடுக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய" என்று சொல்லும்போது இந்த மூன்றையுமே ஜபம் செய்பவன் கண்டுகொண்டு, 'நாராயணன்' என்ற பரம்பொருளின் முன்னிலையில் தன்னை இழந்து, பரம்பொருளை உணர்ந்து சரணாகதி நிலையை அடைந்துவிடுகின்றான். இதை நாம் சாதாரண எண்ணங்களின் மூலம் அடைய முடியாது. அதை அடைய உதவும் சூத்திரமே ஜபம்  செய்யும்போது உபயோகிக்கப்படும் மந்திரம் ஆகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com