0,00 INR

No products in the cart.

அலுவல்மொழியும் அரசியலும்

தலையங்கம்

 

“மொழிகளால் பிரிந்து மனதால் இணைந்தவர்கள் இந்தியர்கள்” என்கிறான் ஒரு ஹிந்திக் கவிஞன்.  ஆனால் “ஒரே மொழியால் இந்தியர்கள் இணையவேண்டும்” என்கிறது இன்றைய ஒன்றிய அரசு.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல்மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று பேசியிருப்பது, அரசியல் வெளியில் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இந்தியை தொடர்புமொழியாகப் பயன்படுத்துமாறு சொல்லுவது, இந்தியைப் பிரதானமாகப் பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். இந்திக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவுக்கு அது எப்படிப் பொருத்தமாகும்? என்பது இயல்பாக எழும் கேள்வி. மேலும் நாட்டின் பல தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்துவது “அந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியோ” என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், “இந்தியை அலுவல்மொழியாக நாடு முழுவதும் ஏற்பது” என்ற கருத்துக்கு தமிழ்நாட்டில் எழுந்த  கடுமையான போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல்மொழி என்பது இந்தி என்பதாகவே இன்னும் இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியை மாநிலத்துக்குள்ளும் ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விலக்களிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை அலுவல்மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும் மொழியுரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக, உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. எனவே, இந்தியை அலுவல்மொழியாக மட்டுமின்றி, தொடர்புமொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை இங்கு எழவில்லை. மத்திய உள்துறை அமைச்சரின் சமீபத்திய உரை, அலுவல்மொழி என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாகவே இந்தியை ஏற்கச் செய்வதை வலியுறுத்துகிறது.

வெவ்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களுக்கிடையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை மத்திய உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து, தென்இந்திய மாநிலங்களில் மீண்டும் ஒரு மொழிப்பிரச்னையை உருவாக்கிவிடும்.

அகில இந்திய தொடர்பு மொழி பற்றி பேசும்  அமைச்சர்  தென் இந்தியாவில் மொழிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

 

3 COMMENTS

  1. முத்தாய்ப்பாக கடைசி பத்தியில் சுட்டிக் காட்டி இருந்த கருத்து மிகவும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை!

  2. புரியாமல் ஓன்றும் இல்லை ஓரு ச்ர்வாதிக பிவாதம்தான்? வேறென்ன சொல்ல
    திருவரங்க வெங்கடேசன் பெங்களுரு

  3. இந்தி தொடர்புமொழி என்பது இந்தி பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். நாட்டில் தலை விரித்தாடும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்துவது அந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியே. அமைச்சரின் பேச்சு தென்இந்திய மாநிலங்களில் மொழிப்பிரச்னையை உருவாக்க காரணமாகி விடும். தென் இந்தியாவில் மொழிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தலையங்கத்தில் கேட்டிருப்பது வேண்டுகோள் என்பதை விட நமது நியாயமா உரிமையின் முன்னெடுத்து வைப்பதாகும்.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...