தூரிகைகள் தூங்குவதில்லை

தூரிகைகள் தூங்குவதில்லை
Published on

– ஹர்ஷா

லைஞர்களின் வாழ்வு கவலை நிறைந்தது. எல்லோரும் நக்கீரர் போல் வரகுண பாண்டியனின் தங்க அவையில் வீற்றிருப்பதில்லை. தருமி போல் வாசலில் காத்திருப்போரும் உண்டு. அது திறமைக்கு கிடைத்த மரியாதை. ஆனால் இன்றோ கலைஞர்கள் திறமையினால் மதிக்கப்படுவதில்லை. அவர்களின் பின்புலமும் நோக்கப்படுகிறது.

மரத்திலிருந்து மெல்ல இறங்கும் சறுகை பார்த்து அதில் இயற்கையின் எழிலை ரசிப்பவன்  கலைஞன்.  கண்ணால் கண்ட அடை காட்சியாக்குபவன் ஓவியன்.

ஒரு சிலரது எண்ணங்கள் மட்டும் படைப்புகளாக வெளி வருகின்றன. அனைத்து வசதிகள் இருந்தும், பலவித பயிற்சிகள் கொடுத்தும் அவர்கள் சாதனையாளர்களாக மாறுவதில்லை. ஆனால், குக்கிராமங்களில் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி பசியுடன் வாழும் ஏழை எளிய மக்களிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன.

அப்படிப்பட்ட ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் என்னும் கிராமத்தில் வசிக்கும்  இளம் ஓவியர் மணிகண்டன்.  இவரிடம் விதவிதமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன.

தனது வறுமையை பொருட்படுத்தாமல் ஓவியத்தில் சாதனை புரிவது ஒன்றே குறிக்கோள் என பல்வேறு படைப்புகளை படைத்து, சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறி கொண்டிருக்கும் இளம் ஓவியர் மணிகண்டனின் நிலை இன்றும் வறுமையின்பிடியில் இருப்பது வருந்தத்தக்கது.

இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. சிறு வயதிலே தந்தையை இழந்த இந்த ஓவியர், கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், அகர்லிக், ஆயில் பெயிண்டிங், சுவர் ஓவியம், தத்ரூப ஓவியம் போன்ற அனைத்துவிதமான ஓவியங்களிலும் கைதேர்ந்தவர். ஓவியம் வரைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்தார்.

தான் கடந்து வந்த பாதையில் அடிப்படை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். இவர் வரையும் ஓவியங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக இருக்கும். இதனைப் பாராட்டி கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் போன்றவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனாலும் இந்தப்  பேரையூர் ஓவியர் மணிகண்டனுக்கு அவர் கற்றறிந்த ஓவியக்கலை பசியை போக்கவில்லை மாறாக வறுமையை தந்துள்ளது.

இவருடைய ஓவியத் திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடைத்தாலும் பசி போக்க ஒரு பணி கிடைக்கவில்லை. எத்தனையோ அரசு பள்ளிகளில் ஓவிய பயிற்சி ஆசிரியர்கள் வேலை காலியாக உள்ள நிலையில், இவருக்கு ஒரு அரசுப் பள்ளியில் பணி அல்லது நிரந்தர வாழ்வாதாரதுக்கு வழி செய்ய தொண்டு நிருவனங்கள் முன்வர வேண்டும்.

இந்தக்கலைஞைனின்  படைப்புகளில் சில:

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com