மம்முட்டி வாராவாரம் கலக்குகிறார்.

மம்முட்டி வாராவாரம் கலக்குகிறார்.
Published on

உங்கள் குரல்

யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள். இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அவரவர்களுடைய இணையத் தளத்தைத்தான் நடத்திவருகிறார்கள். தமிழ் எழுத்தாளர்களில் முதலாவதாக 1990-களில் தொடங்கியவர்களில் நானும், மறைந்த ஞாநியும், சுஜாதாவும் உண்டு.
– இரா. முருகன், சென்னை

னது குருமார்கள் தனக்கு கற்றுக்கொடுத்த கலையையும் நல்ல விஷயங்களையும் இந்த தலைமுறைக்கு கற்றுத்தரவேண்டும் என்பதில் உறுதியாய் உள்ள முழுநேர கர்நாடக சங்கீத பாடகியான திருமதி.ஐஸ்வர்யா ஶ்ரீநிவாஸ் அவர்களின் கனவுகள், லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்.

ருந்துகளின் விலையேற்றம் கவலை தருகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பேசாதது கொடுமை. இந்த விலை உயர்வானது ஏழை எளிய மக்களையே அதிகம் பாதிக்கும். காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றால் அதிகம் பாதிகப்படுவது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் என்பதே உண்மை. அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்ற ஆதங்கத்தை தலையங்கத்தில் வெளிப்படுத்தியிருக்கும் 'கல்கி' யின் அக்கறையையும், வலியையும் உணர முடிகிறது.
– ஆ. மாடக்கண்ணு,பாப்பான்குளம்.

புறத்தில் இருந்து வருபவை இன்பம் தருவது போல் தந்து துன்பத்திற்குள்ளாக்கும் ஒரு மாயைதான். அகத்தை ஆராய்ந்து அறியும் இன்பம் கிடைத்தால் அதுவே பேரின்பம்.

மகாபெரியவர் அருளிய அகமும், புறமும் அற்புதம்.

'கோணங்கள்' கதை சூப்பர். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை வாழாமல் சேர்த்து வைத்து என்ன செய்வது என்பதை விளக்குகிறது, அருமை.
– கலைமதி, நாகர்கோவில்

'எல்லாம் இலவசம்' சிறுகதை படித்தேன். சுப்பிரமணியன் எனது மனதில் அழுத்தமாக பதிந்து விட்டார். குடும்பத்திற்காக ஓய்வு பெறும் வரை உழைத்தவர், வாழ்வின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து, ஊதியம் எதுவும் எதிர்பாராமல் தனது மனதுக்கு பிடித்தபடி சமூக சேவையில் தன்னை ஆத்மார்த்தமாக அர்பணித்துக்கொண்டது, கதையாக இருந்தாலும் வாழ்க்கை பாடம் ஆகும்.

இறைவன் மீது அளவற்ற பக்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம், நம்மை விட மூத்தவர்களை தெய்வமாக கருதினால் சாதி மதமெல்லாம் காணாமல் போகும் என்பதை எழுத்தாளர் விளக்குவது மனிதநேயத்தின் உச்சம். மனைவி சாவித்திரியும் கணவன் வழியில் பயணிப்பார் என்று கதை நிறைவு பெறுவது, திருப்தி.

– நெல்லை குரலோன் ,நெல்லை

  "கொஞ்சம் சிரிங்க பாஸ்" என்று வாசகர்கள் ஒவ்வொருவரும் எழுதிய ஜோக் ஒவ்வொன்றும் அருமை.  சுண்டல்காரனிடம் அடி வாங்கியதை கூட பெருமையாக பேசும் காதலனைப் பார்த்து வயிறு குலுங்க வயிறு வலிக்க சிரித்தேன்.
– ராதிகா, மதுரை

"ஒரு நிருபரின் டைரி" பக்கத்தில் வந்த "'யார் ராகேஷ்? யார் ரவீஷ்?" என்ற விண்வெளி பற்றிய செய்தியைப் படித்ததும் அந்த விண்வெளிக்கு சென்று வந்தது போல மகிழ்ச்சியாக இருந்தது.  இந்த செய்தியை படித்ததும் நானும் "பாரத மாதா கி ஜே" என்று  உற்சாகத்துடன் குரல் கொடுத்தேன். அருமையான தொடர்.

– உஷா முத்துராமன், மதுரை

"மயிலாடுதுறை ராஜசேகர்" அவர்கள் எழுதிய "எல்லாமே இலவசம்" என்ற சிறுகதை படித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்தது. "இன்று நாம் சிலருக்கு செய்யும் உதவி நாளை நம்மை காப்பாற்றும்" என்ற அருமையான கருத்தை தாங்கிய இந்த சிறுகதை படிக்கும்போது மனநிறைவாக இருந்தது. மிகவும் அருமையான சிறுகதை. உண்மைதான் "இன்று நாம் முற்பகல் செய்யின் பிற்பகல் நமக்கு நல்லதே விளையும்" என்ற கருத்தினை சொல்லி எல்லோரும் நாம் நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று உணர்த்திய சிறுகதை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

ம்முட்டி வாராவாரம் கலக்குகிறார். அவர்  தொடரை படித்தபின் அவர் மீது மதிப்பு கூடுகிறது.
– சந்திரசேகர், மதுரை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com