0,00 INR

No products in the cart.

வாகனம்  ரொம்ப “கனம்!”

 

– பாமா கோபாலன்

ழக்கமாய் காலேஜ் பெண்கள் எதில் வருவார்கள் சார்/ மேடம்/ மிஸ்?

இரு சக்கரம் என்றால் ஸ்கூட்டி பெப்? கார் என்றால் குறைந்த பட்ச விலையில் சொன்னால்கூட ‘நேநோ.

நோ.. நோ

நம் அத்வைத சிந்தாமணி அதிலெல்லாம் வரவில்லை. (பை த வே… அப்பா வழித் தாத்தா வைத்த பெயர் அத்வைத சிந்தாமணி என்பதால் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை என்பதால் இவளுக்கும் பிடிக்கவில்லை என்பதால் ‘அத்விதா’ என்று அவள் தலைமுடியைப் போலவே பெயரும் கட்)

‘அவர் கிளாஸ்’ உடல் அமைப்பு. காதுக்கருகில் வளைந்த பாப் கட். பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும்படி புள்ளி போல் தோடு.  நெற்றியில் புள்ளிகூடக் காணோம். தலையை மறைத்த ஹெல்மெட். இளைஞர்களை மனசுக்குள் விஸிலடிக்க வைக்கும் அழகு.

அட… வர்ணனையெல்லாம் இருக்கட்டுங்க. அவள் என்ன வாகனம் ஓட்டி வந்தாள்?’ என்று நீங்கள் பொறுமை இழக்கிறீர்கள்.

வெயிட்! சொல்லுவோம்ல…

அவள் வரும் காட்சியைப் பார்த்து…

பூ விற்ற பெண்மணி எழுந்த வேகத்தில் சினிமாக் காட்சி மாதிரி பூக்களெல்லாம் எகிறிப் பறந்து சிதறின.

ஐஸ்கிரீம் வண்டி அலறி விலகியதில் வண்டி தனியாகவும் விற்பவர் தனியாகவும் ஓடிய காட்சி விநோதமாய் இருந்தது.

நடைபாதை வாசிகள் ஃப்ரீஸ் ஷாட் மாதிரி நின்றார்கள். கல்லூரி மாணவர்கள் அவள் உட்கார்ந்து வரும் வடிவழகைப் பார்த்து ஃப்ரீஸ் ஆனார்கள்.

அப்படி எதில்தான் வந்தாள்?

போன வாரம் அவர்கள் வீட்டில் நடந்ததை நீங்கள் பார்த்தால்தான் உங்களுக்கு இன்றைய காட்சி புரியும்.

 போன வாரம்…

தங்கை விநித்ராவுடன் ஒரு சின்ன சாலஞ்ச்.

“அடுத்த வாரத்துக்குள்ள வித்தியாசமா எதையாவது செய்து காட்டுடீ பார்ப்போம்…” என்று ஒருவருக்கொருவர் பெட் கட்டிக் கொண்டார்கள். இது மாதிரி ஏதாவது அவ்வப்போது நடப்பது வழக்கம்தான். இந்த முறை தங்களின்   ஃபேவரைட் நகையை மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்பது பெட்.

இப்படித்தான் போன வருஷம் புதுவிதமான டிஷ் செய்யும் சாலஞ்ச் ஒன்று நிகழ்ந்தது. ‘தான்தான் ஜெயிக்க வேண்டும்’ என்ற வேகத்தில் வெண்டைக்காய், தர்பூசனி, சாட் மசாலா… கருப்பு உப்பு.. கோகோ பவுடர் காம்பினேஷனில் இவள் ஒன்று செய்ய, மல்லிகைப்பூ மேங்கோ ஜுஸ், நார்த்தங்கள் ஊறுகாய், ரஷிகலால் பாக்குத்தூள் சேர்த்து அவள் ஒன்று செய்ய… யூ ட்யூப் வெறியரான அவள் அப்பா அதை ரகசியமாகப் படம் பிடித்து வெளியிட… ஜெர்மானியப் பாட்டி ஒருவர் அதைப் பார்த்து, டிஷ்களைச் செய்து தன் ரெஸ்டாரென்ட்டில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்ததால் ஆயிரம் யூரோக்கள் அனுப்புவதாக மெயில் வந்தது.

அதற்கு முதலில் பத்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அக்கவுன்ட் நம்பர்  கொடுத்திருந்தார்கள். கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்.

அதனால் எந்த சேலஞ்ச் செய்யும்போதும் அப்பாவை மாடர்ன் தியேட்டர்ஸ் கதாநாயகன் மாதிரி நாற்காலியோடு கட்டிப்போட்ட பிறகுதான் பேச்சு வார்த்தையே ஆரம்பமாகும்.

“ரெண்டு பேரும் ஓயவே மாட்டீங்களாடீ?” என்று அம்மா இசைத்தாள்.

“நான் அரை மணி நேரம் தலைகீழாய் நிந்து காட்றேண்டீ” என்றாள் தங்கை.

“போரடிக்காதே. சுவர் ஜாயிட்ல தலைகாணி போட்டுத் தலைகீழா நிந்து ஏமாத்துவ… எனக்குத் தெரியாதா?” என்றாள்.

இரண்டு மூன்று நாட்கள் ஆளுக்கு ஒன்று சொல்லியும் எதுவும் நிறைவேறாமல் தலைகீழாய் நின்று கொண்டே இருந்தது.

“அப்பா ஸ்கூட்டிக்குப் பெட்ரோல் போடக் காசு வேணும்…” என்று கேட்டாள் அத்விதா.

இன்றைக்கு அவள் காலேஜூக்கு சீக்கிரம் போக வேண்டும். நேற்றைக்கே பிஸிக்ஸ் டிபார்ட்மென்ட் ஹெட் லினியா மேம் இடுப்பு சுளுக்கு காரணமாக லீவு போட்டுவிட்டது. (இரண்டு நாட்களாலத் துடித்துப் புலம்பியவாறு கிளாஸ் எடுத்து ஒரு வழியாக லீவு போட்டுவிட்டது) இன்றைக்கு மிஸ் பவித்ரமணி அந்த கிளாஸை எடுப்பாராம். வேறு வகுப்புகளைக் கடன் வாங்க முடியாதாம். காலையில் சீக்கிரம் வர வேண்டுமாம்.

அன்றைக்கென்று பார்த்து, அப்பாவுடைய மண்டைக்குள் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. நேற்றிலிருந்து ஆபீசில் ஒரு கணக்கு சீராகாமல் மண்டை காய்ந்து கொண்டிருந்தது.

இவள் “நேத்திக்கு ஒரு ஜோக் படிச்சேன். ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் குடுங்கன்னு ஒருத்தன் அரை லிட்டர் பாட்டில் வெச்சுக்கிட்டு நிக்கறான். அதன் மூடி மட்டும் போதும்னு பெட்ரோல் பங்க்காரர் சொல்றாரு…” என்று சிரிக்க… தங்கை சிரிக்க… அம்மா சிரிக்க… அந்த ரூமின் ஜன்னல்களும் திரைச் சீலைகளும் மிதியடிகளும் சிரித்த மாதிரி பிரமை ஏற்பட… எல்லாரும் தனது டேலி ஆகாத கணக்குக்கு கேலி செய்து சிரிப்பதாகச் தோன்றியிருக்க வேண்டும் அப்பாவுக்கு.

“பெட்ரோலுக்குக் காசு குடுத்து என் சொத்தே அழியுது…” என்று கத்தினார்.

“உக்கும்… உங்க அப்பா எத்தனை பங்களா வெச்சுட்டுப் போயிருக்காரு? அட நீங்கதான் என்ன சொத்து வாங்கியிருக்கீங்க?” என்று அம்மா தன் பாணியில் கிண்டல் செய்தாள். அவள் வார்த்தைகள் எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றியது. அப்பா மண்டைக்குள் டோர்னாடோவாய்ச் சுழன்றுகொண்டிருக்கும் பிரச்னை தெரியாது அம்மாவுக்கு.

“வண்டியை  வெச்சுப் பூட்டு. ஒரு எருமையை வாங்கி ஓட்டு” என்றார் புதுக் கவிதை மாதிரி.

அப்போதுதான் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்த வேணு அங்க்கிளுக்கு இது சுவாரஸ்யமான பிரச்னையாகத் தோன்றியிருக்க வேண்டும்.

வேணு அங்க்கிளை உங்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும். அம்மாவின் தம்பி. ஒரு நாளைக்கு ஒரு நாட்டில் இருப்பார். உண்மையாகவே பணக்காரர்.

நாற்பத்தைந்து வயசிலும் சுதந்திரம் கருதிக் கல்யாணம் செய்து;ககொள்ளவில்லை.  இங்கு வரும்போதெல்லாம் காஸ்ட்ட்ட்ட்ட்லி பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து தருவார்.  எனவே அவருடைய  அபத்த ஜோக்குகளைச் சகித்துக் கொள்வதோடு கை தட்டி வாய்விட்டுச் சிரித்து “வாவ் வாட் எ ஜோக். இன்னிக்கு என் கிளாசில் போய்ச் சொல்லுவேன்” என்பார்கள் இருவரும்.

“என்னாச்சு? பஃபல்லோ வாங்கணுமா?” என்று கேட்டார். அவரைப் பொருத்த வரையில் அது ஜோக்.

ஆனால் யாருடைய  போதாத காலமோ சகோதரீஸ் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களின் பார்வையின் பாஷை காதலர்களைப்போல் அவர்களுக்கு மட்டுமே புரியும்.

சாதுர்யம் பேசாதேடீ ஸ்டைலில் இடுப்பில் கை வைக்காத குறையாய் “நீயும் ஒரு மானஸ்த்தி என்றால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துடீ பார்ப்போம்” என்றது இவள் பார்வை.

“ஏன்… முடியாது என்றா நினைத்தாய். பார்… இப்போ பார்…” என்று ரஜினி ஸ்டைலில் பதில் சொன்னது அவள் பார்வை.

“வாவ்… வாங்க அங்க்கிள். கரெக்டாய்ச் சொன்னீங்க. பிளீஸ்.. ஒரு பஃபல்லோ வாங்கணுமே…” என்றாள் பெரியவள்

ஆமோதித்தாள் சின்னவள்.

ஏதோ வழக்கம்போல் ஜோக் என்று நினைத்த அப்பா “என்றைக்குமே பிறந்த வீட்டு மனிதர்கள் எதிரில்  விட்டுக்கொடுத்துப் பேசி மொத்து வாங்குவதில்லை” என்று பதினைந்து வருஷத்துக்கு முந்தைய சம்பவம் தந்த பாடத்தால் சைலன்ட்டாய் ஆபீஸ் கிளம்பிவிட்டார்.

ஊர்க்கோடியில் இருக்கும் பால் பண்ணைக்கு மாமாவின் ரோல்ஸ்ராய்ஸ் ஃபாந்தம் காரில் கிளம்பினார்கள்.

பண்ணையில் உடனடி விற்பனைக்கு ஐம்பதாயிரம் ரூபாயில் ஒன்றும் எண்பதாயிரத்தில் ஒன்றுமாக இரண்டு வகை எருமைகள் இருந்தன.

எண்பதாயிரம் விலையில் இருந்ததை வாங்க வேண்டும் என்று மாமா, நடராஜர் சிலை மாதிரி நின்றார்.

பதினெட்டு லிட்டர் பால் கறக்கும் என்றார் பண்ணை ஆள்.

“ஐயயயய… நான் பால் வியாபாரமா செய்யப்போறேன்? எவ்ளோ வேகத்தில் ஓடும்… எப்படி ஓட்டணும்னு சொல்லுங்க போதும்” என்றாள்.

பண்ணைக் காரருக்கு முதலில் இவளுடைய தேவையைப் புரிந்து கொள்ளவே அரை மணி நேரம் ஆயிற்று. இதுவரை யாரும் எருமை எந்த வேகத்தில் ஓடும் என்று கேட்டதில்லை. குத்துமதிப்பாய் எதையாவது சொல்ல வேண்டுமே என்று “மணிக்கு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தார்.

“ஓகே… அப்ப பத்து நிமிஷத்துக்குள்ள காலேஜ் போயிடலாம்.”

“எப்படி ஓட்ட வேண்டும்” என்ற அடுத்த கேள்விக்கும்  அவருக்கு பதில் தெரியவில்லை. கையில் கரன்சிகளை வைத்துக் கொண்டு காத்திருக்கும் அந்த அங்க்கிள் கவர்ச்சியாய்த் தெரிந்தார். கருப்பு எருமைக்கு பிளாக் மணி!

”சிம்ப்பிள்மா… இந்த வாலை முறுக்கினா ஸ்டார்ட் ஆவும். இரண்டு கொம்புகளைப் பிடிச்சுக்கிட்டு… லெப்ட்ல திருப்பினா ரைட்ல ஓடும். ரைட்ல திருப்பினா லெஃப்ட்ல ஓடும்” என்று வாய்க்கு வந்ததைச் சொன்னார்.

மூன்று லூஸ்கள் வந்திருக்கின்றன. எத்தனை கறக்க முடியுமோ கறந்துவிட வேண்டியதுதான்.

பேரம் எதுவும் இல்லாமல் மாட்டை வாங்கினார்கள். கூடவே ஒரு கோனாரையும் அழைத்து வந்தது மாமாவின் சமயோசிதம்.

இப்போது புரிந்திருக்குமே? யெஸ். அவள் எருமை மீதேறிக் கல்லூரிக்குப் போன காட்சியைத்தான் ஆரம்பத்தில் பார்த்தோம்.

யாரோ ஒரு இளைஞன் மாட்டின் முதுகில் குச்சியால் குத்த அது எட்டுக் கால் பாய்ச்சலில் தாறுமாறாய் ஓட….. பூக்காரி.. ஐஸ்காரர்.. ஃப்ரீஸ் ஷாட் எட்ஸெட்ரா..

“மை காட்.. ஸ்டார்ட் செய்யச் சொல்லித் தந்த பண்ணையாள் ஸ்டாப் செய்யச் சொல்லித் தரலையே?” அலறினாள் அத்விதா.

மரத்தையோ லாம்ப் போஸ்ட்டையோ பார்த்து மோதி நிற்கிற கார் மாதிரி  … தன் கணவரின் யமஹாவின் பின்னால் உட்கார்ந்து ஆஸ்பத்திரிக்குப் போய்க்கொண்டிருந்த பிஸிக்ஸ் டிபார்ட்மென்ட் ஹெட் லினியா மேம் மீது மோதியது எருமை. இவளை எப்போதுமே எருமை என்று திட்டுவார் அவர்.

ஏற்கெனவே இவளுக்கும் அவர்களுக்கும் இடையே முன் ஜென்மப்பகை நாலைந்து ஏற்பட்டு பிரின்சிபால் முன்பாக நிறுத்தி வைத்தது போதாதென்று இது வேறா? சஸ்பெண்ட் செய்துவிடுவாரே?

பப்பரப்பே… என்று அந்த அம்மாள் நடு ரோடில் விழுந்தார்.

ரௌத்ர பாவத்துடன் எழுந்தவர் முகத்தில் திடீர்ப் புன்னகை.

“வாவ்.. என் சுளுக்கு.. என் வலி இட்ஸ் கான். போயிந்தி.. போயே போச்..” என்றவாறு எழுந்து அனுமனை ஆலிங்கனம் செய்துகொண்ட ராமர் மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் அணைத்துக்கொண்டார்.

பிறகு…

  1. மனம் மகிழ்ந்த மேடம் இவள் வீட்டுக்கு வந்து நன்றி சொன்னதோடு ஆஸ்பத்திரிக்கு ஆயிரக் கணக்கில் தண்டம் அழாத மகிழ்ச்சியில் தட்டில் வைத்து ஆயிரம் ரூபாய் தந்தார்கள்.
  1. பஃபல்லோ என்ற சொல் அப்பாவின் மனசில் க்ளிக் ஏற்படுத்த நியூயார்க்கில் உள்ள பஃபல்லோவுக்கு மேனேஜிங் டைரக்டர்  போய்விட்டு வந்த டிக்கெட் செலவைச் சேர்க்காமல் கூட்டியது நினைவுக்கு வந்து அந்த பிரச்னை தீர்ந்தது.
  1. தினமும் பதினெட்டு லிட்டர் பாலைக் கறந்து மகிழ்வித்த கோனார் வீட்டுத் தேவை தவிர மிச்சத்தை ஸ்வீட் ஸ்டாலுக்கு விற்று திருட்டுக் கமிஷன் அடித்தது போக ஆயிரக் கணக்கான பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.
  1. பெட்ரோல் போடக் காசு புரண்டது.
  1. தன் ஒரு கிராம் செயினைக் கொடுத்தாள் வினி.

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...