0,00 INR

No products in the cart.

அனுபவத்தோடு சேர்ந்து ஆராய்ச்சியும் தேவைப்பட்டது

நேர்காணல் : ராகவ் குமார்

‘கார்கி’ டைரக்டர் கெளதம் ராமசந்திரன்

 

இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் மிக சிறந்த படம் என்று ரசிகர்களால் சமீபத்தில் வெளியான ‘கார்கி’ படம்  பேசப்படுகிறது. செய்திகளில் பரவலாக பேசப்படும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி கார்கி பேசுகிறது. படம் பெற்றுள்ள வரவேற்பினால்  உற்சாககத்துடன்  இருக்கும்  இப்படத்தின் டைரக்டர் கெளதம் ராமசந்திரனுடன் பேசியபோது.

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி சொல்லும் எண்ணம் வந்தது எப்படி?

நமது நாட்டில் நடக்கும் மோசமான விஷயங்களில் தலையாய விஷயம் இந்த குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை. நான் இப்போது பேசி கொண்டிருக்கும் போது கூட நமது இந்திய திருநாட்டில் ஏதேனும் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கதையை நானும், ஹரிகரன் என்பவரும் சேர்ந்து எழுதினோம்.  இந்த பிரச்னையில் நடுத்தரதிற்கும் கீழான ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டால் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்? நீதித்துறை, காவல்துறை என்ற கட்டமைப்பை இந்த குடும்பத்தில் இருந்து வரும் பெண் எப்படி எதிர்கொள்வாள் என்று யோசிக்க, யோசிக்க திரைக்கதை விரிந்தது.

கார்கி படத்தின் நீதிமன்ற காட்சிகளுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

நானேதான்.நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் சில ஆண்டுகளுக்க்கு வழக்கறிஞராக பணியாற்றினேன். அப்போது இது போன்ற வழக்குகளின் போக்கு எப்படி செல்லும் என்பதை நான் பார்த்த வழக்குகளின் அடிப்படையில் உருவாக்கினேன். வழக் கின் வாத பிரதிவாதங்கள் உண்மையும் என் கற்பனையும் சேர்ந்து  காட்சிகளை உருவாக்கினேன்.

 உங்கள் அனுபவம் மட்டுமே போதுமானதாக இருந்ததா?

அனுபவத்தோடு சேர்ந்து ஆராய்ச்சியும் தேவைப்பட்டது.இது போன்ற குற்றபின்னணி கொண்ட 1400 வழக்குகளின் கோப்புகளை படித்து ஆராய்ச்சி செய்தேன்.பல போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று ரைட்டரை சந்தித்து இது போன்ற வழக்குகளை எப்படி எழுதுகிறார்கள்பதிவு செய்கிறார்கள்  என்று தெரிந்து கொண்டு காட்சிகளை எழுதினேன்.

இந்த படம் இயல்பாகவே சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் அமைந்து விட்டதே…?

இதை அழகான நாடகம் போன்ற திரைக்கதையில் உருவாக்கு ம் அடிப்படையில் தான் உருவாக்கினேன். கதையின் போக்கும், டிரீட்மென்ட்டும் ஒரு திரில்லராக மாற்றி விட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் வழக்கறிஞரை வைத்து வாதாட சட்டம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வழக்கறிஞர்கள் சங்கம் தலையிட்டு குற்றம் சாட்டபட்டவர்க்கு ஆஜராக கூடாது என மிரட்டுவது போல காட்டி உள்ளீர்களே…?

ஒரு முன்னாள் வக்கீலாக இந்த கேள்விக்கு பதில் சொல்லவது சரியாக இருக்காது.இதற்கான பதிலை இப்போது வழக்கறிஞராக பணியாற்றும் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மலையாளம், தெலுங்கு என நடித்து வந்த நம்ம ஊர் பொண்ணு ‘மலர் டீச்சர் ‘சாய் பல்லவியை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?

கார்கி கதையை எழுதும் போது முதலில் எந்த ஹீரோயினையும் மனதில் வைத்து இந்த கதையை எழுதவில்லை. முன்னனி ஹீரோயின்கள் உட்பட பல ஹீரோயின்களிடம் இந்த கதையை சொன்னேன்.. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கதை சொன்ன ஹீரோயின்களை வைத்து படம் இயக்க முடியவில்லை. என் நண்பர் நிவின் பாலி மூலமாக மலையாளத்தில் நடித்து கொண்டிருந்த சாய் பல்லவியை அணுகினேன். சாய் பல்லவியிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. கதை கேட்கமாட்டார். மாறாக முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்டு வாங்கி படித்து விட்டு தான் ஒகே சொல்வார். என் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்து விட்டு உடனே கார்கியாக நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

நீதிபதியாக திருநங்கை சுதா தேர்வு ஏன்?

இயல்பாக ஆணின் குணத்தில் அமைந்துள்ள திமிரும், பெண்ணின் வலியும் தெரிந்த ஒரு நபர் திருநங்கை என்று நினைத்து,நீதிபதி ரோலுக்கு திருநங்கையை வைத்தேன். எதிர் காலத்தில் திருநங்கை நீதிபதியாக வந்தால் என் படத்தில் இதைமுன்பே சொல்லிவிட்டேன் என்று பெருமை பட்டு கொள்வேன்.    சுதா திருநங்கைகளின் சமுதாய  வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். இருக்கிறார்.

‘மங்கயராய்  பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்’ என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின்  வரிகளை விமர்சனம் செய்திருக்கிறீர்களே ?

நான் விமர்சனம் செய்யவில்லை. எந்த ஒரு கருத்தையும், வார்த்தையும் அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்தது போல பார்க்க வேண்டும் என்று சொல்லிருக்கிறேன்.

ஒரு வழக்கறிஞராக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

சட்டங்கள் போதுமான அளவு  இருக்கின்றன. இதற்கு தேவை விழிப்புணர்வுதான். விழிப்புணர்வுதான் சட்டங்களை சரியாக பயன்படுத்த உதவும்.

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...